June

யூன் 2

யூன் 2

(ஆபிரகாம்) தான்அநேக ஜனங்களுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடேவிசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை.

உறுதியான விசுவாசம்பெறுவதற்கு மிகச் சிறந்த வழி என்னவென்று, தம்மிடம் கேட்ட ஒரு கனவானுக்கு, ஒரு சமயம் ஜார்ஜ்முல்லர் கூறியதை நம்மால் மறக்கவே முடியாது.

விசுவாசத்தின் மூதாதையர்என்று கூறப்படக்கூடிய அவர், உறுதியான விசுவாசம்பெற ஒரே வழி பெருஞ் சோதனைகளைச்சகித்தலேயாகும். பெருஞ்சோதனைகளின் நேரத்தில் நான் உறுதியாய் நின்றே என்விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டேன் என்று கூறினார். இது மிகவும் மெய்யானது. பிறகாரியங்களனைத்தும் கைவிடும் நேரம்தான் நாம் நம்பி நிற்கவேண்டிய நேரம்.

அன்பானவரே, உனக்கு இப்பொழுதுவந்திருக்கும் வாய்ப்பின் மதிப்பை நீ அறிந்திருக்கவில்லை. பெருந் துன்பங்கள் வழியாகஇப்பொழுது நீ நடந்து சென்று கொண்டிருக்கிறாயானால், நீ வல்லமையான விசுவாசத்தின்மையத்திலே இப்பொழுது இருக்கிறாய். நீ மட்டும் அனுமதித்தால், முன்பு ஒருபோதும்அறிந்திராதபடி, அவர் கிருபாசனத்தைப் பற்றிக்கொள்ள உனக்குக் கற்றுத்தருவார்.

பயப்படாதே,விசுவாசமுள்ளவனாயிரு. நீ பயப்பட்டால் மேலே நோக்கிப் பார்த்து, நான் பயப்படுகிற நாளில்உம்மை நம்புவேன் என்று சொல். அப்படியானால் உனக்குத் துயரமாகிய பாடசாலை, விசுவாசத்தின்பாடசாலையாகிவிடும்.

பெரிய விசுவாசத்திற்குப்பெரிய துன்பங்கள் தேவை. துன்பங்கள் வழியாகத்தான் ஆண்டவருடைய பெரிய ஈவுகள் வருகின்றன.எந்த ஒரு நன்மையான கண்டுபிடிப்போ, சீர்திருத்தமோ ஆன்மீக உயிர்மீட்சியோ ஏற்பட்டுள்ளது.அவற்றின் ஆரம்பகாலத்தில், அவற்றிற்கு காரணமான ஆண், பெண் பாலகர்கள் அனுபவித்தபாடுகளினாலும், கண்ணீரினாலும், காத்திருத்தலினாலும்தான், ஆவிக்குரிய எழுப்புதல்ஏற்பட்டுள்ளது.

ஆண்டவருடைய ஆலயம்கட்டப்படவேண்டுமானால், தாவீதரசன் மிகுந்த பாடுகளை அனுபவிக்க வேண்டும். யூதப்பாரம்பரியக் கோட்பாடுகளினின்று ஆண்டவருடைய இரக்கத்தின் நற்பணிவிடுபட வேண்டுமானால்,பவுலடியாரின் வாழ்க்கை நீண்டதொரு துயரம் மிகும் வாழ்க்கையாதல் வேண்டும்.

துயரச் சிலுவையின்பாரத்தால் இளைத்திட்டோனே,

உயர்வான உன்நலனெல்லாம், அயர்வுதரும்,

நட்டத்தினாலேதான்ஆகவேண்டும்.

உன் ஒறுப்பின் பலன்,சீர்வாழ்வின் விலையாம்.

உயர் நறுமணத்திரவம்வடித்தெடுக்க

உயர் மலர்களைபல்லாயிரக்கணக்கில் நசுங்கிடணும்.

கடலில் வீசும் கனவலைகளின்நற்செயலால்,

கடலின் நீர்தூய்மையாகிவிடும், காற்றுகள்

கடலில் வீசாதிருப்பின்,கடல் கறை நிறைந்திடும்.

மத்தியான வெப்பத்தில்வானத்தின் அழகுக்காட்சி

நித்தமும் கண்டிடலாகாதே,புயலுக்குப்பின்

மொத்த மேகங்களிலே,வானவில் தோன்றுமே.