February

பெப்ரவரி 05

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை (ஏசா.54:12).

அமர்ந்திருப்பதிலுள்ளஆச்சரியமான சக்தியை நாம் அறிந்திருக்கறோம் என்று சொல்லமுடியாது. நாம்அவசரப்படுகிறோம். தேவன் கிரியை செய்ய இடம் கொடாமல் நாம் வேலைசெய்துகொண்டே இருக்கிறோம்.தேவன் தாம் ஏதாவது செய்ய முயலும்போதுதான் அமர்ந்திரு, சும்மா இரு, ஒன்றும் செய்யாதேஎன்று சொல்லுகிறார்.

இதுவே நம் கிறிஸ்தவ ஜீவித்திலுண்டாகும்சங்கடம். அவர் நம்மில் கிரியை செய்ய நாம் இடங்கொடுக்கவேண்டிய வேளையிலே, நாமேகிறிஸ்தர்களாயிருக்க வேண்டும் என்பதால் ஏதாவது செய்ய முயற்சிக்கிறோம். உன் உருவச்சித்திரம் சித்தரிக்கப்படுகையில் நீ எவ்வளவு அசைவின்றி அமர்ந்திருக்க வேண்டுமென்றுஉனக்குத் தெரியாதா?

நம்மைக் குறித்து கர்த்தர்ஓர் அநாதி தீர்மானம் கொண்டிருக்கிறார். அதாவது நாம் அவரின் திருக்குமாரனைப் போலிருக்கவேண்டுமென்பதே. இந்த எண்ணம் ஈடேற நாம் செயலற்றிருக்கவேண்டும். செய்கை என்பதைக்குறித்து நாம் எவ்வளவோ கேள்வியுறுகிறோம். அமைதலாயிருத்தலைக் குறித்து நாம்அறியவேண்டிய அவசியமுண்டு.

அமைதியாய் இரு என் மகளே! பொறுமையாய் இரு

காத்திருக்கும் நாட்கள் தீய நாட்கள் என்று எண்ணாதே.

உன்னை அதிகமாய் நேசித்து வழி நடத்துகிறவர்

இன்றைய உன் தேவையை மறப்பவர் அல்ல.

அவர் தாமதித்திருப்பாரெனில் மெய்மையான உனக்குத்

தம் ஆழ்ந்த அன்பைக் காட்டவே

அமைதியாய் இரு என் மகளே! பொறுமையாய் இரு!

அவர் சித்தம் அறிய நீ ஆவல் கொண்டுள்ளாய்.

உன் ஏக்கமும் நினைவுகளும் அவர்

தாமதத்தை ஐயுர வேண்டா

குழந்தை நம்பிக்கையோடு அமர்ந்திரு

உன்னை நேசிக்கும் அவர், நலமே செய்வார்.

அமைதியாய் இரு என் மகளே! பொறுமையாய் இரு

ஓர் அடியும் எடுத்து வைக்காதே

வழி திறந்த பின் எவ்வளவு இனிமை

அடிதுரிதமாக இதயம் மகிழ்வாக மாறும்

உள்ளமும் பலன்கொண்டு

காத்திருந்த நாட்கள் மறந்துபோம்

அமைதியாய் இரு என் மகளே! பொறுமையாய் இரு

இதைவிட உயர்வான சேவை உண்டா?

கடினம்தான் இது மலிவானதல்லவே

அவசரப்படுவதால் இழப்பதோ பெரிது

கடினம்தான், ஆனால் அவர் கிருபை தருவார்

காத்திருக்கும் இடமே இனிமையான இடம்.