February

பெப்ரவரி 13

மலைத்தேசமும் உங்களுடையதாயிருக்கும் (யோசு.17:17).

எப்பொழுதும் மேலே இடமுண்டு.பள்ளத்தாக்கு முழுவதிலும் உன் முன்னேற்றத்தைத் தடைபண்ணும் இரும்பு இரதங்களோடு, கானானியர்நிரம்பியிருக்கும்போது நீ மலைமீது ஏறிச்சென்று உயர்ந்த இடங்களைப் பிடித்துக்கொள்.உன்னால் தொடர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியாவிட்டால் அவருக்கு ஊழியம்செய்யக்கூடியவர்களுக்காக ஜெபி. உன் பேச்சுத்திறமையில் உலகத்தை அசைக்க உன்னால்முடியாவிட்டால் நீ மோட்சத்தையே அசைக்கலாம். ஊழியம் செய்யச் சந்தர்ப்பங்கள்வாய்க்கவில்லை அல்லது பிறரைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் வேறு ஊழியத்திற்குச்செல்ல முடியவில்லை என்ற இவ்விதத் தடைகள் உனக்கு ஏற்படலாம். இவற்றால் உன்வாழ்க்கையின் முன்னேற்றம் தடைப்பட்டாலும், காணமுடியாத நித்தியமான தெய்வீக நெறிகளில்நீ முன்னேறிச் செல்லலாம்.

விசுவாசம் காடுகளைஅழிக்கக்கூடும். காடுகளுக்கப்பால் பொக்கிஷம் உண்டு என்று ஜனங்கள் அறிந்திருந்தாலும்,மலைபோல் வளர்ந்திருக்கும் காடுகளை அழித்தல் சாத்தியம் என்று எண்ணி இருக்கமாட்டார்கள்.ஆனால் தேவன் அவ்வேலையைக் குறிப்பிட்டதால், அவர்களுக்குச் சக்தி உண்டு என்பதைநினைப்பூட்டினார். இதைப்போலவே செய்வதற்கு கடினமாகத் தோன்றும் காரியங்கள் நமக்கும்காட்டப்படுகின்றன. இது நம்மைக் கேலி செய்வதற்கல்ல, கர்த்தர் நம்மோடு வசித்துக்கொடுக்கும் பலத்தினாலன்றி நாம் இவற்றைச் செய்ய முடியாது. அத்தகைய பலத்தைப் பெற்றுபெருஞ் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டுவதற்கே இவை நமக்கக் காண்பிக்கப்படுகின்றன.

ஜெபித்து கிரியை செய்யும்விசுவாசத்துக்கு விடையாக தேவன் என்ன செய்யமுடியும் என்று காட்டவே, நமக்குத் துன்பங்கள்அனுப்ப்படுகின்றன. நீ பள்ளத்தாக்கில் நெருக்கப்படுகிறாயா? மலைகளுக்குப் போய் அங்குவசி. பாறைகளில் தேனையும் காடாய் மறைந்திருக்கும் சாரலில் ஆஸ்தியையும் பெற்றுக்கொள்.

கடக்கமுடியாது என்று சொல்லப்படும் நதிகளுண்டா?

சுரங்கவழி வெட்டமுடியாதுஎன்று சொல்லப்படும் மலைகள் உண்டா?

செய்ய முடியாதவற்றைச்செய்வதில் நாங்கள் கைதேர்ந்தவர்கள்?

முடியாது என்று பிறர்சொல்வதை நாங்கள் செய்வோம்.