May

மே 21

மே 21 இராக்காலத்தில் என்சங்கீதத்தை நான் நினைத்து (சங்.77.6). பாடும் பறவைஒன்றைப்பற்றி ஒரு சயம் ஒரு புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். அதன் சொந்தக்காரார்விரும்பும் இசையை அதன் கூட்டில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்பொழுது பாடாதாம். தெளிவாகத்தொடர்ந்த இசையாக இப்பொழுது அது பாடாது. ஆனால், காலை ஒளியை மறைத்து, அதன் கூட்டைமுழுமையாக மூடிவிட்டால், அது தானாகவே முழுக்கீதத்தையும் பாடிவிடுமாம். மக்களிலும் அநேகர் இருளாக்கும்நிழல்கள் வரும் வரையும் பாடக் கற்றுக்கொள்ளமாட்டார்கள். கதைகளில் வரும் நைட்டிங்கேல்பறவை, ஒரு முள் முன்னால் தன் மார்பை பதித்து…

May

மே 20

மே 20 பிதா எனக்குக்கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ? (யோ.18:11). ஓர் ஓவியன் தான் ஓவியம்தீட்டுகையில், பல வர்ணங்களைத் தன் தூரிகையில் தொட்டு பலமுறைகள் ஓவியத்தில் வரைந்துஅதைச் சிறப்பானதாக்குகிறான். அதைவிட இன்னும் அதிகமாகத் தாம் விரும்பும் சிறப்பானமுறையில் நம்மை உருவாக்குவதற்குப் பல துன்பங்களையும் சூழ்நிலைகளையும் ஆண்டவர்அனுப்புகிறார். அவர் தரும் கசப்பான அவ்வனுபவங்களை நாம் தகுந்த முறையில்ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் இத் துன்பங்கள்நீங்கினவுடனே, நம் உணர்ச்சிகள் அடக்கப்பட்டுப் போய்விட்டால், ஆன்மாவுக் கேற்படும்கேடு திருத்தமுடியாதது ஆகிவிடும். ஏனெனில், எத்தனை பெரிதான…

May

மே 19

மே 19 அவன்இப்படிச் சொல்லி முடிக்குமுன்னே…. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் தம்முடைய கிருபையையும்,தம்முடைய உண்மையையும்… விட்டு நீக்கவில்லை என்றான் (ஆதி.24:15,27). சரியான ஜெபம் ஒவ்வொன்றிற்கும் அதைச் சொல்லி முடிக்கு முன்னரே பதில் கிடைத்துவிடும்.இது ஏனென்றால் கிறிஸ்துநாதருக்கும் அவருடைய சித்தத்திற்கும் இசைந்து விசுவாசத்தோடு நாம்எதைக்கேட்டாலும், நமக்கு அதைத் தருவேனென்று ஆண்டவர் நமக்கு வாக்குத் தந்திருக்கிறார். ஆண்டவருடைய வார்த்தை என்றும் தவறாது. ஆகையால், இச் சிறு நிபந்தனைக்கு உட்பட்டு நாம்வேண்டிக்கொள்ளும் ஒவ்வொரு ஜெபமும், நாம் ஜெபிக்கும்பொழுதே அவருடைய முன்னிலையில்நமக்கு அனுக்கிரகப்பட்டாயிற்று.…

May

மே 18

மே 18 பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள்பலத்துக்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. நாங்கள் எங்கள்மேல்நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருக்கத்தக்கதாகமரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம் (2.கொரி.1:8-9). அளவுக்குமிஞ்சி நெருக்கப்பட்டோம், அதிகமதிகமாக நெருக்கப்பட்டோம், உடலில் நாம் நெருக்கப்பட்டோம், உடல் ஆன்மாவிலும் நெருக்கப்பட்டோம், மனதிலும் நெருக்கப்பட்டோம் அலைகளெழும்பி, மனம் வேலைசெய்ய மறுக்கும்வரை. எம் எதிரிகளால் நெருக்கப்பட்டோம், எம் நண்பர் தம்மாலும் நெருக்கப்பட்டோம், நெருக்கத்தாலேயே வாழ்வு முடியும்போல் நெருக்கத்தின்மேல் நெருக்கப்பட்டோம். இறைவன் உதவி…

