February

பெப்ரவரி 16

உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன் (நாகூம்1:12).

துன்பங்களுக்கு ஓர் அளவுஉண்டு. கர்த்தர் அதை அனுப்பி அதை விலக்குகிறார். எப்பொழுதும் அது விலகும் என்று பெருமூச்சுடன்நீ கேட்கிறாயா? கர்த்தர் வரும்வரை அவர் சித்தத்திற்காக அமைதியாய்க் காத்திருந்து,பொறுமையாய்ச் சகிப்போமாக. தாம் கொண்ட எண்ணம் முழுவதும் நிறைவேறும்போது அவர் கஷ்டங்களைநீக்கிப்போடுவார்.

துன்பங்கள் நம்முடையநற்குணங்களால் கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கான பரீட்சைகளானால், அவை அவருக்குத் துதிஉண்டாக நம்மை சாட்சி பகரச்செய்யும்போது விலகிப்போம்.

நம்முடையதுன்பங்களின் மூலம் நாம் கொடுக்கக் கூடிய மகிமை யாவையும் பெற்றுக்கொள்ளும்வரை அவைநீங்கவேண்டுமென்று கர்த்தர் விரும்பமாட்டார். ஆனால் இன்றைய தினமே ஓர் அமைதி உண்டாகலாம்.கொந்தளிக்கும் அலைகள் அமர்ந்து, எந்த வேளையில் கடல் கண்ணாடிபோலிருக்குமென்று அறியோம்.

அநேகஉபத்திரவங்களுக்குப்பின், கதிரடிக்கும் தடி தொங்க வைக்கப்பட்டதும் கோதுமைமணிகளும்களஞ்சியத்தில் சேர்க்கப்படும். சில மணிநேரங்களுக்குள் நாம் இப்போது எவ்வளவுதுக்கமாயிருக்கிறோமோ அவ்வளவு சந்தோஷமாயிருக்கலாம்.

இரவைப் பகலாக்குவதுதேவனுக்குக் கடினமல்ல. மேகங்களை அனுப்புகிறவர், அவைகளை எளிதாய் விலகிப் போகவும்செய்யக்கூடும். நாம் சந்தோஷமாயிருப்போமாக. பின்னால் அது நன்மை பயக்கும், நன்மை வரும்என்று எதிர்பார்த்து துதி கீதம் பாடுவோமாக.

நமது ஒப்பற்ற உழைப்பாளிஎப்பொழுதும் போரடிக்கிறவரல்லர். சோதனை சொற்ப காலத்திற்கே. கொடுமழை சீக்கிரம்நின்றுபோம். குறுகிய கோடை இரவுபோல சில நேரத்திற்கே அழுகை தங்கியிருக்கும்.விடிந்தவுடன் அது நீக்கிப் போகவேண்டும். நமது அற்ப துன்பம் சொற்ப நேரத்தியதே.சோதனை யாதாவதொரு காரியத்திற்காகவே வரும், அதுவும் அவசியமானால்.

நமக்குச் சோதனைகள்உண்டாவதே, தேவனுக்குப் பிரியமான ஏதோ ஒன்று நம்மிலிருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாகும்.இல்லையெனில் அவர் அத்தனை சிரமம் எடுத்து நமக்காக நேரத்தைச் செலவிடமாட்டார். நம்முடையகற்பாறை தன்மையில், விலைமதிப்பற்ற விசுவாசம் என்ற தங்கம் கலந்துள்ளது என்று அவர்காணாவிட்டால் நம்மை அவர் பரீட்சை பாரார். இந்தத் தங்கத்தைச் சுத்தப்படுத்தி,அழகுபடுத்தத்தான் நெருப்பையொத்த சோதனைகளின் வழியே நம்மை நடத்துகிறார்.

உபத்திரவப்படுவோனேசகித்திரு! அதன் பயனாக, மிகுதியான மகிமையுண்டாகும்பொழுது சோதனைகளுக்கு மேலான பலன்கிடைத்தது என்று உணருவாய். கர்த்தரால் புகழப்படுவதும், பரிசுத்தத் தூதருக்குமுன்கண்ணியமடைவதும், கிறிஸ்துவின் மகிமையைக் கிறிஸ்துவுக்காக உபயோகித்து, நாம்கிறிஸ்துவுக்குள் மகிமையடைவதும் கஷ்டங்களுக்கு எத்தனையோ மடங்கு பயனடைந்ததாகும்.

கடிகாரத்தின் பாகங்கள்அது சரியாய் ஓடுவதற்கு ஏதவாயிருப்பதுபோலவும், கப்பலின் மணற் சாக்குகள் தன்னிலையில் அதுமிதக்க உதவுவதுபோலவும், ஆத்தும ஜீவியத்திற்குத் துன்பங்கள் அவசியமாயிருக்கின்றன.

மலர்களைக் கசக்குவதாலேயேமிகந்த வாசனையடையலாம். ஆல்பைன் மலையில் பனி சூழ்ந்த தனி இடங்களில் வெகு அழகியபுஷ்பங்கள் மலருகின்றன. அழகிய வைரங்கள், வைரம் செதுக்குவோரின் சக்கரத்தில் வெகுவாய்பாடுபடுகின்றன. அதிகமாய்ச் சிற்பியின் உளியால் வெட்டப்பட்ட சிலையேஅழகமைந்ததாயிருக்கிறது. எல்லாம் சட்டத்திற்குக் கீழடங்கியே இருக்கிறது.முழுக்கவலையோடும் முன்னறிவோடும் குறிக்கப்படாத ஒன்றும் நடைபெறுவதில்லை.