July

யூலை 5

யூலை 5

நான் அவளுக்கு நயங்காட்டி,அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய்…. அவளுக்கு அவளுடைய திராட்சைரசத்தோட்டங்களையும்…. கொடுப்பேன். (ஓசி.2:14-15).

வனாந்தரத்தில்திராட்சைத்தோட்டங்கள் வெகுவிசித்திரமான இடமல்லவா? ஓர் ஆன்மாவுக்கு வேண்டியசெல்வங்கள் ஒரு வனாந்தரத்தில் கிடைக்கக்கூடுமா? வனாந்தரம் தனிமையான இடமாச்சுதே.அதனின்று வெளிவரக்கூட வழி காணமுடியாதே. ஆம், அப்படித்தான் தோன்றும். அது மட்டுமல்ல,ஆகோரின் பள்ளத்தாக்கு. அப் பெயர் கசப்பு என்று பொருள்படும். அது நம்பிக்கையின் வாயில்என்று இங்கு கூறப்பட்டுள்ளது. தன் இளவயதின் நாட்களிலும்தான் எகிப்து தேசத்திலிருந்துவந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.

பாலைவன அனுபவம் நமக்குத்தேவை என்பதை ஆண்டவர் அறிவார். மனதில் நிலைத்து நிற்கக்கூடியவற்றை எவ்வாறு எங்குதருவதென்று அவர் அறிவார். ஆன்மா சிலை வணக்கத்தில் ஈடுபட்டது, புரட்சி செய்தது. ஆண்டவரைமறந்தது. தனது முழுச்சித்தத்துடனும் நான் என் நேசர்களைப் பின் தொடர்வேன் என்றாள்ஆன்மாவாகிய அப்பெண். ஆனால் அவளால் அவர்களை அடைய முடியவில்லை. அவள் நம்பிக்கையற்றுக்கைவிடப்பட்ட நிலையில் ஆண்டவர் நான் அவளுக்கு நயங்காட்டுவேன். வனாந்தரத்துக்கு அழைத்துவருவேன், அவளுடன் ஆறுதலாய்ப் பேசுவேன் என்கிறார். நமது ஆண்டவர் எத்தனை அன்புள்ளவர்.

ஆண்டவர் எங்கு தமதுநீர்நிலைகளை மறைத்து வைத்திருக்கிறார் என்று நாம் அறியோம். ஒரு பாறையைக் காண்கிறோம்.அது ஒரு நீருற்று இருக்கும் இடம் என்று நம்மால் ஊகிக்கக்கூட முடியவில்லை. கூழாங்கற்கள்நிறைந்துள்ள ஓரிடத்தைக் காணும்பொழுது அதிலிருந்து ஒரு நீரூற்றுப் புறப்படலாமென்று நாம்நினைப்பதில்லை. கடினமான ஓர் இடத்திற்கு ஆண்டவர் என்னை அழைத்துச் செல்கிறார். அங்குசென்றபின்தான் நித்திய நீருற்றுகளின் இல்லத்திற்கே நான் வந்து சேர்ந்திருப்பதைஅறிகிறேன்.