July

யூலை 7

யூலை 7

அவர்… என்னைத்துலக்கமான அம்பாக்கி…. (ஏசா.49:2).

வட அமெரிக்காவின்கலிபோர்னியா கடற்கரையில் ஒரு பகுதியிருக்கிறது. கூழாங்கற் கடற்கரை என்று அதற்குப் பெயர்.அங்கு நீண்ட கடல் அலைகள் பேரிரைச்சலுடன் கரையில் கிடக்கும் கூழாங்கற்களின்மீது மோதி,கிலுகிலுப்பை போன்று பெரிய ஓசையை ஏற்படுத்துகின்றன. அவைகளின் பிடியிலகப்பட்ட கற்கள்இங்குமங்கும் உருட்டியடிக்கப்பட்டு, ஒன்றோடொன்று உரசிக் கடினமான கடற்கரைப்பாறைகளால்தேய்க்கப்பட்டுப் பளபளப்பாக்கப்படுகின்றன. இரவும் பகலும் விடாது ஏற்படும் இவ்வுராய்தலினால்,அவை பளபளப்பான கவர்சி மிகும் கூழாங்கற்களாக மாறுகின்றன.

உலகமெங்குமிருந்து வரும்சுற்றுலாப்பயணிகள் ஏராளமான பேர் இவ்விடத்திற்கு வந்து அழகிய உருண்டை கூழாங்கற்களைச்சேகரிக்கின்றனர். அவற்றைக் கொண்டு சென்று அழகுப் பொருள்களாகத் தங்கள் இல்லங்களைஅழகு செய்யப் பயன்படுத்துகின்றனர். இக்கடற்கரைக்குச் சற்றப்பால் சென்றாலும் அங்கும் கூழாங்கற்கள்உண்டு. அங்கு அலைகள் இல்லை, மோதல் இல்லை. உராய்தல் இல்லை. அங்குள்ள கூழாங்கற்கள்அழகற்றவை. சுற்றுலாப் பயணிகள் அவற்றால் கவரப்படுவதுமில்லை. அவற்றை நாடுவதுமில்லை.

இவை ஏன் தேடப்படவில்லை? இவைகளுக்குயாதொரு துன்பமோ, தொல்லையோ அலைகளால் ஏற்பட்டதில்லை. உராய்வுகளும், தேய்வுகளுமில்லை.ஆதலால் இவைகளுக்கு மெருகு ஏற்படவில்லை. அழகும் இல்லை. மெருகு துன்பத்தின் மூலமேகிடைக்கிறது.

ஆண்டவருக்குத்தான் நாம்எவ்விடத்தில் வைக்கப்பட வேண்டுமென்று தெரியும். அதனால், அவரே நம்மை அவ்விடத்தில்வைக்கப்பட ஏற்றவர்களாக உருவாக்க அவரை நம்புவோம். நாம் என்னென்ன வேலைகள் செய்யவேண்டுமென அவர்தான் அறிவார். அவற்றிற்கேற்ற தகுதியுடையவர்களாக்க அவர் தரும் பயிற்சிகளைஏற்றுக் காரியத்தை அவரிடமே விட்டுவிடுவோம்.

நொறுக்கும் அடிகளே, நோவுதரும் குத்துக்களே,

என் இதயத்தைநீங்கள் நொறுக்குகின்றீர்கள்.

நொறுக்க நீங்கள் ஆண்டவரின் கருவிகள்தாம்,

அவரதுதெய்வீகச் செயலை ஆற்றிடுவீர்.

ஆண்டவரின் எல்லா இரத்தினங்களும்படிகங்களாகிவிட்ட கண்ணீர்தான்.