February

பெப்ரவரி 02

தமது கரத்தின் நிழலினால்என்னை மறைத்து என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத் தூணியில்மூடிவைத்தார் (ஏசா.49:2).

எப்போதாவது ஒரு சமயத்தில்நிழலில் செல்லத்தான் வேண்டும். பகலின் வெளிச்சம் அதிகப் பிரகாசமாய் இருக்கிறது.அதனால் நமது கண்கள் நலிவுற்றுள்ளன. ஆகையினால் நிறங்களின் துல்லிய ரகங்களைநோயாளியின் அறையிலும் துக்கம் நிறைந்த வீட்டிலும் ஒளியிழந்த வாழ்விலும் உள்ளவைகளைப்பார்க்க முடியாதவர்களாயிருக்கிறோம்.

ஆனால் பயப்படத்தேவையில்லை!அது தேவனின் கரத்திலுள்ள நிழலே. அவர் உன்னை நடத்துகிறார். நிழலில் மட்டுமே நாம்கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்களுண்டு.

அவருடைய முகரூபம் இருட்டறையில்தான்பதிவு செய்யக்கூடும். ஆனால் அவர் உன்னைக் கைவிடமாட்டார் என்று எண்ணாதே. அவர் உன்னைத்தமது அம்பறாத்தூணியில் வைத்திருக்கிறார். ஒன்றுக்கும் உதவாதென்று உன்னைத் தூரஎறிந்துவிடவில்லை.

அவர் உன்னைத் தீவிரமாகவும்நிச்சயமாகவும் தாம் மகிமைப்படக் கூடிய வேலைக்கு அனுப்பக் கூடிய வேளைவரும்வரை அடைத்துவைக்கிறார். தனிப்பட்டுத் துக்க நிழலில் தனித்து இருப்போனே, வீரன் தன் அம்புகளைமுதுகில் கட்டி எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் வைத்து எத்தனை அருமையாய் அவைகளைப்பாதுகாக்கிறான் என்பதைக் கவனி.

சில இடங்களில் நிழலில்உள்ள செடிகள் நன்றாய் வளர்கின்றனவாம். இந்திய சோளச் செடி மித உஷ்ண கோடை இரவில்வெகு வரைவாய் வளருமாம். மதியம் தகிக்கும் வெயிலில் அவைகளின் இலகைள் சுருண்டிருக்குமாம்.ஒரு மேகம் ஆகாயத்தில் கடந்து செல்கையில் அவை சடுதியாய்த் திறக்குமாம். ஒளியில் இல்லாதஇரகசியம் நிழலிலிருக்கிறது. உலகில் நட்சத்திர அழகு, இருள் ;காயத்தில் சூழும்போதுதான்காணப்படுகிறது. வெயியில் பூக்காத பல செடிகள் நிழலில் நன்றாய்ப் பூக்கும். மூடுபனியும்மேகமும் நிழலுமுள்ள நாட்டில் பசுமை அதிகாரமுண்டு. பூக்காரார்கள் காலையில் மலரும் பூவைமாத்திரமல்ல, அந்திமந்தாரை என்ற பூவும் வைத்திருக்கிறார்கள். அந்திமந்தாரை,சூரியனுள்ள மத்தியானத்தில் அழகாய் விளங்காது. சாயங்கால நிழலுண்டாகும்போது அழகாய்காட்சியளிக்கும்.

நமது ஜீவியம்முழுவதிலும்

சூரியஒளியே நிறைந்திருந்தால்,

நமதுமுகங்கள் ஒரு முறையாவது

குளிர்ந்த மழைத்துளிகள் நம்மேற்படமாட்டாவா

எனஏங்கி நிற்கும்