January

ஐனவரி 2

உயர உயரச் சுற்றிலும் சுற்றுக் கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றி சுற்றி அகலம் வர வர அதிகமாயிருந்தது. ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலை வழியாய் மேல் நிலைக்கு ஏறும் வழியிருந்தது (எசேக்.41:7).

இன்னும் முன்னேறிச் செல்க உன் பாதை
இன்று அதற்காக ஜெபிக்கிறேன்
ஆண்டுகள் செல்லும் காலம் மறையும்
பருவங்கள் மாறிப்போகும்.

இன்னும் மேல் நோக்க இவ்வாண்டிலும்
இன்னும் உன் பதை அறியாதே
பின்னும் விடாது மேல் நோக்கியே செல்க
இன்ப நேசரின் பக்கமாய்.

துன்ப காலத்தும் மேல் நோக்குக
துன்பத்தால் நெஞ்சம் உடைந்திடினும்
மேன்மேலும் ஊக்கம் கொள்க
இன்ப மன்னர் இயேசுவுடன் நடந்தே.

இருள் நீக்கிக் கதிரவன் எழும் வரையிலும்
இருள் நிறைந்த நிழல் மறையும் வரையிலும்
அரும் நாட்டில் அன்று வழிக்கும் மட்டும்
கிருபாசனமுன் நிற்குமட்டும் மேற் செல்க.

தாபோரின் மலை உச்சி நமக்கு முன்னாக இருக்கiயில் நாம் பள்ளத்தாக்கின் பனி மறைவில் இளைப்பாறியிருத்தால் கூடாது. மலைகளின் பனித்துளிகள் எவ்வளவு சுத்தமானது.

மலைகளின் காற்று உற்சாகம் ஊட்டக்கூடியது. மேலே உள்ளவர்களின் பங்கு இன்பமானது. அவர்கள் ஐன்னல்கள் வழியே புதிய எருசலேமைக் காணக்கூடியவர்களாயிருக்கிறார்கள். அநேக பரிசுத்தவான்கள் சூரியனைக் காணாதிருக்கிற நிலக்கரி சுரங்க வேலையாட்கள்போல் இருளில் வாழ்வதில் திருப்தியாயிருக்கிறார்கள். அவர்கள் பரம தைலத்தைப் பெற்று பொலிவு பெற்றிருக்கலாம். ஆனால், அவர்கள் முகம் கண்ணீரினால் அழகு குன்றியிருக்கிறது. அநேக விசுவாசிகள் அரண்மனை மேல்மாடியில் உலாவி லீபனோனையும், பரித்த பூமியையும் காண்பதற்கு பதில், இருட்டறையில் துக்கித்துக்கொண்டிருப்பதைக் கண்டு நான் துக்கப்படுகிறேன். விசுவாசியே இந்தத் தாழ்ந்த நிலைமையிலிருந்து விழித்தெழு. கிறிஸ்தேசுவின்மேல் கொள்ளும் பரிசுத்த அன்பிற்கு இடையூரான சோம்பல், நிர்விசாரம் முதலிய எல்லா தடைகளையும் களைந்துபோடு. அவரை உன் ஆத்தும சந்தோஷத்தின் ஆரம்பமும், மத்தியும், அந்தமும் ஆக்கிக்கொள். சிறிய நலன்கள் போதுமென்றிராதே. இன்னும் நிறைவுள்ள, மேன்மையான, உன்னத ஜீவியத்தை நாடித் தேடு. மோட்சத்தை நோக்கிக் செல். கடவுளண்டையில் இன்னும் நெருக்கிச் சேர்.

நான் இன்னும் உயர ஏறவேண்டும்
மகிமையின் பிரகாசத்தை தொடவேண்டும்
நான் மோட்ச லோகம் காணுமட்டும் இறைவனே
என்னை மேல் நோக்கி நடத்தும்

நம்மாலானவரையில் உன்னத ஜீவியம் செய்ய நம்மில் அநேகர் முயற்சி எடுப்பதில்லை. மலை ஏறப்பயந்துவிடுகிறோம். அதன் உயரமும், கரடு முரடான பாதையும் நம்மைக் கலங்கச் செய்கின்றன. ஆகையால் பனி மூடியிருக்கும் பள்ளத்தாக்கில் தங்கி விடுகிறோம். மலையின் மாட்சியை அறியோம். நம்முடைய சுயஇச்சைகளிலே ஆழ்ந்திருப்பதால் கடினமான வழியில் நடந்து, உயரச்சென்று கர்த்தரிடத்தில் சேர்வது எவ்வளவு ஆசீர்வாதம் என்று அறியாதிருக்கிறோம்.

விண்மீனுக்கடியில் வீடு கட்டுகிறவர்கள் மிகத் தாழ்ந்த இடத்தில் வீடு கட்டுகிறார்கள்.