July

யூலை 15

யூலை 15

…நம்முடைய விசுவாசமேஉலகத்தை ஜெயிக்கும் ஜெயம் (1.யோ.5:4).

இனியகால நிலையதனில்,

இறைவனைநேசிப்பது எளிது

மலர்சொறி பள்ளத்தாக்கிலும்,

மன்னும்ஒளியுள்ள மாமலையிலும்,

குளிர்நீங்கிய கோடை தன்னில்

குளிர்மணந்தரும் மலர்களிடையில்

அவர்சித்தம் செய்திட

பெருமுயற்சி வேண்டுவதில்லை.

மழைபெய்து துன்புற்றிருக்கையில்,

மந்தாரமாய் மேகம் மூடுகையில்,

சாலைஇருண்டிருக்கையிலும்,

மாலைவிண்மீன்கள் மறைகையிலும்,

செந்நிறக்காலை மாறிவரினும்

சென்மை நெறி நின்றிடல் கடினம்,

அண்ணல்தம் வார்த்தைக்கே நாம்

அடிபணிதலும் கடினமாம்.

பறவைகள் மரங்களில் வந்து

பாடிடுங்காலம் நம்புவதெளிது.

அவைபாடும் பாடல் கேட்குது வீட்டில்

அவைதரும் கீதம் இதயம் சேருது

இசை இன்றுநீங்கிப் போய்விடில்,

இன்பநாள்கள் மாறிப்போiயில்,

இறையின்மீதுவிசுவாசம் நம்மில்

இருந்திடில்வெல்வோம் தவறாதே.

இயேசுநாதர் தாமே தருவார்,

குறைவெல்லாம் நிறைவாக்குவார்.

நம்பியே நாம் கேட்டிடுவோம்,

நாதனவர் வாக்கை நம்பியுமே,

இன்றுமென்றும்அவர் தலைவரே.

இன்னலிலும்அயர்வுதன்னிலும்,

போதுமேயவர் தாம் நமக்கே

போதும்நாளும் வரும் தேவைக்கும்.

உலகத்தை ஜெயிக்கும்விசுவாசம் என்பது கைவிடப்பட்டதுபோல் தோன்றினும் நம்பிக்கையில் தளராதிருப்பதும்.பெருவெளியில் கத்திக் கத்திக் கூப்பிட்டுப் பதில் ஏதும் வராதிருந்தபோதிலும் கூப்பிட்டுக்கொண்டேஇருப்பதும். எதைக் குறித்தும் கவலை கொள்ளாததுபோல உலக இயந்திரம் இயங்கிக்கொண்டு,எவ்வுயிரைக்குறித்தும் கவலை கொள்ளாது, எவ்வகை வேண்டுகோளுக்கும் இம்மியும் செவிசாயாது இயங்கியிருக்கும்வேளையில் ஆண்டவர் முழு அன்புடன் விழித்திருக்கிறார் என்று நம்புவதும். அவருடையகரங்களிலிருந்து வருவதையே பெற்றுக்கொள்வதும். மரணம் வந்தாலும் பரவாயில்லை விசுவாசம்மங்கிடலாகாது என்று உறுதியுடனிருப்பதுமே உலகத்தை ஜெயி க்கக்கூடிய விசுவாசமாகும்.