July

யூலை 8

யூலை 8

….கழுகுகளைப்போலச்செட்டைகளை அடித்து எழும்புவார்கள்…. (ஏசா.40:31).

ஆதியில் பறவைகளுக்கு எவ்வாறுசெட்டைகள் கிடைத்தன என்பது குறித்த ஒரு கதை உண்டு. முதலில் அவைகளுக்குச் செட்டைகள்கிடையாது. அதன் பின்னர் கடவுள் செட்டைகளை உண்டாக்கிப் பறவைகளின் முன் வைத்து, வந்து இப்பாரங்களைத்தூக்கிச் செல்லுங்கள் எனக் கட்டளையிட்டாராம்.

அப்பறவைகளுக்கு அழகிய இறகுகளும்,இனிய குரல்களும் இருந்தனவாம். அவைகளால் அழகாகப் பாட முடியும். அவைகளின் பல வர்ண இறகுகள்கதிரவனொளியில் மின்னின. கீழ்ப்படிந்து தங்கள் அலகுகளால் அப்பாரங்களை எடுத்துத்தங்கள் தோள்களின்மேல் அவற்றைத் தூக்கிச் செல்ல வைத்துக்கொண்டன.

சிறிது நேரத்திற்குஅப்பாரங்கள் கனமாகத் தோன்றின. ஆயினும் அவற்றை தூக்கிக்கொண்டு தங்கள் இதயங்களைமூடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தன. வெகு சீக்கிரத்தில் அவைகளை ஆகாயத்தில் தூக் கிச் செல்லப் பயன்பட்டன. அவைகளுடைய பாரங்களே அவைகளுடைய செட்டைகளாகிவிட்டன.

இது ஓர் உவமையே. நாம்தான்செட்டைகளில்லாதிருந்த பறவைகள். நமது கடமைகளும் பணிகளும்தான் நமது செட்டைகள். அவைதான்நம்மை மோட்சத்திற்கு நேராகப் பறந்து கொண்டு செல்பவை. நமது பாரங்களையும் கனத்தமூட்டைகளையும் கண்டு நடுங்குகிறோம். ஆனால் அவற்றைத் தூக்கி நமது இதயங்களோடுஅணைத்துக்கொள்ளும்பொழுது அவை செட்டைகளாகிவிடுகின்றன. நாம் எழும்பி ஆண்டவரை நோக்கி;பறக்கக்கூடியவர்களாகிறோம்.

உற்சாகத்துடனும், உள்ளத்துள்அன்புடனும் ஏற்றுக் கொள்ளப்படும் எந்தப் பாரமும் நமக்கு ஆசீர்வாதமாக மாறிவிடும். நமதுபணிகளெல்லாம் நமக்கு உதவியாள்களாக வேண்டுமென்றுதான் ஆண்டவர் விரும்புகிறார். நாம்அப்பாரங்களைத் தூக்க மறுத்தால், நமது முன்னேற்றத்திற்கு நாமே தடை போடுகிறோம்.

ஆண்டவர் தமது கருணையால், தமதுகரங்களினாலேயே நமது தோள்களில் கட்டி வைத்த அத்தனை பெரும்பாரங்களினாலேயும் நாம்ஆசீர்வதிக்கப்படுகிறோம்.