January

ஐனவரி 5

கர்த்தாவே, உம்மைத் தவிர எங்களுக்குச் சகாயம் செய்வார் ஒருவரும் இல்லை (2.நாளா.14:11)

பொறுப்பு யாவும் அவரைச் சேர்ந்ததே என்று கடவுளுக்கு ஞாபகமூட்டுங்கள். உம்மைத் தவிரஎங்களுக்குச் சகாயம் செய்வார் ஒருவரும் இல்லை. ஆசாவிற்கு விரோதமாய் வந்தவர்கள் அநேகர்.பத்து இலட்சம்பேர் கொண்ட சேனையும் முந்நூறு இரதங்களும் அவனுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுவந்தன. அத்துணை பெரிய சேனையை எதிர்த்துச் செல்வது அவனுக்கு முடியாத காரியமாய்த்தோன்றிற்று. அவனுக்குத் துணை நிற்கக்கூடிய கூட்டுப்படைகளுமில்லை. ஆகையால் கர்த்தர்ஒருவரையே அவன் நம்பவேண்டியிருந்தது. சிறிய துன்பங்கள் ஏற்படும்பொழுது நீமற்றவர்களிடமிருந்து உதவி பெறும் எண்ணத்தைக் கைவிடச் செய்து உன்னை எல்லாம் வல்லதேவனிடம் அடைக்கலம் புகச் செய்வதற்காகவே இவ்வளவு பெரிய பயங்கரமான கஷ்டங்கள் உனக்குஉண்டாகியிருக்கலாம்.

உனக்கும் உன் சத்துருவுக்கும்நடுவே கர்த்தரை நிறுத்து. ஆசாவின் விசுவாசத்தினால் கர்த்தர் அதிக பலமுள்ள சேனைக்கும்,பலமற்ற தனக்கும் மத்தியில் நிற்பதாக அவனுக்குத் தோன்றிய அவன் எண்ணம் சரியானதே.கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக எத்தியோப்பியர் அழிந்து போனார்கள் என்றுசொல்லப்பட்டிருக்கிறது. வானுலகின் வீரர்கள் (தேவதூதர்) பகைவர்களை எதிர்த்துதுரத்தியடித்தது போலவும் இஸ்ரவேலர் இலகுவில் வெற்றியடைந்து பகைவர்களைத் தொடர்ந்து சென்றுஅவர்கள் விட்டுப்போன பொருளைக் கைப்பற்றிக் கொண்டதுபோலவும் சொல்லப்படுகிறது.யேகோவா சேனைகளின் கர்த்தர் எந்த நிமிடத்திலும் தம்முடைய ஜனங்களுக்காக எதிர்பாராதஉதவியை வரவழைக்க வல்லவர். அவர் நமக்கும் நம் துன்பங்களுக்கும் இடையே இருக்கிறார் என்பதைநம்பு. உன்னைக் கலங்கச் செய்யும் காரியங்கள் அவருக்கு முன்பாக பெருங்காற்றின் முன்பாகமேகம்போல் பறந்துபோகும்.

நீசார்ந்து கொள்ள ஒன்றும் இன்றி

அரண்கள் இடிந்து தூளாகும்போது

தேவனின் ஆட்சியைத் தவிர்த்து

வேறுஒன்றும் நிச்சயம் இல்லாதபோது

அதுவேஅவரை நம்ப ஏற்ற சமயம்.

காண்பதைவிட விசுவாசித்து நடப்பதே

நமதுபாதைக்கு ஏற்றது

காரிருள் நிறைந்த ஒளியற்ற நேரமே

விசுவாசம் ஓளி வீசுவதற்கு ஏற்ற நேரமாகும்.

ஆபிரகாம் தேவைன நம்பினான்.அதனால் காணப்படாதவைகளைப் பின்னே போ என்றும், இயற்கையின் விதிகளை அமைதியாயிருங்கள்என்றும், சந்தேகிக்கும் தன் மனதை பொய் சொல்லி என்னைச் சோதிக்கும் உள்ளமே சும்மாஇரு என்றும் சொன்னான். அவன் தேவன்மேல் நம்பிக்கை உள்ளவன் ஆனான்.