January

ஐனவரி 6

நீதண்ணீர்களைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை (ஏசா.43:2).

தேவன் நாம் கடப்பதற்கு முன்னே பாதைகளைத் திறந்து வைக்கிறதில்லை. நமக்கு உதவிதேவையாயிருப்பதற்கு முன்னே உதவி செய்வேன் என்று வாக்களிக்கிறதில்லை. நமக்கு உதவிதேவையாயிருப்பதற்கு முன்னே உதவி செய்வேன் என்று வாக்களிக்கிறதில்லை. நம்முடையவழிகளிலுள்ள தடைகளையும் நாம் சேருமுன்னே அவைகளை நீக்குவதில்லை. ஆனால் அவசியமானபோதுநமக்கு ஆதரவளிக்கும் பொருட்டு அவர் கைகளை நீட்டுகிறார்.

அநேகர் இதை மறந்து தங்களுக்குஎதிர்காலத்தில் வரக்கூடும் என்று நினைக்கிற கஷ்டங்களுக்காக எப்பொழுதும் கவலைகொள்ளுகிறார்கள். அவர்கள் தேவன் தங்களுடைய பாதையை அநேக மைல்களுக்கு முன்னதாகவேதெளிவாகவும், விளக்கமாகவும் காட்டுவார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கர்த்தரோபடிப்படியாய்த் தேவைக்குத் தக்கவாறு உன்னை நடத்துவேன் என்று வாக்களித்திருக்கிறார். நீதண்ணீர்களோடேயும் வெள்ளங்களோடேயும் செல்லவேண்டும். அநேகர் சாவிற்கு அஞ்சுகிறார்கள்.தங்களுக்குச் சாகும் தைரியம் இல்லையென்று புலம்புகிறார்கள். மரணத்துக்கு இன்னும் அதிககாலமிருக்கிறது. கடமைகளிமையே உடல் நலத்தோடு வாழ்கிறார்கள். அப்பொழுது சாவிற்குரியகிருபை அவர்களுக்கு கிட்டாது. அச்சமயத்தில் அது எதற்கு? வாழ்க்கையில் ஈடுபட்டுக்கடமைகளைச் சரிவரச்செய்ய வாழ்விற்குரிய கிருபையல்லவா வேண்டும். மரணம் நெருங்கும் சமயம்அதற்குரிய கிருபையும் கிட்டும்.

நாம் தண்ணீர் பெருக்கைக்கடக்கும்பொழுது

அது ஆழமாகவும் குளிராகவும் இருக்கலாம்

ஆனால் யேகோவா நமக்குஅடைக்கலமாயிருப்பார்

அவர் வாக்கு நமக்குஊன்றுகோலாகும்.

என்றும்மாறாதவரும் உண்மையுள்ளவருமாகிய

கடவுளேநமக்கு இவ்வாறு வாக்களிக்கிறார்.

நீதண்ணீர்ப் பெருக்கின் அருகில் வந்தால்

அதில்அமிழ்ந்து போகாமல்

அதைத்தாண்டிச் செல்வாய் என்றார்.

துக்கம்கஷ்டம் மிகுந்த மனக்கலக்கம் கடுந்துன்பம்

இவையெல்லாம்கடல்போல் வந்தாலும்,

அலைஅலையாகச் சோதனைகள்

இதயத்தையும்உள்ளத்தையும் தாக்கினாலும்

அவையெல்லாம் நம்மை மேற்கொள்ள மாட்டா

தேவனினன் வாக்கு உண்மையானது

வெள்ளத்தையும் அலைகளையுந் தாண்டி

அவாநம்மை அழைத்துச் செல்வார்

அழிக்கக்கூடிய பேய் அலைகள் நம்மைத் தாக்கினாலும்,

அவிசுவாசம் நம்மைக் கீழ்நோக்கி இழுத்தாலும்

அலைநம்மைத் தாழ்த்த மாட்டா

துக்கஆழியில் அமிழ்த்தவும் மாட்டா.

கர்த்தருடைய வார்த்தையே நம்மைத் தாங்கி நிற்கும்.

உண்மையுள்ள அவரையே போற்றுவோம்

நாம்தண்ணீரில் அழிந்துபோக மாட்டோம்.

அதைத்தாண்டிச் செல்வோம்

என்றேஅவர் சொல்லுகிறார்.