June

யூன் 7

யூன் 7

என்னை உண்டாக்கினவரும்,இரவில் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டி கர்த்தர் (யோபு 35:11).

வெப்பமான தலையணையில்வசதியில்லாமல் படுத்துக்கொண்டு, பொழுது எப்போ விடியுமோவென்று காத்திருந்து, உறக்கமற்றஇரவுகளைக் கழித்திருக்கிறாயோ? உனது சிருஷ்டிகராகிய ஆண்டவரின்மீது உனது எண்ணங்களைத்தூய ஆவியானவர் ஒருமுகப்படுத்தவேண்டுமென்று வேண்டிக்கொள். அவர் உனது தனிமையான நேரங்களைக்கீதங்களால் நிரப்பவேண்டுமென வேண்டிக்கொள்.

உனது கலக்கமான இரவுகள்எவரையும் இழக்கக் கொடுத்ததால் ஏற்பட்டனவோ? அத்தகைய நேரங்களில், மறைந்துபோனஅன்பர் தமக்குத் தேவையாயிருந்தாரென்பதை ஆண்டவர் அடிக்கடி நமக்கு உறுதிப்படக் கூறுவதில்லை.அவர் ஆவலும், உற்சாகமும் மிகுந்த அந்த ஆத்துமாவை, விடுதலை பெற்ற, ஒளிமயமானதோர் பணியில்ஈடுபட்டுள்ள கண்காணாத கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நிற்கத் தெரிந்துகொண்டாரென்பதையும் ஆண்டவர் நமக்குக் கூறுவதில்லை. ஆனால் இவ்;வெண்ணங்கள் நம் மனதில்எழும்பும் நேரம். அதில் ஒரு கீதம் ஆரம்பமாகும் நேரமல்லவோ?

உனது கவர்ச்சியற்றஅவ்விரவு கற்பனையோ, நிஜமோ? அல்லது தோல்வியினாலோ, மனமடிவினாலோ ஏற்பட்டதோ?உன்னை எவரும் புரிந்து கொள்வதில்லை. உனது நண்பர்கள் உன்னைக் கடிந்துகொள்கிறார்கள்.ஆனால் உன்னை உண்டாக்கிய கர்த்தர் உனக்கருகில் வருகிறார். உனக்கு ஒரு கீதத்தைத் தருகிறார்.அது நம்பிக்கையின் கீதம். அவருடைய செயலின் கீதங்களோடிணைந்த, வல்லமையுடைய, ஆழ்ந்தகருத்துக்கைளயுடைய கீதம், உன்னை உண்டாக்கிய உன் கர்த்தர் உனக்குத் தரும் கீதத்தைப் பாடஆயத்தமாயிரு.

இரவு வந்திட்டதே, நாள்கழிந்திட்டதே என்று,

சோம்பி அமர்ந்துவாளாவிருப்போமோ?

இரவுக்கு முன் மாலை ஒளிமங்கினாலும்,

விண்மீன்கள் வானில்தோன்றுமே.

ஒரு கப்பலின் வலிமை புயல்அடிக்கும் பொழுதுதான் தெளிவாகும். அதேபோல்தான் சுவிசேஷத்தின் மேன்மை கிறிஸ்தவன்பெருஞ்சோதனைக்குட்படும்போதுதான் தெளிவாகும். ஆண்டவர் இரவில் கீதம் தருவார் என்னும் கூற்றைமெய்ப்படுத்த, அவர் முதலில் இரவை உண்டாக்க வேண்டும்.