February

பெப்ரவரி 03

உடனே ஆவியானவர் அவரைவனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார் (மாற்.1:12).

இது தெய்வ தயவிற்குஅத்தாட்சியான ஒரு விந்தையாய் தோன்றிற்று. உடனே எப்போது? வானங்கள் திறந்துதெய்வீகச் சாந்தி புறாவைப்போலிறங்கி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில்பிரியமாயிருக்கிறேன் என்ற சப்தமும் கேட்டவுடன், இது இயற்கைக்கு மாறானதல்ல, என்:ஆத்துமாவே! நீயும் இவ்வழி சென்றிருக்கிறாய். நீ ஆனந்தமாய் உயரப்பறக்கும்சந்தர்ப்பத்தை அடுத்து உனக்கு அதிக மனத்தாங்கல் உண்டானதில்லையா? நேற்று நீ சந்தோஷத்தின்செட்டையை விரித்து, ஆகாயத்தில் பறந்து காலையில் மகிமையாய் பாடினாய். இன்று செட்டைகள்மடங்கி, உன் பாட்டு அடங்கியிருக்கிறது. பகலில் உன் பரமபிதாவின் புன்சிரிப்பாகியசூரிய வெளிச்சத்தில் களித்திருந்தாய். சாயங்காலம் வனாந்தரத்திலிருந்து என் வழிகள்தேவனுக்கு மறைக்கப்பட்டிருக்கின்றன என்கிறாய். ஆனால் என் ஆத்துமாவே திடீரென வந்த இம்மாறுதல்புரட்சிகரமானதல்ல.

உடனே என்ற வார்த்தையின்ஆறுதலை நீ அறிந்திருக்கிறாயா? ஆசீர்வாதங்களுக்குப்பின் கஷ்டம் உடனே உண்டாவதேன்? இதுஆசீர்வாதத்திற்கு அடுத்தது என்று காட்டவே.

ஜீவியத்தின்பாலைவனங்களுக்கும், கெத்சமனேக்களுக்கும் கல்வாரிகளுக்கும், உன்னை ஏற்றவனாக்கவே,கர்த்தர் உன்மேல் பிரகாசிக்கிறார். நீ இன்னும் தாழப் போவதற்குப் போதிய பெலனளிக்கவே,அவர் உன்னை உயரத் தூக்குகிறார்.

உன்னை இரவில் வெளியேஅனுப்பவும், உதவியற்றவர்களுக்கு நீ உதவி செய்யவுந்தக்கதாய் உன்னைப் பிரகாசிக்கிறார்.எல்லா சமயங்களிலும் நீ வனாந்தரத்துக்குச் செல்லக்கூடியவன் அல்ல. யோர்தானின்மகிமைக்குப் பின்பு மாத்திரமே வனாந்தரத்துக்குத் தகுதியுள்ளவனானாய். குமாரனின் தரிசனமேஉன்னை ஆவியின் பாரத்திற்குத் தகுதியுள்ளவனாக்குகிறது. ஞானஸ்நானத்தின் மகிமையேவனாந்தரத்தின் பசியைத் தாங்கச் செய்யும்.

ஆசீர்வாதத்துக்குப் பின்பேபோர் ஆரம்பமாகும். ஆவிக்குரிய ஜீவியத்திற்கென்று குறிக்கப்பட்டு, ஆத்துமாவைச் சக்திநிறைந்ததாக்கும். சோதனைக் காலம் சாமானியமானதல்ல. அக்காலத்தில் பாதாளம்கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்பதுபோலவும், நமது ஆத்துமா ஒரு வகையில் சிக்குண்டிருப்பதுபோலவும்,கர்த்தர் நம்மைச் சாத்தானின் கையிலேயே விட்டுவிட்டதுபோலவும் நமக்குத் தோன்றும். ஆனால்கர்த்தரிடத்தில் தங்கள் ஆத்துமாவை ஒப்புவித்தவர்களுக்கு அக்காலம் வெற்றிகரமாக முடியும்.பின் அக்காலம் ஆச்சரியவிதமாய் பயனளிப்பதாகவும் அறுபது மடங்கு விருத்தியடைவதாகவும்மாறும்.