February

பெப்ரவரி 25

உங்கள் காலடிமிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் (யோசு.1:3)

கிறிஸ்துவுக்காக ஆதாயம்செய்யப்படாத நாடுகளன்றி, உரிமையாக்கிக் கொள்ளப்படாத, தெய்வீக வாக்குத்தத்தங்களும்உண்டு. கர்த்தர் யோசுவாவுக்குக் கொடுத்த வாக்கு என்ன? உங்கள் காலடி மிதிக்கும்எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் என்பதே. அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டபூமியின் எல்லையை வரையறுக்கிறார். அவைகள் யாவும் ஒரு நிபந்தனையின்பேரில்அவர்களுடையதாகும். அதன் நீளத்தையும், அகலத்தையும் நடந்து கடக்க வேண்டும். அதன் அளவைஅவர்கள் பாதங்களால் அளக்க வேண்டும்.

அவர்கள் அந்தப் பூமியில்மூன்றில் ஒரு பாகம்தான் நடந்தார்கள். ஆகையால் அவர்களுக்கு அவ்வளவிற்குமேல்கிடைக்கவில்லை. அவர்கள் அளந்த அளவுதான் அவர்களுக்கு கிடைத்தது.

2 பேதுருவில் நமக்காகத்திறந்திருக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமியைப்பற்றி வாசிக்கிறோம்.கீழ்ப்படிதலோடு கூடிய நம்பிக்கை விசுவாசம் என்னும் கால்களால் அளந்து அதை உரிமையாக்கிக்கொள்ளவேண்டுமென்பது கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது.

கர்த்தருடையவாக்குத்தத்தங்களைக் கிறிஸ்துவின் நாமத்தில் உரிமையாக்கிக் கொண்டவர்கள் நம்மில்எத்தனையோ பேர் உண்டு.

விசுவாசத்தால் நீளத்தையும்அகலத்தையும் நடந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உன்னதப் பிரதேசம் இங்குண்டு. ஆனால்விசுவாசம் இன்னும் அதைச் செய்யவில்லை.

நம்முடைய பிறப்புரிமைக்குள்புகுவோமாக. உன் கண்களை ஏறெடுத்து வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் பார். நீபார்க்கிற அவ்வளவு பூமியையும் நான் உனக்குத் தருவேன் என்று கர்த்தர் சொல்வதைக்கேட்போமாக.

யூதா எங்கெல்லாம் கால்மிதித்தானோ அதெல்லாம் அவனுடையதாகும். பென்ஜமீன் எங்கெங்கு கால் வைத்தானோஅதெல்லாம் அவனுடையதாகும். ஒவ்வொருவனும் தானே நடந்து சென்று தன் பங்கைப் பெறவேண்டும்.இருவரும் தங்கள் காலை எடுத்து வைத்தவுடன் இந்தப் பூமி என்னுடையது என்றுஉணர்ந்திருப்பார்களல்லவா?

கிருபை பெற்று ஆச்சரியமானஉன்னத அனுபவங்களை அடைந்த ஒரு விசுவாசியிடம் தானியேலே! மார்க்கத்தில் உனக்கு இத்தனைஆனந்தமும் சமாதானமும் ஏற்பட்டதற்கு காரணம் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்குஅம்மனிதன், கர்த்தருடைய அபூர்வமான விலைமதியாத வாக்குத்தத்தங்களின்மேல் முழுவதுமாய்ச்சார்ந்திருப்பதால், அவைகளில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் எனக்குக் கிடைக்கிறது.கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக என்றான். வாக்குத்தத்தங்களின்மேல் முற்றிலுமாய்நம்பிக்கை கொண்டவர்கள் அவை தங்களுக்குக் கிட்டுவதைக் காண்பார்கள்.

சாலிஸ்பரி பிரபுவின்நாட்டை விரிவாக்கும் திட்டத்தைக் குறித்த பிறர் குறை கூறினபோது அவர் அன்பர்களே, நம்தேசப் படத்தைப் பெரிதாக்குங்கள் என்றாராம்.