July

யூலை 4

யூலை 4

குறித்த காலத்திற்குத்தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது…. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அதுநிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆப.2:3).

எதிர்பார்ப்பின் மூலை, என்றநூலில் ஆதாம்ஸ்லோமேன் என்பவர் ஆண்டவரின் கருவூல அறைக்குள் அழைத்துச்செல்லப்பட்டதாக ஒரு கற்பனை கூறப்பட்டுள்ளது. அது கவர்ச்சி மிகும் ஒரு சிறு நூல்.

அங்கு அவர்கள் கண்டஅதிசயங்களில் தாமதமாகும் ஆசீர்வாதங்களின் காரியாலயம் என்ற இடத்தைக் கண்டார். அங்குஆண்டவர் ஜெபங்களுக்குத் தடைகளாக வைக்கப்பட்டிருந்த சில காரியங்களைக் கண்டார். அவைஜெபங்களுக்கு அளிக்கப்பட இருந்த விடைகள். ஆனால் அவை கொடுக்கப்படவேண்டிய தகுந்தகாலம்வரை அங்கு வைக்கப்பட்டிருந்தன.

ஓய்வூதியம் பெறும் சிலருக்குதாமதமாகுதல் மறுக்கப்படுவதல்ல என்பதைத் தெரிந்துகொள்ள நெடுங்காலமாகும். தாமதமாகும்ஆசீர்வாதங்களின் இலாகாவில் அன்பு, ஞானம் நிறைந்த பல இரகசியங்கள் உண்டு. அவற்றைக்கனவிலும் கூடக் கண்டறிய முடியாது. ஆண்டவர் தமது ஆசீர்வதங்களாகிய கனிகளைப் பழுத்தபழங்கழாகத் தர இருக்கையில், மனிதர் அவைகளைக் காய்களாகவே பறித்துக்கொள்ளவிரும்புவார்கள். ஏசாயா 30:18ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படிகர்த்தர் காத்திருப்பார். கடினமான இடங்களில் அவர் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.அளவுக்கு மிஞ்சி சோதனை ஒன்றைக்கூட நமக்கு வர அவர் விடமாட்டார். அடிவரை நீரை அருந்த அவர்அனுமதிப்பார். அதன்பின் மகிமையுடன் உன் உதவிக்கு வந்து சேர்ந்திடுவார்.

அவருடைய அன்பின்மீதுஐயங்கொண்டு அவரைத் துக்கப்படுத்தாதே. உனக்கு வந்துகொண்டிருக்கும் விடுதலைக்காக இப்பொழுதேநீ அவரைப்போற்றித் துதி. உன்னுடைய விசுவாசத்தைச் சோதித்தறிந்து இச்சோதனையானதாமதம், உனக்கு ஏராளமான வெகுமதிகளைத் தரும்.

அற்பவிசுவாசமுள்ள மானிடனே,

அண்டவர் உன்னைக் வைகவிடவில்லை.

அனைத்தும் இருளும், மந்தாரமுமாயினும்,

சீக்கிரம் நீ அதை மறந்திடுகிறாய்.

அவருன்னை அழைத்ததை மறந்தாய்

அவருன்பாதை செவ்வை செய்தார்.

அவருன்மந்தார மேகங்களில் ஒளிந்தார்.

உன் இரவைப்பகலாக்கினார்.

இம்மட்டும்உன்னை நடத்தின கர்த்தர்

இப்போதுன்னைக்கைவிடுவாரோ?

இதுஎவ்வளவாய் அவரன்பின் இதயத்தை,

உன்கவலை காணத் துக்கிக்கும்.

இனிஎப்போதும் ஐயங்கொள்ளாதே,

அவரிடம் உன் வழிகளை ஒப்புவி,

இனியும்என்றமவர் அவ்வாறே

இருப்பதாலவரைநம்பியேயிரு.