February

பெப்ரவரி 22

நீ விசுவாசிக்கக் கூடுமானால்ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற்.9:23).

எங்களுடைய கூட்டங்கள்ஒன்றில் ஒரு வாலிபன் எழுந்து அவசியமான உதவி செய்யக் கர்த்தரை எப்படி எதிர்பார்க்கலாம்?என்று கேட்டான். அக்கேள்விக்கு வயதான ஒரு நீக்ரோ பெண் அளித்த பதில் அதிக விசேஷமானது.விசுவாசம் இன்னது என்பதை இதைவிட நன்றாய் விளக்கமுடியாது.

அவள் எழுந்து அந்த மனிதனுக்குநேரே தன் விரலை நீட்டி அழுத்தம் திருத்தமாய், அவர் செய்துவிட்டார் என்று நம்பவேண்டும்.அப்போது அது செய்யப்படும் என்றாள். தேவனை நமக்காய் ஒரு காரியம் செய்யும்படிவேண்டிக்கொண்டபின் அதை அவர் செய்தாயிற்று என்று நாம் நம்புகிறதில்லை. அவருக்கு நாம்உதவி செய்துகொண்டும், மற்றவர்களை அவருக்கு உதவிசெய்யத் தூண்டிக்கொண்டும் இருக்கிறோம்.அவர் எப்படி அதை நடத்தப்போகிறார் என்று பார்ப்போம் என்று காத்திருக்கத் தேவiயில்லை.

விசுவாசம் கர்த்தர் ஆம் என்றுசொல்லுகையில், ஆமென் அப்படியே ஆகக்கடவது என்று சொல்லிப், பின் தன் கரத்தைஅதினின்றும் எடுத்தவிட்டு கர்த்தரே அந்த வேலையை முடிக்க விட்டுவிடுகிறது. உன் வழிகளைக்கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு. அவர் கிரியை செய்கிறார் என்பதேவிசுவாசத்தின் கூற்று.

அவர் வார்த்தையை அப்படியேநம்புவேன்

என் ஜெபம்கேட்கப்பட்டதென்று துதிப்பேன்

என் n8பத்திற்குபஆ பதிலைஉரிமையுடன் கேட்பேன்

அவர் கொடுப்பார். நான்எடுத்துக்கொள்வேன்.

கர்த்தரின் வாக்குத்தங்கள்கையிலிருக்கும் பணத்தைப்போல் அத்தனை நிச்சயமானதால், அவருடைய வாக்கு இதுவரைநிறைவேறாவிட்டாலும், அதற்காக நன்றி செலுத்துவது செயலாற்றும் விசுவாசம்.

உயிரற்ற விசுவாசம்கர்த்தரின் வார்த்தையை நம்புகிறது. ஆனால் ஒன்றும் செய்வதில்லை. உயிருள்ள விசுவாசமோவேலையைச் செய்யத் தொடங்கி அதனால் தன்னை நிரூபிக்கிறது. நான் கர்த்தரின் வார்த்தையைஒவ்வொன்றையும் நம்புகிறேன். அவர் தான் செய்ய முடியாததைச் செய்வேன் என்றுசொல்லமாட்டார். அவர் என்னை முன்னால் போ என்று சொன்னார். ஆனால் வழியோஅடைபட்டிருக்கிறது. தண்ணீரிடையே பாதை உண்டான பின்பு நான் கானான் நாட்டிற்குச் செல்வேன்.எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று அவர் குரல் சொல்வது எனக்குக் கேட்கிறது.இன்னும் சூம்பின உன் கையை நீட்டு என்றும் சொல்லுகிறார். நான் பலமடைந்த பின்புஎழுந்திருப்பேன் என்றும், கை சுகமான பின்பு நீட்டுவேன் என்றும் நம்புகிறேன். தேவன் இவையெல்லாவற்றையும்செய்யக்கூடியவராயும் செய்ய விரும்புகிறவராயும் இருக்கிறார். எப்பொழுதாவது இவையெல்லாம்எனக்குக் கைகூடும் என்று உயிரற்ற விசுவாசம் சொல்லிக்கொண்டிருக்கும்.

ஆனால் உயிருள்ள விசுவாசமோ,நான் தேவனுடைய வார்த்தைகளை இப்பொழுதே ஏற்றுக்கொள்வேன் என்கிறது. நான் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே கர்த்தர் தமது வார்த்தைகளை உண்மையாகும்படி செய்வார். ஆகையினால் நான்உடனே தண்ணீருக்குள்ளும் நடந்து சென்று அங்கு ஓர் பாதையைக் காண்பேன். முன்னேறிச் சென்றுஅந்த நாட்டையும் பெற்றக் கொள்வேன். அவர் சொன்னவுடன் எழுந்திருந்து உற்சாகமாகநடப்பேன். சூம்பியிருக்கும் என் கையும் நீட்டும்பொழுது சுகம் பெறும். அவருடையவார்த்தையைத் தவிர எனக்கு வேறு ஓர் அடையாளமும் வேண்டாம். தேவன் எல்லாவற்றையும் செய்யவல்லவர். இப்பொழுதே அவர் சொல்லிய யாவும் உண்மையாகும் என்று உயிருள்ள விசுவாசம் கூறுகிறது.

உயிரற்ற விசுவாசம் பகலில்ஒளியுள்ள நேரத்தில் மட்டும் கர்த்தருக்குத் துதி செலுத்தும். உயிருள்ள விசுவாசமோ இருள்நிறைந்த இரவிலும் அவ்வாறே செய்யும். உன்னுடைய விசுவாசம் எத்தகையது?