February

பெப்ரவரி 23

ஒரு முறை ஒரு சிங்கமும்…….வந்தது. (1.சாமு.17:34)

வாலிபனான தாவீது கர்த்தரைநம்புவதைப்பற்றி நாம் அறியும்போது நமக்கு அது உற்சாகத்தையும், பெலனையும் கொடுக்கிறது.கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையினால், அவன் ஒரு சிங்கத்தையும் ஒரு கரடியையும், பின்புபலவானான கோலியாத்தையும் வென்றான். சிங்கம் மந்தையை அழிக்கவந்தபோது அது தாவீதிற்குஒரு சிறந்த தருணமாயிற்று. அத்தருணத்தில் அவன் பயந்தோ அல்லது தவறியோ போயிருந்தால்,இஸ்ரவேலின் அரசனாக அவன் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கமாட்டான். ஒருமுறை அங்கு சிங்கம்வந்தது.

ஒரு சிங்கம் வருவதுதேவனிடத்திலிருந்து வரும் ஒரு விசேஷித்த ஆசீர்வாதம் என்று யாரும் எண்ணமாட்டார்கள். அதுபயம் தரக்கூடிய ஒரு காரியம் என்றே எண்ணுவர். அந்தச் சிங்கம் கர்த்தர் அனுப்பியமாறுவேடமுள்ள தருணம். நமக்கு வரும் ஒவ்வொரு கஷ்டத்தையும், தகுந்த விதமாய் நாம்ஏற்றுக்கொண்டால், அதுவே கர்த்தர் கொடுக்கும் தருணமாகும். நமக்குண்டாகும் ஒவ்வொருசோதனையும் ஒரு தருணமே.

சிங்கம் வரும்பொழுது அதுதோற்றத்திற்கு எத்தனை கோரமாய்க் காணப்பட்டாலும், அதில் கர்த்தருடைய தருணத்தைஉணரமுயற்சி செய். கர்த்தருடைய ஆசரிப்பு கூடாரம் நீர்நாய்த்தோல், ஆட்டுரோமம் இவைகளால்மூடப்பட்டிருந்தது. அங்கு மகிமை இருக்குமென்று யாரும் எண்ணமாட்டார்கள். தேவனுடைய வாசஸ்தலம்அவ்வாறு மூடப்பட்டிருந்தது. துன்பத்திலும், நிர்ப்பாக்கியத்திலும், சோதனையிலும் அவரைக்காண அவர் நம்முடைய கண்களைத் திறப்பாராக.