June

யூன் 4

யூன் 4

அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும்பலத்த கீழ்க்காற்றினால், சமுத்திரம் ஓதுங்கும்படி செய்து அதை வறண்டுபோகப்பண்ணினார் (யாத்.14:21).

இவ் வசனத்தின்மூலம் நாம்,ஆண்டவர் எவ்வாறு இருளில் செயலாற்றுகிறார் என்னும் ஆறுதலான செய்தியைக் காண்கிறோம்.ஆண்டவருடைய செயலாக்கம், இஸ்ரவேல் மக்கள் காலையில் எழுந்து தாங்கள் செங்கடலைக்கடந்து செல்ல முடியும் என்று கண்டபோதல்ல, இரவு முழுவதும் நடந்தது.

அதைப்போலவே உனதுவாழ்விலும் யாவும் இருளாயிருக்கையிலே தானே பெருஞ் செயலாக்கம் நடந்து கொண்டிருக்கும்.அதன் சிறு குறியைக்கூட நீ காணமுடியாது. ஆனால் ஆண்டவர் தம் செயலைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்.அன்று இரவிலும், மறு நாளிலுமே அவர் செயல்ப்பட்டது போலவே செயல்படுகிறார். மறுநாள்காலையில்தான் முந்திய இரவில் ஆண்டவர் செய்த வேலை என்னவென்று காட்டப்பட்டது. இதைவாசிக்கும் அன்பனே, நீ இருண்டு கொண்டிருக்கும் இடத்தை அடைந்து கொண்டிருக்கிறாயோ? நீகாணவேண்டுமென்று விசுவாசிக்கிறாய். அனால் உன்னால் காணக்கூடவில்லை. உனது வாழ்க்கையின்முன்னேற்றலத்தில் நிரந்தரமான வெற்றி கிடைக்கவில்லை. தொடர்ந்து வரும் பேச்சுத்தொடர்பு அதிலில்லை. யாவும் இருளாகவே தோன்றுகிறது.

ஆண்டவர் இராமுழுவதும்,கடலைப் பின்னடையச் செய்தார். வசனத்தில் இராமுழுவதும் என்று கூறப்பட்டுள்ளது. இராமுழுவதும்,ஒளிவருமட்டும் ஆண்டவர் வேலை செய்கிறார். ஒருவேளை நீ அதைக் காணமாட்டாய். ஆனால் உன்வாழ்வில் அந்த இரவு முழுவதிலும், நீ அவரை நம்பியிருக்கையில் ஆண்டவர் செயலாற்றுகிறார்.

அன்றிராமுழுவதும் அவர்செயலாற்றினார்

கடுங்காற்றின்மத்தியிலிருந்து,

அலைகள், கடல்வேகம்,சீற்றத்தின் மத்தியில்

கொடுமையாம் காலநிலையிலும்,

அன்றிராமுழுவதும்,காத்திருந்தனர் தேவபிள்ளைகள்,

கொடுந்துன்பத்தில் இதயமும்,பின்னர்

அடுத்துத் தொடர்ந்து வரும்எதிரியும்,

கொடுங்கடல் முன்னாலுமே.

அன்றிராமுழுவதும் காரிருள்மிஞ்சியதே,

அதுபோன்ற இருளவர்கள்கண்டதில்லை.

அன்பினாண்டவரின் இன்பப்பிரசன்னம்

அவர்களுக்கிருந்தது, பாதுகாத்ததே.

அன்றிராமுழுவதும் களைப்புத்தரும்காத்திருத்தல்,

கடந்தது, காலையும் விடிந்ததே,

அன்று கண்டனர், அண்டவர்செயலாற்றலை,

அக்கடல் கடக்க வழியொன்றுகண்டிட.

அன்றிராமுழுவதும், கவலையின்குழந்தாய்,

உன் கவலைதான் நீக்கிடாயோ?

ஆண்டவர், நள்ளிரவும்நண்பகல்போல

நாளும் உழைப்பார்உனைக்காத்திட.