February

பெப்ரவரி 15

எரிச்சலடையாதே (சங்.37:1).

எவற்றைக் குறித்தும்மூர்க்கம் அடையாதே. இந்தச் சங்கீதத்தில் தொகுத்துள்ள காரியங்கள்எரிச்சலடையத்தக்கவைகளே. தீமை செய்பவர்கள் நீலாம்பரமும் மெல்லிய வஸ்திரமும் தரித்துச்செழித்திருந்தார்கள். பொல்லாப்புச் செய்பவர்கள் அதியுன்னத பதவியடைந்து துர் அதிஷ்டசாலிகளானதங்கள் சகோதரரைக் கொடுமையாய் நடத்தினார்கள். ஜீவனத்தின் பெருமையோடும், திரளான ஜசுவரியத்தினாலுண்டாகும்சுகபோகத்தோடும், பாவிகளான ஆண்களும், பெண்களும் வீதிகளில் பெருமிதமாய் நடந்தார்கள்.சற்குணமான மனிதர் வருத்தப்பட்டு எரிச்சலடைந்தார்கள்.

எரிச்சலடையாதே,அதிகமாய்க் கோபங்கொள்ளாதிருப்பாயாக, அமைதியாயிரு. தகுந்த காரணத்துக்கும் எரிச்சல்அடைவது ஏற்றதல்ல. எரிச்சல் யாவற்றையும் உஷ்ணப்படுத்துகிறது. அது நீராவியைஉண்டாக்குகிறதில்லை. புகைவண்டியின் அச்சுக்களில் உஷ்ணம் ஏறுவதானால் பயனொன்றும் இல்லை.அது ஒரு தடையாகவே இருக்கிறது. இவ்வாறு நிகழ்வதன் காரணமென்ன? உலர்ந்த பாகங்கள்ஒன்றொடொன்று உராய்கின்றன. இப்படி உராயாமல் இடையில் மெத்தென்றிருக்க எண்ணெய்போடவேண்டும்.

ஆங்கிலத்தில்எரிச்சல் என்பது தேய்த்தல் அல்லது உராய்தல் என்ற வார்த்தையோடு பொருள்படுத்தப்படுகிறது.இது தேவ கிருபையாகிய அபிஷேக எண்ணெய் இல்லாததைக் காட்டுகிறது.

நமக்குஎரிச்சல் ஏற்படும்பொழுது சுரசுரப்பான ஏதோ ஒன்று – ஏமாற்றமோ, நன்றியில்லாமையோ,அவமரியாதையாக நடத்தப்படுகிறோம் என்ற எண்ணமோ, நம்முள் புகுந்து நமது ஜீவிய ஓட்டத்தைமென்மையாக செல்லாதபடி தடை செய்கிறது. இயந்திரத்தில் அதிக உஷ்ணம் ஏற்படுவது அபாயம்.அதுபோலவே நமது வாழ்விலும் எரிச்சல் தீமையையே விளைவிக்கும். இவ்வாறு ஏற்படாதபடிஉன்னைக் காத்துக்கொள். அதிக எரிச்சலினால் நீயும் தீமை செய்பவனாவாய்.எரிச்சலுடையவனென்றெண்ணப்படாதபடி கர்த்தரின் தைலம் உன்னை அமர்ந்திருக்கச் செய்யட்டும்.

அலசடிக்கப்பட்டஇருதயமே, எரிச்சலாகாதே.

கர்த்தர் தம் அன்பையும், உதவியையும்

ஆயிரம் வகைகளில் காட்டுவார்.

அவர் சித்த உணரும்வரை நம்பு, நம்பு, நம்பு.

அலசடிப்பட்ட இருதயமே, அமைதியாயிரு.

அவர் புன்னகை உன் சமாதானமே.

அவர் அன்பின் சகல தப்பிதங்களையும்

துக்கங்களையும் சீர்ப்படுத்தும்

அவரை நேசி, நேசி, பொறுமையாய்க் காத்திரு.

அலசடிப்பட்ட என் இருதயமே, தைரியப்படு. துக்கிக்காதே.

அடிக்கும் குளிர்காற்றிலும் அவர் பட்சமுண்டே

தைரியம் அடையும்வரை நம்பு, நம்பு நம்பு.

அலசடிப்பட்ட இருதயமே,

அவர் மார்பில் சாய்ந்து இளைப்பாறு.

அவர் கிருபையே ஜீவன், பெலன். அவர் அன்பு மலரட்டும்

அவர் சக்தியில் இளைப்பாறு, இளைப்பாறு, இளைப்பாறு.

அலசடிப்பட்ட இருதயமே, அமைதியாயிரு,

விடுதலைபெற விழையாதே.

அவர் ஜீவன் உன்னுள்ளே, அவர் சமுகம் விட்டோடாதே

காணக்கூடிய விசுவாசம் கிடைக்கும்வரை

ஜெபி, ஜெபி, ஜெபி.