February

பெப்ரவரி 04

பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறி இருக்கும்படி பண்ணி…. (ஏசா.58:14).

ஆகாய விமானத்தில்பறப்பவர்கள், காற்று முகமாக விமானத்தைத் திருப்பிக் காற்றுக்கு எதிர்த்துப் பறப்பதேஅவர்கள் படிக்கும் முதல் பாடம் என்று சொல்லுகிறார்கள். காற்று விமானத்தை அதிகஉயரத்திற்குப் தூக்குகிறது. இதை அவர்கள் எப்படி அறிந்தார்கள். இதைப் பட்சிகளிடமிருந்தேகற்றுக்கொண்டார்கள். ஒரு பறவை தன் இன்பத்திற்காகப் பறக்கும்போது காற்றோடு செல்லும்.ஆனால் உயர எழும்பி உயர சூரியனுக்கு நேரே ஆபத்தைச் சந்திக்கும்போதே எதிர்த்து பறக்கும்.

கஷ்டங்கள் கர்த்தருடையகாற்றுகள். நமக்கு எதிர்முகமாக வீசும் அவருடைய காற்று அதிக பலமாய் வீசுகிறது. ஆனால்அவைகள் மனிதனை உயர்த்தி, பரத்துக்கு நேராக அவனைக் கொண்டு செல்கின்றன. சில கோடைநாட்களில் வெப்பத்தின் அகோரத்தால் மூச்சுக்கூட விடமுடியாதபடி திணறுகிறோம். மேற்குஅடிவானத்திலிருந்து தோன்றும் சிறிய மேகம், அப்பேர்ப்பட்ட சமயங்களில் பெரிதாகிப்பூமிக்கு மிகுந்த ஆசீர்வாதத்தைப் பொழியும். புயல், மின்னல் மின்னி, இடி குமுறுகிறது. புயல்பூமியை மூடுகிறது. பின்னர் ஆகாயம் தெளிவாகிறது. காற்றில் புத்துயிர் தோன்றுகிறது. உலகம்மாறுதலடைகிறது.

மனுஷருடைய ஜீவியமும் இத்தகையஇயற்கை விதிப்படியே செயல்ப்படுகிறது. புயல் உண்டாகும்போது ஆகாயம் மாறிச்சுத்தப்படுத்தப்பட்டு, புது ஜீவனால் நிரப்பப்படுகிறது. மோட்ச மகிமை உலகிற்கு ஒருவாறுகொண்டு வரப்படுகிறது.

தடங்கல்கள்நம்மைப் பாடச் செய்யவேண்டும். காற்று திறந்த சமுத்திரத்தின்மேல் வீசுகையில், சப்தம்செய்கிறதில்லை. ஆனால் உயர்ந்த மரங்களின் அகன்ற கிளைகளில் மோதும்போதும், யாழ்என்னும் வாத்தியக் கருவியின் மெல்லிய நரம்புகளில் மோதுகையிலும் சப்தம் செய்கிறது.அப்பொழுது அது பலமும், இனிமையும் நிறைந்த கீதங்களைப் பாடுகிறது. விடுதலையான உன்ஆத்துமாவை ஜீவியத்தின் தடங்கலுக்கு மாறாகவும், காடு போன்ற வேதனைகளுக்கு எதிராகவும்,வாழ்வில் வரும் சிறு கஷ்டங்களுக்கு முன்னாகவும் போகச் செய். அப்பொழுது அது கீதம் பாடும்.

பறவைசிறிய கிளையில் சென்று அமரலாம்

கிளை அதன் பாரம் தாங்காது ஒடிந்தாலும்

அப்பறவை தனக்கு சிறகுகள் உண்டு என்ற தைரியத்தால்

பாடிக்கொண்டே பறந்து செல்லும்.