January

ஐனவரி 31

அவர் சமாதானத்தை அருளுகிறார் (யோபு 34:30).

புயலினூடே அமைதல். அவரோடு இன்னும் ஏரியில் படகைச் செலுத்துகிறோம். கரையைவிட்டு வெகுதூரம் சென்று ஜலத்தின் மத்தியையடையும்போது, நடுநிசியில் சடுதியில் புயல் உண்டாகிறது. பூலோகமும், பாதாளமும் நமக்கு எதிர்த்து நிற்பதுபோல் தோன்றுகிறது. அலைகள் நம்மை ஆழத்திவிடும் என்று பயப்படுகிறோம். அப்போது அவர் தமது நித்திரையைவிட்டு எழுப்பிக் காற்றையும், கடலையும் அதட்டுகிறார். அவர் கரம் கொந்தளிப்பை அமரச்செய்கிறது.

அமர்ந்திரு என்ற இயேசுவின் சப்தம் காற்றின் இரைச்சலுக்கு குமுறும் அலைகளுக்குமேல் கேட்கிறது. உன் காதுக்கு அது கேட்கவில்லையா? உடனே அங்கு பெரிய அமைதல் உண்டாகிறது. அவர் சமாதானம் அருளுகிறார். உள்ளத்தில் ஆறுதலற்றிருக்கும் வேளையில் சமாதானம் உண்டாகிறது. இந்தச் சமாதானத்தை அவர் சில சமயங்களில் பிடுங்கிக் கொள்கிறார். ஏனென்றால் நாம் அதைக் குறித்துப் பெருமிதம் கொண்டு நம்முடைய சந்தோஷங்களையும், உன்னத ஆனந்தத்தையும் நமக்கு இயற்கையாய்க் கிடைப்பதுபோல் ஏற்றுக்கொள்கிறோம். ஆகையால் அன்பு அன்பின் நிமித்தம் அச்சந்தோஷங்களதை; திரும்ப எடுத்துக்கொள்கிறது. தம்மையும் இதர சந்தோஷங்களையும் வேறுபடுத்திக் காண்பிக்கிறது. அருகில் வந்து தமது பிரசன்னத்தின் நிச்சயத்தை நமக்கு இரகசியமாய்ச் சொல்லுகிறார். இவ்விதமாக முடிவில்லா அமைதி நம் மனதிலும் இருதயத்திலும் உண்டாகிறது.

மூத்த சகோதரன் நமக்கு அமைதியைத் தருகிறார்
அவர் நமக்காக வீடின்றி அலைந்து திரிந்தவர்.
நமது துன்ப பாரத்தை அவரது கரங்கள் தாங்கின
துன்பங்களினூடே நன்மை காணுமாறு
இவற்றைச் செய்தார்.
எண்ணற்ற உம் நன்மைகளும் ஆறுதல்களும் உண்டு
ஆனால் நான் கேட்பது இது ஒன்றே.
அல்லலுறும் வேளையிலெல்லாம்
உமது குரலைக் கேட்கவேண்டும்.
நீர் அளிக்கும் அமைதியில் ஆறுதல் பெறவேண்டும்.
உம்மில் அசைவற்ற விசுவாசம் வைப்பதால்
உலகக் கவலைகள் என்னை அசைக்கமாட்டா
உமது கரத்தைப்பற்றி சென்றால்
துயரம் என்னை அசைக்காது
வழியில் இருள் நிறைந்தாலும் அஞ்சமாட்டேன்.
பொழுது புலரும்போது
இருளினி;ன்றும் விடுதலையடைவேன்
காலையின் அழகைக்காணும் வரையில்
பொறுமையாயிருப்பேன்
நீரே எனக்கு அமைதி நல்கும்போழுது
வேறு யார் என்னைக் கலக்கக் கூடும்.