February

பெப்ரவரி 17

இஸ்ரவேல் புத்திரருக்குநான் கொடுக்கும் தேசம் (யோசு.1:2)

இவ்விடத்தில் கர்த்தர்நிகழ்காலத்தில் பேசுகிறார். இது அவர் பிறகு செய்யப்போகிற ஒரு காரியமல்ல. இப்பொழுதேசெய்கிற காரியம். விசுவாசம் எப்பொழுதும் இப்படியே பேசும். இப்படியே கர்த்தர் எப்பொழுதும்கொடுக்கிறார். இந்தப்படியே கர்த்தர் இன்றைய தினத்தில் இந்த நிமிடத்தில் உன்னைச்சந்திக்கிறார். இதுவே விசுவாசத்தின் பரீட்சை. யாதாவதொரு காரியம் நடக்கும் என்றுஎதிர்பார்த்துக் காத்திருப்பாயென்றால் அது விசுவாசமில்லை, அது நம்பிக்கை. ஊக்கமானவிருப்பமாயிருக்கலாம். ஆனால் அது விசுவாசமல்ல. ஏனென்றால் விசுவாசம் எதிர்பார்த்தலின்நிறைவேறுதலும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நம்பிக்கையான ஜெபத்தைக்குறித்த கட்டளை நிகழ்காலத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் ஜெபம்பண்ணும்போதுஎவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோமென்று விசுவாசியுங்கள்.அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் (மாற்.11:24). நாம் அப்படிப்பட்ட நேரத்திற்குவந்துவிட்டோமா? சதாகாலமும் இருக்கிற கர்த்தர் என்று விளங்கிக் கொண்டோமா?

உண்மையான விசுவாசம் கடவுள்செய்வார் என்று உறுதிக் கொண்டு காணுமுன் விசுவாசிக்கிறது. நம்முடைய ஜெபங்கள்கேட்கப்பட்டன என்பதற்கு அத்தாட்சி கேட்பது இயற்கையே. விசுவாசித்து நடக்கும்போதுகர்த்தருடைய வார்த்தையின்றி, வேறொரு அத்தாட்சியும் தேவையில்லை. நம்முடையவிசுவாசத்தின்படியே ஆகுமென்று அவர் சொல்லியிருக்கிறார். நாம் நம்புவதை நாம் காணுவோம்.நம்மைச் சூழ எல்லாம் கர்த்தருடைய வார்த்தைக்கு மாறாக இருப்பினும், வெகு கஷ்டமானகாலத்திலும் விசுவாசமே ஆதாரமாக இருக்கும்.

சங்கீதக்காரன் நானோ ஜீவனுள்ளோர்தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால்கெட்டுப்போயிருப்பேன் (சங்.27:13). என்கிறான். அவன் தன்னுடைய ஜெபங்களுக்குக்கர்த்தருடைய பதிலை இதுவரை காணவில்லை. ஆனால் காணுவேன் என்று நம்பினான். இந்தநம்பிக்கை அவனைக் கெட்டுப் போகாதிருக்கச் செய்தது.

காணுவோம் என்றநம்பிக்கை நிறைந்த விசுவாசம் நமக்குண்டானால் நாம் மனம் தளர்ந்து போகமாட்டோம்.செய்யமுடியாதது என்று சொல்லப்படுகிற காரியங்களைக் குறித்து நகைப்போம். ஒரு கட்டத்தில்மனித உதவி ஒன்றும் செய்ய முடியாதபொழுது கர்த்தர் எப்படி செங்கடலினூடே வழி உண்டாக்குவார்என்று மகிழ்ச்சியோடு கவனித்திருப்பது நல்லது. கடுமையான பரீட்சை உண்டாகும்போது நம்விசுவாசம் வளர்ந்து பலப்படுகிறது.

துன்பமடையும் என் பிரியசகோதரனே! பல நாட்களும் நீண்ட இரவுகளும், கர்ததருக்குக் காத்திருந்து, கர்த்தர் உன்னைமறந்தாரென்று சந்தேகிக்கிறாயா? இப்பொழுதும் உன்னை நாடி வந்து கொண்டிருக்கும் இரட்சிப்பிற்காகநீ உன் தலையை நிமிர்த்தி கர்த்தரை துதிக்கத் தொடங்கு.