February

பெப்ரவரி 09

அவளுக்குப் பிரதியுத்தரமாக, அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. (மத்.15:23). தம்முடையஅன்பினிமித்தம் அமர்ந்திருப்பார் (செப்.3:17).

இதை வாசிக்கும்கர்த்தருடைய பிள்ளையே நீ கனத்த வருத்தம் அடைந்திருக்கலாம். நீ எதிர்பாராத இடத்திலிருந்துகசப்பான ஏமாற்றமும், இதயத்தை நொறுக்கும் அடியும் அடைந்திருக்கலாம். உன் பரம எஜமான்சந்தோஷமாயிரு என்று சொல்லும் சப்தத்தைக் கேட்க நீ ஆசை கொண்டிருக்கலாம். அவர்பிரதியுத்தரமாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

கர்த்தரின் மென்மையான இருதயம்நம்முடைய குறைகூறும் துக்கம் நிறைந்த முறைப்பாட்டைக் கேட்க அதிக வேதனை அடைகிறது. நம்நன்மைக்காகவே அவர் விடையளிக்காமலிருக்கலாம் அல்லது அவர் அளிக்கும் பதில் நம்முடையகுறுகிய பார்வையுடைய கண்ணீர் நிறைந்த கண்களுக்கு நன்மையாக தெரிவதில்லை. இதையறியாமல்நமது பலவீனத்தில், நமது ஆத்திரத்தில் முறையிட்டு அவர் மனதை வருத்துகிறோம்.

இயேசுவின் மௌனம் அவர்பேச்சைப்போல வலிமை வாய்ந்தது. அது அவர் ஜெபத்தை தள்ளுகிறதற்கல்ல, ஏற்றுக்கொண்டுஆசீர்வதிப்பதற்கே ஏதுவாயிருக்கிறது.

என்ஆத்துமாவே ஏன் எனக்குள் தியங்குகிறாய்? அவருடைய மௌனத்திற்காகவும் நீ அவரைத்துதிப்பாய். ஒரு கிறிஸ்தவ அம்மாள் சொப்பனத்தில் ஜெபிக்கிற மூவரைக் கண்டார்கள் என்றஒரு பழங்கதையுண்டு. அவர்கள் முழந்தாளிட்டதும் கிறிஸ்து சமீபத்தில் வருகிறார்.

அம் மூவரில் முதல்வரண்டைவந்தவுடன் அவர் குனிந்து, உருக்கத்தோடும், கிருபையோடும், அன்பு தவழும் புன்னகையோடும்சுத்த இனிமையான கானத்தில் அவளோடு பேசினார்.

அவளைவிட்டுஅடுத்த பெண்ணண்டை வந்தார். அவளுடைய குனிந்த தலையைத் தடவி அன்போடு ஏற்றுக்கொள்ளும்பாவனையில் புன்னகை பூத்தார்.

மூன்றாவது பெண்ணைவிட்டு,சடுதியாய், தீவிரமாய் ஒரு வார்த்தையாவது, ஒரு பார்வையாவது கொடாமல் கடந்து சென்றார்.சொப்பனம் கண்ட பெண், தனக்குள்ளே, முதல் பெண்ணை எத்தனையாய் நேசிக்கிறார். இரண்டாம்பெண்ணை ஏற்றுக்கொண்டார். ஆனால் முதலிலிருந்தவளிடம் காட்டிய அன்பின் அடையாளங்கள் இவளிடம்காட்டப்படவில்லை. மூன்றாம் பெண் தேவனைத் துக்கப்படுத்தியிருக்கவேண்டும். ஏனென்றால்அவளோடு ஒரு வார்த்தை பேசவுமில்லை. பார்க்கவுமில்லை என்று சொல்லிக்கொண்டாள்.

அத்தனைவித்தியாசம் காட்ட அவள் என்ன செய்திருப்பாள் என்று ஆச்சரியப்பட்டாள். ஆண்டவருடைய இந்தச்செய்கைக்கு அவள் காரணம் தேடிக்கொண்டிருக்கையில், அவர்தாமே அருகில் நின்று, அம்மா நீஎன்னை எவ்வளவு தவறாக அர்த்தப்படுத்திக் கொள்கிறாய். முழங்காற்படியிட்டிருக்கும் முதல்பெண்ணின் கால்களை என்னுடைய நெருக்கமான வழியில் நிறுத்த, அத்தனை உருக்கம்தேவையாயிருந்தது. நாளின் ஒவ்வொரு விநாடியிலும் என் யோசனையும், உதவியும் அவளுக்குத்தேவை. அது இல்லாவிடில் அவள் விழுந்து மடிந்து போவாள்.

இரண்டாம் பெண் ஆழ்ந்தஅன்பும், பலமான விசுவாசமும் உள்ளவள். காரியம் எப்படி நடந்தாலும், ஜனங்கள் என்னசெய்தாலும் என்னை நம்புவாள்.

நான் கவனியாதுவிட்டுவிட்டது போன்று தோன்றியவள் திவ்விய குணலட்சணமான அன்பும் விசுவாசமும் உள்ளவள்.கடுமையான முறையில், அவளை உன்னதமும், மகா பரிசுத்தமான ஊழியத்திற்கு பயிற்சிக்கிறேன்.என் வார்த்தை, பார்வையோன்ற வெளியரங்கமான ஏற்றக்கொள்ளுதல் இல்லாமலேயே என்னைமுற்றிலும் நம்பக்கூடிய அளவு அவள் என்னை நன்றாய் அறிந்திருக்கிறாள். அவள் கடக்கவேண்டுமென்று நான் ஒழுங்கு செய்கிற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயப்படாதிருப்பாள். இயற்கையானஇருதய உணர்ச்சி, புலன், அறிவு மாறாக இருந்தாலும் அவள் என்னை நம்புவாள். ஏனென்றால் நான்அவளில் நித்தியத்திற்காக் கிரியை செய்கிறேனென்றும், நான் செய்வது இப்பொதுவிளக்காவிடினும், பின்பு யாவும் தெளிவாய் விளங்கும் என்றும் அவள் அறிகிறாள்.

நான் என் அன்பில்மௌனமாய் இருக்கிறேன். ஏனென்றால் என் அன்பு சொல்லுக்கடங்காதது. மனித அறிவுக்குஎட்டாதது. அதுவுமின்றி நீங்கள் யாவரும் ஆவியானவரால் அன்பாய்ப் போதிக்கப்பட்டு,தாமாகவே என்னை நேசித்து நம்பியிருக்குமாறு நான் மௌனமாயிருக்கிறேன் என்றார்.

அவர் அதிசயங்களைநடப்பிப்பார். அவருடைய அமைதியின் இரகசியத்தை அறிந்து, அவருடைய ஈவுகளை அவர் திரும்பஎடுத்துக்கொள்ளும்போது நீ இன்னும் அவரை அதிகமாய் நேசித்தால் அவர் அதிசயங்களைச்செய்வார்.