February

பெப்ரவரி 20

உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமிராது. (மத்.17:20).

நம்மைக் காப்பாற்றவும்வெற்றியளிக்கவும், கர்த்தருடைய வல்லமையுண்டு என்று தீர்மானிக்கிறவர்களுக்குக் கர்த்தருடையவாக்கு அனுபவ உண்மையானது என்று காட்டக்கூடிய வாழ்க்கை நடத்துவது சாத்தியமாகும்.

தினமும் நம்முடைய கவலைகளைஅவர்மீது போட்டுவிட்டு, ஆழ்ந்த சமாதானத்தைப் பெறவும் கூடும்.

இந்த வார்த்தையில்அடங்கியிருக்கும் பொருளின் பிரகாரம் நம்முடைய எண்ணங்களையும், யோசனைகளையும்சுத்திகரித்துக் கொள்வது சாத்தியமாகும்.

தேவனின் சித்தத்தையாவற்றிலும் கண்டு, பெருமூச்சோடு அல்ல, சங்கீதத்தோடு பெற்றுக்கொள்வதும் சாத்தியமாகும்.

தெய்வீகச் சக்தியில்பூரணமாய்ச் சரண் புகுந்து, அதனால் மென்மேலும் பலனடையலாம். நமது பலவீனத்தில் நாம்பொறுமையாயிருக்கத் தீர்மானித்திருக்கும்போது, பொறுமையை இழந்துவிடுகிறோம்.தாழஇமையாய்த் தூய்மையாயிருக்க நினைக்கும்போது, தவறுகிறோம். இநஇத நிலைமை ஒருசந்தர்ப்பத்தையளிக்கிறது. நம்மை நேசிப்பது நம்மில் தம்முடைய சித்தத்திற்கு இணங்கும்தன்மையை உண்டுபண்ணினவர் மூலமாய் அவருடைய பிரசன்னத்தையும், சக்தியையும் உணரும்பாக்கியத்தை அருளிச் செய்ய, அது ஏற்ற சந்தர்ப்பமாகிறது. பாவம் நம்மை மேற்கொள்ளாது.

இவைகள் தெய்வீகச்சாதனங்கள். ஏனென்றால் அவை அவரின் கிரியைகளே. அவைகள் அனுபவத்திற்குக் கொண்டுவரும்போது, நம்மை அவருடைய பாதத்தண்டை தாழ்த்தவும் இன்னும் அதிகம் அதிகமாய் அவர்மேல்ஆவல் கொள்ளவும் கற்றுக்கொள்ளச் செய்கின்றன.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொருமணி நேரமும், ஒவ்வொரு வினாடியும், பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் கிறிஸ்துவில்தங்கி, தேவனோடு நடந்தாலன்றி, வேறொன்றும் நம்மைத் திருப்திப்படுத்தாது.

நாம் விரும்பும் அளவு தேவன்நம்மோடிருப்பார். பொக்கிஷ அறையின் திறவுகோலை இயேசு நமது கையில் அளித்து நமக்குத்தேவையானதை எல்லாம் எடுத்துக் கொள்ளும்படி சொல்லுகிறார். ஒரு மனிதனைச் சேமநிதியில்,தங்கம் வைக்கும் அறையில் புகுந்து வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளச் சொல்லியும் ஒரு பைசாமாத்திரம் எடுத்துக்கொண்டு திரும்பினால் அது யாருடைய தவறு? கர்த்தருடைய விலையில்லாப்பொக்கிஷத்தில் ஒரு சிறு பகுதியே உடையவர்களாக கிறிஸ்தவர்கள் இருப்பார்களாகில் அதுயாருடைய தவறு?