July

யூலை 6

யூலை 6

நாங்கள் செய்யவேண்டியதுஇன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையேநோக்கிக்கொண்டிருக்கிறது (2.நாளா.20:12).

ஆண்டவருடைய உடன்படிக்கைப்பெட்டியின்மீது தெரியாத்தனமாக தங்கள் கைகளை வைத்ததால் இஸ்ரவேல் மக்களில் ஒரு மனிதன்இறக்க நேரிட்டது. நல்ல நோக்கத்துடன் தான் பெட்டி விழுந்துவிடாதபடி தவிர்க்க அக்கரங்கள்வைக்கப்பட்டன. கரடுமுரடான பாதையில் மாடுகள் இழுத்து வந்த வண்டியில் அப்பெட்டிஆடிக்கொண்டிருந்தது. ஆனால் அக்கரங்கள் தகாத துணிவுடன் ஆண்டவருடைய கை வேலையைத் தொட்டன.ஆதலால் அவை செயலிழந்து, உயிரற்று விழுந்தன. விசுவாச வாழ்க்கையின் பெரும் பகுதி பலகாரியங்களில் ஈடுபடாது விட்டுவிடுதலாகும்.

ஆண்டவரிடத்தில் ஒருகாரியத்தை முற்றிலுமாக நம்பி விட்டுவிடவேண்டுமானால், அதை நாம் எவ்வகையிலும்தொடக்கூடாது. நாம் செய்வதைக்காட்டிலும் சிறப்பாக அவர் அதை நமக்காகக்காத்துக்கொள்வார். கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்கக் காத்திரு. காரியசித்தியுள்ளவன் மேலும், தீவினையைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே.

நமது காரியங்களனைத்தும்தவறாகப்போவதுபோலத் தோன்றலாம். ஆனால் நமக்குத் தெரிவதுபோலவே, ஆண்டவரும்அனைத்தையும் அறிவார். நாம் மெய்யாகவே அவரை நம்பி, அவர் சித்தப்படி அவருடைய நேரத்தில்,நம் காரியங்களை அவர் செய்ய இணங்கினோமென்றால், அவர் ஏற்ற தருணத்தில் எழுந்தருவார்.சில நேரங்களில் யாதும் செய்யாது வாளாவிருத்தலே மிகச் சிறப்பாகச் செயலாற்றலாகும்.படபடத்துக் காரியங்களைச் செய்வது போன்று காரியங்களைக் கெடுத்துவிடுவது வேறொன்றுமில்லை.ஏனெனில், அண்டவர் தாமே தமது சித்தத்தைச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

குழப்பமடைந்தோனாக நான்,

ஆண்டவர், சீர் செய்திடும் என்றேன்.

கும்மிருளும் உமக்கொளியாம்.

இரவும்உமக்குப்பகலாம்,

என்கரங்கள் எதையும் நான்

தொடஅஞ்சுகிறேன். ஏனெனில்,

என்கரம் எதையும் உடைத்திடும்.

உம்கரம் எதையென்றாலும்

மென்மையாய் உயிரூட்டி

உருவாக்கிக் காத்திடும்.

ஐயம்நிறைந்தோனாக நான்

ஆண்டவா தெளிவாக்கும் என்றேன்

ஐயாநான் செல்லும்பாதை

தெளிவானதெனக் காட்டிடும்.

எனக்கெது நலமாகுமென்று

எளியேனறியேனாதலால்,

எப்பக்கம் செல்வது, எவ்வாறெனவும்

நானறியேனாதலால்,

என்ஆண்டவா தெளிவாக எனக்கு

நீரேவழிகாட்டித் தெளிவாக்கும்.

வாழ்க்கையின்சிக்கல்களையெல்லாம் ஆண்டவரது கரங்களில் கொடுத்து அவைகளை அங்கேயே விட்டுவிடுதல்ஆறுதலாயிருக்கிறது.