February

பெப்ரவரி 08

இதோஉலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்.28:20).

இந்த ஜீவியத்தின்மாறுதல்களையும், சந்தர்ப்பங்களையும் பயத்தோடே எதிர்பார்க்காதே. உன்னை ஆட்கொண்டகர்த்தர் எற்ற வேளையில் உன்னை விடுவிப்பார் என்று முழு நம்பிக்கையோடு அவைகளை நோக்கு.அவருடைய கரத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள. அவர் உன்னை எல்லாக் காரியங்களிலும்பத்திரமாய் நடத்தியிருக்கிறார். இன்னும் நடத்துவார். நீ நிற்கமுடியாதபோது உன்னைத் தமதுகரங்களில் ஏந்துவார்.

நாளைஎன்ன சம்பவிக்குமோ என்று கவலைகொள்ளாதே. இன்று உனக்காகக் கவலைப்படும் மாறாத பிதாநாளையும், ஒவ்வொரு நாளும் உன்னைக் கவனித்துக்கொள்வார். உன்னைக் கஷ்டத்திலிருந்துகாப்பார். அல்லது கஷ்டத்தைத் தாங்க பெலன் ஈவார். எல்லா மனுஷீக கவலைகளையும், எல்லாக்கவலையான எண்ணங்களையும் தள்ளிச் சமாதானமாயிரு.

கர்த்தர்என் மேய்ப்பராயிருக்கிறார். இருந்தார் என்று அல்ல. இருக்கலாம் என்று அல்ல. இருப்பார்என்று அல்ல. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஞாயிறு,திங்கள் எல்லாத் தினங்களில் தேவன் நம்மோடிருக்கிறார். ஜனவரியில் இருப்பதுபோலடிசம்பரிலும் இருப்பார். வீட்டிலும், வெளியிலும், போரிலும், சமாதானத்திலும், வாழ்விலும்,தாழ்விலும் அவர் நம்முடைய மேய்ப்பராயிருக்கிறார்.

அவர்மௌனமாக உனக்கு வேண்டியவற்றை ஒழுங்கு செய்வார். நீ அவரது எல்லையற்ற அறிவினால்கண்காணிக்கப்படும் பொருளாக இருக்கிறாய். மறைவான கண்ணிகளினின்றும் உன்னைத்தப்புவிப்பதற்கு அவரே வழிகாட்டியாவார். அவர் ஒருபோதும் தவறமாட்டார். அவர் உண்மையுள்ளவர்என்பதை நம்பியிரு. அவர் உதவியால் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.

மௌனமாகவே அவர்யாவற்றையும் ஒழுங்கு செய்வார். அவர் உனக்காக ஆயத்தம் செய்தவற்றைக் கண்கள் கண்டதில்லை.செவிகள் கேட்டதில்லை. அவர் அன்பின் செய்கை உனக்கு ஆச்சரியமுண்டாக்கக்கூடியதாக இருக்கும்.

எல்லாவற்றையும் அவர்மௌனமாக ஒழுங்கு செய்வார். அவருடைய குறிக்கோள்களனைத்தும் ஒரு நாள் உனக்குத் தெளிவாகும்.சிக்குண்ட நூல்கட்டு அழகிய வேலைப் பாடமைந்த கலைப்பொருளாக மாறுவதுபோல், இப்பொழுதுசிக்கலாகத் தோன்றுவதெல்லாம் அப்போது ஒளி பெறும். அவர் உனக்காகவே மௌனமாகயாவற்றையும் ஒழுங்கு செய்வார். தந்தையால் கவனிக்கப்படுகிற சந்தோஷமான குழந்தை நீ. நீஒருவன்தான் அவருக்கு அன்புக்குரியவனாய் இருப்பதுபோல் உன்னை அவர் பாதுகாத்து வருகிறார்.

அவர்எப்படிப்பட்டவர் என்று நம் விசுவாசம் சொல்கிறதோ அப்படியே அவர் இருப்பார்.