February

பெப்ரவரி 12

உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார் (மத்.6:32).

ஓர் ஊமைப் பிள்ளைகள்பள்ளியைப் பார்வையிடச் சென்ற ஒருவர், கரும்பலகையில் அநேகக் கேள்விகளை எழுதினார்.அதிலொரு கேள்வி, என்னைப் பேசவும் கேட்கவும் கூடியவனாகவும், உங்களைப் பேசவும் கேட்கவும்கூடாதவர்களாகவும் தேவன் ஏன் படைத்தார்?

இக் கேள்வி அவர்கள்முகத்திலறைந்தாற்போல் இருந்தது. ஏன் என்ற கேள்விக்கு விடையளியாது மரத்துப்போனதுபோல்செயலற்றவர்களாயிருந்தனர் மாணவர். பின்பு ஒரு சிறு பெண் எழுந்தாள். அவளுடைய உதடுகள் துடித்தன.அவள் கண்களில் நீர் நிரம்பிற்று. அவள் கரும்பலகை அண்டை சென்று நடுக்கமின்றி பின்வரும்அருமையான வசனத்தை எழுதினாள். இதுவும் கர்த்தாவே உமது பார்வைக்கு நலமாயிருக்கிறது. என்னஆச்சரியமான பதில்! இது அழிவில்லாத ஒரு சத்தியத்தைத் தெரிவிக்கிறது. விசுவாசத்தில்உறுதியடைந்தவர்கள் மட்டுமின்றிக் கர்த்தரின் இளம் பிள்ளைகள்கூட அதனால் ஆறுதல் பெறலாம்.தேவன் நமது பிதா என்ற சத்தியமே அது.

உனக்கு அந்தச் சத்தியம்தெளிவாகின்றதா? நீ அதை முற்றிலும் நம்புவாயா? நீ நம்புவாயாகில் விசுவாசமாகிய புறாஓய்வின்றி அலைந்து திரியாமல் சாந்தி நிறைந்த இடத்தில் நித்தியமாய்த் தங்கித்தரிக்கும். இப்பொழுது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் நமது வாழ்வை இருளாக்குகின்றன. ஆயினும்இவை மகா உன்னதமான ஆனந்தம் நிறைந்த ஒரு நிலையில் நம்மைக்கொண்டு சேர்ப்பதற்குஅவசியமானவையே. இதை நாம் அனைவரும் அறியக்கூடிய ஒரு காலம் வருமென நம்புகிறேன். அப்போதுநாம் அதிக வியப்பும் மகிழ்ச்சியும் அடைவோம்.

இது தற்செயலாய்ஏற்பட்டதல்ல

இது கர்த்தரின்கையினால் ஆனது

ஆகையால் பொருள்படுத்தேன்

நான் காணக்கூடாததைஅவர் காண்கிறார்

ஒவ்வொரு வேதனையும்தேவையானதே

இவ்வுலக நஷ்டம்உண்மையில் லாபமேயென்று

அவர் ஒருவரே விளங்கச்செய்வார்.

நாம் வேலை செய்யும்ஒரு துணி

பின்னால் திரும்பிப்பார்க்கங்கால்

ஒரேஒழுங்கீனமாயிருப்பினும்

முன்னிருக்கும்சித்திரம் அழுகு

வேலைத்திறமையையும்,பெருமையையும் காட்டி

உழைப்புக்கேற்ற பயன்அளிக்கும்

கர்த்தாவே அதுபோல்உன் சாயலை

உம் நாம மகிமைக்காய்என்னில் பதியச்செய்யும்.