February

பெப்ரவரி 26

என் கிருபை உனக்குப்போதும் (2.கொரி.12:19)

ஒருநாள் சாயங்காலம், நாள்முழுவதும் கடினமாக வேலை செய்துவிட்டு, என் குதிரையிலேறி வீடு திரும்பினேன். நான்அதிகமாய்க் களைத்துச் சோர்ந்திருப்தாக உணர்ந்தேன். அச்சமயத்தில், மின்னல் வேகத்தில்என் கிருபை உனக்கப் போதும் என்கிற திவ்ய வசனம் என் மனதில் தோன்றிற்று. நான் வீடுசென்று வேத புத்தகத்தில் அவ்வசனத்தை வாசித்தேன். என் கிருபை உனக்குப் போதும்என்றெழுதியிருப்பதை வாசித்தேன். அப்போது நான் ஆம், ஆண்டவரே அது சரிதான் என்றுநினைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பூரிப்படைந்து சிரித்தேன். ஆபிரகாமின்பரிசுத்தச் சிரிப்பு இன்னதென்று அதுவரை நான் அறிந்ததில்லை. அந்தச் சிரிப்பு,அவநம்பிக்கை எவ்வளவு கேலிக்கிடமானது என்று காட்டிற்று. அது ஒரு சிறிய மீன் தாகத்தால்ஆற்றுத்தண்ணீர் முழுவதையும் குடித்துவிடுவேனோ என்று பயப்படும்போது ஆறு அதைப் பார்த்து மீனேஎன்னிலுள்ள தண்ணீர் உனக்குப் போதும் என்று சொல்லுவதுபோலும், அல்லது ஏழு செழிப்புள்ளவருடங்களுக்குப் பின் ஒரு எலி தான் பஞ்சத்தால் சாகவேண்டியதுதான் என்று பயப்பட,யோசேப்பு எலியை நோக்கி, கவலை கொள்ளாதே சிறு எலியே, என் களஞ்சியங்கள் உனக்கப்போதும் என்ற சொல்லவது போலுமிருக்கிறது. உயர்ந்த மலையின்மேல் இருக்கும் ஒரு மனிதன்,நான் வருடந்தோறும், இத்தனை கன அடி காற்று சுவாசிக்கிறேன், நான் ஆகாயத்திலுள்ள அத்தனைவாயுவையும் செலவழித்து விடுவேனோ என்று சொன்னால் பூமி அம்மனிதனை நோக்கி, நன்றாய்தாராளமாய் சுவாசி. உன் சுவாசத்தை நிரப்ப என் காற்று உனக்குப் போதும் என்றுசொல்லுவதுபோலுமிருக்கிறது. சகோதரரே பெரிய விசுவாசிகளாயிருங்கள். கொஞ்சம் விசுவாசம்உங்கள் ஆத்துமாக்களை மோட்சத்திற்கு எடுத்துச் செல்லும். பெரிய விசுவாசமோ மோட்சத்தைஉங்கள் ஆத்துமாவிற்குக்கொண்டு வரும்.

வாழ்வில் வரும்பெருந்துன்பங்களைத் தாங்க அவர் கிருபை போதும். பேரலைகள்போல் துயரம் உள்ளத்தைஅலைக்கும்போதும், நம்மைத் திடுக்கிடச் செய்யும் கஷ்டங்கள் வரும்போதும், நமதுசக்திக்கு மீறிய துன்பப் புயல்கள் நம்மைத் தாக்கும்போதும் அவர் கிருபை போதும்.

சிறு துன்பங்களைமேற்கொள்ளவும் அவர் கிருபை போதும். நமக்குச் சினமூட்டும் சிறு சிறு கஷ்டங்களையும்பூச்சிகள்போல் நம்மை அலைக்கழிக்கும் சிறு கவலைகளையும், சந்தோஷத்தின் நடுவில் வந்துஅதைக் கெடுக்கிற சிறு துன்பங்களையும் பொறுத்துக்கொள்ள அவர் கிருபை போதும்.

நாம் விசுவாசத்தைப்பயன்படுத்திப் பெற்றுக்கொள்ளக் கூடிய மிகுந்த ஐசுவரியம் பரலோக வங்கியில் நமது பெயரில்உண்டு. அவருடைய சேம நிதியிலிருந்து ஏராளமாய் எடுத்தக்கொள்வோமாக.