June

யூன் 5

யூன் 5

உன் வேண்டுதல்ஆழமானதாக இருக்கட்டும் (ஏசா.7:11)

என் இதயமே, உன்வேண்டுதல் ஆழமாயிருக்கபட்டும்

உன் வேண்டுதலுக்குமேலாய் ஆண்டவர் செய்வார்-

உன் ஆண்டவரின்தெய்வீகம் எண்ணிக்கேள்.

அன்புமிகும் அவருடையகருவூலம் நின்றெடு.

அனைத்திற்கும் அவரைநம்பு, இன்று துவங்கி

அண்ணலவர் பாதையில்மகிழ்கண்டிடு.

ஆசீர்வாத மழையின் இரைச்சலை நாம் கேட்கும்வரைக்கும் ஜெபித்துக்கொண்டும், காத்துக் கொண்டும் இருக்கவேண்டும். பெரியகாரியங்களுக்காக நாம் ஏன் வேண்டிக்கொள்ளலாகாது என்பதற்கு எவ்வகைக் காரணங்களும்கிடையாது. விசுவாசத்துடன் நாம் வேண்டிக்கொண்டு, பொறுமையான விடாமுயற்சியுடனும்,மனோதிடனுடனும் காத்திருந்தால், நாம் வேண்டுகிற பெரிய ஆசீர்வாதங்களையும் பெறுவோம்.அவருக்காக நாம் காத்திருப்பதுடன், நம்மாலானவற்றையும் செய்தல் வேண்டும்.

காற்றை உருவாக்கி அதை வீசச் செய்ய நம்மால்முடியாது. ஆனால் அது வரும் நேரத்தில் நமது பாய்களை விரித்து நமது படகுகளைஓட்டிச்செல்லலாமல்லாவ? மின்சாரத்தை நம்மால் உருவாக்கமுடியாது. ஆனால் அதை எடுத்துச்செல்ல உதவும் கம்பிகளைக் கட்டலாமல்லா? ஆவியானவரைக் கட்டுப்படுத்தி நம்மால் அவரை இயங்கச்செய்யமுடியாது. ஆனால் நம் ஆண்டவர் நமக்குக் கூறியுள்ளவற்றை நாம் செய்து, தூய ஆவியானவர்நம்மில் செயலாற்றக்கூடியவாறு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளலாமல்லவா?

முற்காலத்தில் நடத்தப்பட்ட அதே அற்புத செயல்கள்இன்றும் செய்யப்படலாகாதா? எலியாவின் தேவன் எங்கே? எலியா அவரிடத்தில் விண்ணப்பம்செய்யவேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்.

பழைய, புதிய ஏற்பாட்டுக் காலங்களில் வாழ்ந்ததூயோர்கள்கூட, நாம் அவர்களை எட்டக்கூடிய வாழக்கை நிலையில் இருந்தவர்களே. அவர்கள்பிரயோகித்த ஆன்மீக சக்திகளும், அவர்களை வல்லமையுள்ள ஆன்மீக வீரர்களாக்கிய அவர்களுடையசெயல்களும் நமகக்குக் கிடைக்கக் கூடியவைகளே. அவர்கள் காட்டிய அதே விசுவாசம், நம்பிக்கை,அன்பு ஆகியவற்றை நாமும் உடையவர்களாயிருந்தால், அவர்கள் செய்த அதே அற்புதச் செயல்களைநாமும் செய்யக்கூடும். நமது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு ஜெபமும், எலியாவின் வாயிலிருந்துஜெபத்தினால் கொண்டுவரப்பட்ட மழையையும், நெருப்பையும் போன்ற தெய்வீக ஆற்றல்களைகொண்டுவரக்கூடிய ஆற்றல் உடையவர்களாயிருக்கும். எலியா செய்ததுபோல் முழு விசுவாசத்துடனும்விசுவாச நிச்சயத்துடனும் கூற வேண்டும்.