July

யூலை 2

யூலை 2

நீ அவைகளில்நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை (நீதி.4:12).

விசுவாசம் என்னும் பாலத்தைவிசுவாசம் நிறைந்த பயணிகளின் கால்களுக்கடியில் மட்டுமே ஆண்டவர் அமைக்கிறார். தேவைக்குமிஞ்சிய அளவில் பாலத்தை அவர் கட்டுவாரானால், அது விசுவாசப்பாலமாயிராது. காணப்படுகிறவைவிசுவாசத்தினால் ஆனவையல்ல.

மேல் நாடுகளில் சிலநாட்டுப்புறச் சாலைகளில் தாமாகவே திறக்கும் வாசல்கள் உண்டு. ஒரு பயணி அதைநெருங்கும்பொழுது அது அசையாது உறுதியகா நிற்கும். அதை அப்பயணி நெருங்காவிடில், அதுதிறக்காது. ஆனால் அதை நோக்கித் தன் வண்டியைச் செலுத்துவானாகில், சாலையிலுள்ள விசையைவண்டிச்சக்கரங்கள் அழுத்தின உடனே கதவு திறந்து அவ்வண்டியை உடனே உள்ளே அனுமதிக்கும்.மூடியிருக்கும் கதவுகளை நோக்கி நாம் முன்னே செல்ல வேண்டும். இல்லாவிடில் கதவுகள்மூடப்பட்டேதான் இருக்கும். திறக்கப்படவேமாட்டா.

கடமையின் பாதையில் வரும்எந்த இடையூறும் நாம் கடக்க எடுத்துக்கொள்ளவேண்டிய முறையை இது விளக்குகிறது.சாலைவாயிலோ, மலையோ தடை எது வாயினும் , இயேசுவின் பிள்ளை செய்யவேண்டியதெல்லாம்,அதை நோக்கி நெருங்கிச் செல்வதே. அது ஆறாக இருந்தால், உன் கால்கள் நீரில் பட்டவுடனேஆறு வறண்டுபோகும். அது சாலைக் கதவாயிருப்பின் திறந்து வழிவிடும். நீ நெருங்கிச்செல்லவேண்டும். அது மலையாயிருந்தால், அது இருக்குமிடத்தை நோக்கி அச்சமின்றிவரும்பொழுது அது தூக்கி கடலில் எறியப்பட்டுவிடும்.

இப்பொழுது உன்கடமைப்பாதையின் குறுக்கே ஒரு பெரிய தடை ஏற்பட்டிருக்கிறதா? கர்த்தருடைய நாமத்திலேஅஞ்சாது அதை நோக்கிச் செல். அது அங்கிராது மறைந்து போகும்.

நாம் அழுது புலம்புவது வீண்எழுந்து தொடர்ந்து முன்னேறிச் செல் என்று சர்வ வல்லவரின் குரல் கூறுகிறது. இருளில் நாம்நமது பாதையைக் காணமுடியாதபோதும் தைரியமாகக் காலடியெடுத்து வைத்து நடந்து முன்னேறுவோம்.காட்டுப்பாதையைப்போல் நமது பாதை நாம் முன்னேறிச் செல்லச் செல்லத் தான் தெளிவாகும்.அடிதூரம்தான் பாதை தெளிவாயிருக்கும். ஆனால் முன் செல்லச் செல்ல பாதைமறைந்திருந்தற்கப்பால் பாதை மேலும் தொடர்ந்து செல்வதை நாம் காணக்கூடும். ஆதலால்,தொடர்ந்து விடாது முன்னேறு. நமக்கும் தேவைப்பட்டால், இஸ்ரவேலரை வழிநடத்தினமேகஸ்தம்பமும் தீபஸ்தம்பமும் காணப்படும். நமக்குத்தேவையான ஊண் உடை நண்பர்களையும் நாம்காணக்கூடும். ருத்தர் போர்டு வேடிக்கையாகக் கூறுவதுபோல் எது எவ்வாறாயினும், மிக மோசமாகக்களைத்துப்போன பயணிக்கு வீட்டில் மகிழ் நிறைந்த இனிய வரவேற்பு கிடைக்கும்.

உயர்ந்த மலைவெளியிற் செல்கிறேன்,

அங்கெப்போதும் ஒளியுண்டு,

அயர்வுதரும் மலைகளில் இரவிலேறினும்

அழகியவிண்மீன்கள் கண்டிடுவேன்.

என் இருட்டறையில்நீ தேடினால்,

என்னைநீ காண மாட்டாய்.

என்வாயிலில் இவ்வாசகம் காண்பாய்

அவன்உயர் மலை வழி செல்கிறான்.