July

யூலை 9

யூலை 9

… உபத்திரவத்தின்குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன் (ஏசா.48:10).

நெருப்பின் வெப்பத்தைத்தணிக்கும் தன்மையான தூறலைப்போல இவ்வசனம் நம் வாழ்வில் வரவில்லையா? அக்கினி தழலைஒன்றுமற்றதாகச் செய்யும் கல்நார்போன்று அது இருக்கிறதல்லவா? துன்பங்கள் வரட்டும்.ஆண்டவர் என்னைத் தெரிந்துகொண்டார். ஏழ்மையே, நீ என் வாசலில் படுத்திருக்கலாம். ஆனால்அண்டவர் ஏற்கெனவே என்னோடு வீட்டினுள் இருக்கிறார். அவர் என்னைத் தெரிந்துகொண்டார்.நோய்களே, நீங்கள் என்னோடு இருக்கலாம். என் வாழ்வில் குறுக்கிடலாம். ஆனால் முன்னமேஎனக்கு ஒரு மருந்து உண்டு. ஆண்டவர் என்னைத் தெரிந்துகொண்டார் என்பதை நான் அறிவேன்.

கிறிஸ்தவ நண்பனே, அஞ்சாதே,இயேசு உன்னுடனிருக்கிறார். உனது பயங்கர சோதனைகள் யாவற்றிலும் அவருடைய முன்னிலை உனக்குஆறுதல் தரும். அதுவே உன் பாதுகாப்பு. தாம் தெரிந்துகொண்டவனை அவர் ஒருபொழுதும்கைவிடமாட்டார். உபத்திரவத்தின் குகையிலிருந்து அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்குஅவர் தரும் நிச்சயமான உறுதியான வாக்குத்தத்தம். பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்(ஏசா.41:10) என்பதே.

சூளையின் வெப்பம் என்மேல் அடிக்குது,

இறைவன்மூச்சு என்மேல் வீசுது.

சூழ்ந்த நெருப்பாலிதயம் அல்லல் படுது,

நெருப்பின் வெப்பத்தில் சுவாலிக்குது.

இருப்பினும்நான், ஆண்டவர் சித்தம் என்பேன்

நெருப்பின் சூட்டிலும் அமர்ந்திருப்பேன்.

என்மெது உள்ளம் அவரெடுத்தடிக்கிறார்,

அடிகல்லில் என் மேல் அடியடி அடித்து

என்னையவர் விரும்பும் உருவாக்குகிறார்.

அவர்சம்மட்டியடிகளினால்.

இருப்பினும் நான், ஆண்டவர் சித்தம் என்றேன்

இருந்திடுவேன்அமர்ந்தே அப்பொழுது

அவர்என் இருதயத்தை எடுத்தடித்தார்,

வெப்பமேறிப் பொறிகள் பறந்தன.

அவர்திரும்பவுமதை வெப்பமாக்கி

குளிராக்கி வெப்பமாக்குகிறார்.

இருப்பினும்நான், அவர் சித்தம் என்பேன்.

இருப்பேன்அமர்ந்தே அவர் வலிய கரத்தில்.

துன்பத்திற்கேன் முறுமுறுப்பு? துன்பம்

அதிகரித்துத்தான் போகுமோ!

என்முடிவு ஆண்டவர் என்னில் தம்

செயல்முடிந்ததும் வந்திடும்.

இறுதிவரைநம்பி, நான் சொல்வேன்

அவர்சித்தம்! அமர்ந்திருப்பேன்.

நம் கழுத்தில்கட்டிவிடப்பட்ட கல் போன்றது துன்பப்படுதல், ஆனால் அது முத்தெடுத்த கடலில் மூழ்குகையில்நான் நீரிலிருக்கக் கட்டிய கல்லே ஆகும்.