July

யூலை 3

யூலை 3

உழுகிறவன்விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ?… (ஏசா.28:24)

கோடைகாலத்தில் ஒரு நாள்ஓர் அழகிய பசும்புல் தரையைக் கடந்து சென்றேன். அதிலுள்ள புல்கள் அடர்த்தியாகவும்மெத்தென்றும் கீழ்நாட்டுப் பச்சைக் கப்பளம்போல் முளைத்திருந்தன. அதன் மூலை யில்ஓங்கி வளர்ந்த காட்டு மரமொன்றிருந்தது. அது எண்ணற்ற காட்டுப்பறவைகளுக்கு ஒரு காப்பிடமாகஅமைந்திருந்தது. அவைகள் எழும்பிய இனிய இசை காற்றில் மிதந்து வந்தது. அமைதியின்ஓவியம்போல் இரு பசுக்கள் அம்மரத்தினடியில் படுத்திருந்தன. சாலை ஓரத்தில் மஞ்சள்நிறமலர்களும், செந்நீலமலர்களும் பூத்து அக்காட்சிக்கு இன்னும் அதிக அழகூட்டின.

அப்புல்வெளியின் அழகில் ஈடுபட்டுநான் அங்கேயே நெடுநேரம் நின்றிருந்தேன். அக்காட்சியில் நான் இலயித்து; போனேன்.அப்பசும்புல் தரையைப்போன்று ஆண்டவர் வேறு ஓர் இடத்தையும் உண்டாக்கியிருக்கமாட்டார்என்றுகூட எண்ணலாயினேன்.

மறுநாள் நான் அவ்விடத்தைக்கடந்து செல்ல நேர்ந்தது. ஐயோ! என் சொல்வேன். நான் கண்ட கோரக்காட்சியை! அனைத்தும்பாழாகப் போயிருந்தது. கேடு செய்வோன் தன் கைவரிசையை அப்புல் தரையில் காட்டிவிட்டான்.ஒரு பெரிய ஏர் உழுசால் நின்றுகொண்டிருந்தது. அதற்குப் பின்னாக உழவன் நின்றான். அழுகியபசும்புல் தரைக்குப் பதிலாக எங்கும் மண்கட்டிகளே காணப்பட்டன. மஞ்சள், செந்நீலமலர்கள்அங்கு காணப்படவில்லை. எவ்வாறுதான் இவ்வழகிய இடத்தைச் சிதைக்க மனம் வந்ததோ எனஎண்ணினேன்.

காணப்படாக் கரங்களால் என்கண்கள் திறக்கப்பட்டன. மன கண்களில் காட்சி ஒன்று தோன்றியது. அவ்விடத்தில்தானியங்கள் மிகுந்த வயலொன்றைக் கண்டேன். மணிகள் நிறைந்த கனத்த தானியக் கதிர்கள்கதிரவனொளியில் அலைகள்போன்று அசைந்தாடிக்கொண்டிருந்தன. காற்றில் மிதந்து வந்த கீதம்இப்பொழுது கதிர்களில் பட்டு இன்பகீதமாக வந்தது. இக்காட்சி முந்திய காட்சியைவிடசிறந்ததாயிருந்தது.

மாபெரும் விவசாயியாகியஆண்டவர் அடிக்கடி வந்து, நமது ஆன்மாவாகிய நிலத்தை உழுது, நாம் அழகானது, சிறந்தது என்றுஎண்ணியிருந்த அனைத்தையும் மேலது கீழ், கீழது மேலாக்கி, நம்மிலிருந்து மிகச் சிறந்தவிளைச்சலைத் தரச் செய்தாரெனில் எத்தனை நலமாயிருக்கும்.

எனது ஆன்மாவில் ஆழமானசால்களை உண்டாக்கும் ஏர்களைக் குறித்து நான் ஏன் துணுக்குறவேண்டும்? அவர் சோம்பேறியானவிவசாயியல்ல. அவருடய நோக்கம் ஒரு சிறந்த அறுவடையே.