July

யூலை 11

யூலை 11

தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளைக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று (1.இராஜா.17:7).

கலங்காத மனதுடனும், உறுதியானஉள்ளத்துடனும் ஒவ்வொரு நாளும் எலியா வற்றிப்போய்க் கொண்டிருந்த அந்த ஆற்றைக்கவனித்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி அவருடைய விசுவாசம் தளர்ந்துவிடும்போலிருந்தது.ஆனாலும், சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் அவருக்கும், அவருடைய ஆண்டவருக்குமிடையே உள்ளஉறவில் குறுக்கிட அவர் இடம்கொடுக்கவில்லை. புகை நிறைந்த வானத்தினூடே சூரியனை நாம்மங்கலாகக் காணுவதுபோல், சந்தர்ப்பங்களுக்கும் தனக்குமிடையே ஆண்டவரை வைத்து அவிசுவாசம்எலியாவுக்குக் காட்டியது. ஆனால் விசுவாசமோ, சந்தர்ப்பங்களினூடாகவே ஆண்டவரைக் காணமுற்பட்டது. குறைந்துகொண்டே போன அந்த ஆற்றின் நீர் ஒருநாள் வெள்ளிக்கயிறுபோலாயிற்று.வெள்ளிக்கயிறு பின் பாறைகளினடியில் சிறு சிறு குட்டைகளாயிற்று, குட்டைகளும் வறண்டுபோயின. அவ்விடத்திலிருந்து பறவைகள் பறந்து போய்விட்டன. நாட்டு விலங்குகளும், காட்டுவிலங்குகளும், நீர் அருந்த அங்கு வரவில்லை. ஆற்று நீர் முற்றுமாக வறண்டு பேயர்விட்டது.அப்பொழுதுதான் அசையா நம்பிக்கையுள்ள எலியாவுக்கு எழுந்து சாறிபாத் ஊருக்குப் போ என்றகட்டளை வந்தது.

நம்மில் அநேகர் இதற்குவெகுகாலத்திற்கு முன்னமே திட்டமிடுவதில் கவலைகொண்டு நம்மை அலைக் கழித்திருப்போம்.ஆற்றின் நீர் வற்ற ஆரம்பித்த உடனே நமது கீதங்கள் நம்மை விட்டு ஒடிப்போயிருக்கும்.வாடிப் போகும் புல் தரையின்மீது இனி என்ன செய்வது என்ற யோசனையுடன் மேலும் கீழும்நடந்துகொண்டேயிருப்போம். ஒருவேளை ஆறு வறண்டு போவதற்கு முன்னரே நாம் வேறு திட்டங்களைத்தீட்டி, அவற்றை ஆண்டவர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டு நமது திட்டத்திலுள்ளபடிபுறப்பட்டுப் போயிருப்போம்.

ஆண்டவருடைய இரக்கங்கள்என்றுமுள்ளது. ஆகையால், அவர் நமது சிக்கல்களினின்று நம்மை விடுவிப்பார். நாம் மட்டிலும்அவருடைய திட்டங்களின் நிறைவேறுதலைக் காணக் காத்திருந்தோமானால், நாம் இத்தகைய வெளிவரமுடியாச் சிக்கல்களில் விழுந்திருக்கவேமாட்டோம். வெட்கம் நிறைந்தவர்களாகக்கண்ணீருடன் நமது செயல்களை நாம் திரும்பி நோக்க அவசியமே இருந்திருக்காது. காத்திரு,பொறுமையுடன் காத்திரு.