July

யூலை 14

யூலை 14

… பலியைக்கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள் (சங்.118:27).

தேவனுடைய பலிபீடம் உன்னைஅழைக்கவில்லையோ? நாம் நமது ஒப்படைப்பினின்று பின்வாங்கி ஓடிவிடாதபடி கயிறுகளால்பலிபீடத்தில் கட்டிவைக்கப்படவேண்டும் என்று வேண்டிக்கொள்ளவேண்டாமா? வாழ்க்கை அழகாகஒளிமயமாயிருக்கும்பொழுது நாம் சிலுவையை நாடுகிறோம். வாழ்க்கை மந்தாரமாகிவிடும்பொழுதுநாம் சிலுவையை விட்டு விலகி ஓட ஆசிக்கிறோம். ஆதலால் நாம் கட்டப்பட்டிருப்பது நலமாகும்.

தூய ஆவியானவரே, என்னைக் கட்டி வைக்கமாட்டீரோ? சிலுவையைப்பற்றிய ஆவலை எனக்குத்தரமாட்டீரா? அதை விட்டு என்றுநான் விலகாதபடி செய்யமாட்டீரோ? மீட்பு என்னும் சிவப்புக்கயிறாலும், அன்பு என்னும்பொற்கயிறாலும் வருகையின் நம்பிக்கை என்னும் வெள்ளிக்கயிறாலும் நான் சிலுவையை விட்டுப் பின்வாங்காதபடிக்கு, நான் என்ஆண்டவரின் நோவு, துயரத்தில் பங்குகொள்ளும் தாழ்மையானநிலையை விட்டு வேறு பங்கைத் தெரிந்து கொள்ளாதபடி என்னைக் கட்டமாட்டீரோ?

பலிபீடத்தின் கொம்புகள்உன்னை அழைக்கின்றன. நீ வருவாயா? கீழ்ப்படிதலும் தாழ்மையுமுள்ள ஆவியோடு நீவாழமாட்டாயோ? உன்னை முற்றுமாக ஆண்டவருக்குத் தந்திடமாட்டாயோ?

நீக்ரோ இனத்தைச் சேர்ந்தஒரு சகோதரனைப்பற்றிய கதை ஒன்று உண்டு. ஒரு பக்தி முகாமில் நடந்த கூட்டம் ஒன்றில் அவாதன்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க முயற்சித்தார். ஒவ்வொரு இரவிலும் அவர் தன்னைஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க முயச்சித்தார். ஒவ்வொரு இரவிலும் அவர் தன்னை ஆண்டவருக்குஒப்புக்கொடுக்க மேடைக்குச் செல்வார். ஒவ்வொரு இரவிலும் சாத்தான் வந்து அவரில்எவ்விதமாற்றமும் எற்படவில்லை என்று கூறுவான். அதனால் அவரும் தான்தூய்மை யாக்கப்படவில்லை என்று எண்ணிக்கொள்வார்.

இவ்வாறாக அவர் மீண்டும்ஈமீண்டும் சாத்தானால் தோற்கடிக்கப்பட்டார். இறுதியாக ஒரு நாள் இரவு அவர் ஒரு மரத்தாலானமுளையுடனும், கோடரியுடனும் கூட்டத்திற்குச் சென்றார். தன்னை ஒப்புக்கொடுத்திபின் அந்தமுளையைத் தான் முழங்காலிட்டிருந்த இடத்தில் அடித்துவைத்தார். கூட்டம் முடிந்தது.வழக்கம்போல் சாத்தான் வந்தான். மறுபடியும் யாவும் கேலிக்கூத்து என்று அவரை நம்பச்செய்ய முயன்றான்.

உடனே அவர் சாத்தானைத் தான்அடித்து வைத்திருந்த முளை இருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றார். ஐயா சாத்தானே, இம்முளையைப் பார்க்கிறீரே ஆண்டவர் என்னை ஏற்றுக்கொண்டாரென்பதற்கு இதுவே சாட்சி என்றார். அக்கணமேசாத்தான் அவரை விட்டோடிப் போனான். ஆண்டவர் தன்னை ஏற்றுக்கெனாண்டது பற்றி அவருக்குஐயம் ஏதுமில்லை.

அன்பானவரே, உன்னுடையஒப்புக்கொடுத்தலையும் பிரதிஷ்டையும்பற்றிய உறுதியை குறித்து ஐயமேற்படுகிறதோ? ஒரு முளையைஓரிடத்தில் அடித்து வை. அது உனக்கு ஆண்டவர் முன்னிலையில் சாட்சியாயிருக்கட்டும்.

இக் காரியம் குறித்து நீ ஒருமுடிவெடுத்து விட்டாயென்பதற்கு சாத்தானுக்கு அது சாட்சியாயிருக்கும்.

ஆசிவேண்டுமென்றலையும் உனக்கு

ஆசிகிட்டவில்லையோ?

ஆண்டவர் கூறும் வார்த்தையைக் கவனி,

எங்கோ ஓரிடம் தனித்துச் செல்.

இரட்சிப்புக்காகநீ ஏங்கி நின்றாயோ?

உன் ஜெபம் உனக்கதைத்தருமே.

இன்றேபோராட்டம் ஓய்ந்து நம்பி நில்.

எங்கோ ஓரிடம் தனித்துச் செல்.

உன்ஜெபத்துக்கான பதில்கள் வரத்

தாமதித்தால் கலங்குகிறாயோ?

உன்ஜெபத்தைத் துதியாக்கு, என்றும் துதி.

எங்கோ ஓரிடம் தனித்துச் செல்.

நீதுணிந்து உன்னை அவரிடமே

ஒப்படைத்திட வேண்டும்.

நீஅப்போதறிவாய், அவர் நிறைவை.

எங்கோ ஓரிடம் தனித்துச் செல்.