May

மே 17

மே 17 நாற்பது வருஷம் சென்ற பின்பு…. கர்த்தருடைய தூதன்… அவனுக்குத்தரிசனமானார்…. பின்னும் கர்த்தர் அவனை நோக்கி… நீ வா நான் உன்னை எகிப்திற்குஅனுப்புவேன் என்றார் (அப்.7:30-34). நமதுவேலைகளிலிருந்து ஆண்டவர் சிறிது காலத்திற்கு நம்மைப் பிரித்து வைக்கிறார். அவர் நம்மைஅமைதியாயிருக்கச் செய்து, நமது பணிக்கு நாம் செல்லுமுன் சில காரியங்களைக்கற்றுக்கொள்ளச் செய்கிறார். இவ்வாறு நாம் காத்திருக்கும் காலம் வீணான காலமல்ல. ஒரு வீரன்தன் எதிரிகளிடமிருந்து தப்பத் தன் குதிரைமீதேறி ஓடிக்கொண்டிருந்தான். அப்பொழுதுஅவனுடைய குதிரைக்கு இலாடம் அடிக்க வேண்டியிருந்தது.…

May

மே 16

மே 16 தானியேலே, பயப்படாதே. நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன் தேவனுக்குமுன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும் உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி…… உன்வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன். பெர்சியா இராஜ்யத்தின் அதிபதி இருபத்தொருநாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான் (தானி.10:12-13). இவ்வசனத்தின் ஜெபத்தைக் குறித்த சிறந்த பாடம் ஒன்றிருக்கிறது. ஜெபத்திற்குச்சாத்தான் இழைக்கும் நேரடியான தடையையும் நாம் இங்கு காணலாம். தானியேல்இருபத்தொரு நாட்களாக உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தான். ஜெபிப்பதற்கு மிகவும்கடினமாக அவனுக்கு இருந்தது. இது அவன் ஒரு கெட்ட மனிதனாக இருந்ததினாலல்ல. அவனுடைய…

May

மே 15

மே 15 காற்றடித்து மேகம் விலகிடவே உள்ளே தோன்றும் ஒளியை (மானிடர்) பார்க்கமுடியுமோ? (யோபு 37:21). மேகங்கள்உலகிற்கு அழகூட்டுமளவு இத்தாலி நாட்டில் பொதுவாகக் காணப்படும் நீலநிறவானம் மேகங்களின்மாட்சிக்கு ஈடாகாது. மேகங்களின் சேவையில்லாவிட்டால் இவ்வுலகம் பாழ்நிலமாகிவிடும்.மனித வாழ்க்கையிலும் மேகங்கள் உண்டு. சில சமயங்கள் அவை நிழல் தந்துபுத்துயிரளிக்கின்றன. சில நேரங்களில் அவை அனைத்தையும் மூடி இருளாக்கிவிடுகின்றன. ஆனால்,எல்லா மேகங்களுக்கும் ஒளிதரும் ஒளி உண்டு. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன். நாம்மேகங்களின் மேல்புறத்தைக் காணக்கூடுமானால், அலைகள் போலத்தோன்றும் அவற்றின்…

May

மே 14

மே 14 தேவன் சொன்னபடி…அந்நாளில்தானே (ஆதி.17:23). கீழ்ப்படிதலில் ஒரேஒருவகைதானுண்டு. அது உடனடியாகக் கீழ்ப்படிதலே. காலதாமதாமாகக் கீழ்ப்படிதல்கீழ்ப்படியாமையே. ஆண்டவர் நம்மை ஒவ்வொரு கடமையைச் செய்ய அழைக்கும்பொழுதும், நம்முடன்ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள முன் வருகிறார். கடமையை நிறைவேற்றவது நமது பங்கு. அவருடையபங்காக அவர் நமக்குச் சிறப்பு ஆசீர்வாதங்களை அருளுகிறார். நாம் கீழ்ப்படிவதில் ஒரேஒரு முறைதான் உண்டு. அது ஆபிரகாம் செய்ததுபோல அந்நாளிலேயே கீழ்ப்படிவதுதான். நாம்தவறிப்போய்விடாதபடிக்கு, பல வேளைகளில் நாம் நமது கடமைகளைப் பின்தள்ளி விட்டுவிட்டு,பின்னர் நம்மாலியன்றவரை அதை நிறைவாகச் செய்து…

May

மே 13

மே 13 நாம் ஏற்றபடிவேண்டிக்கொள்ளவேண்டியது இன்னதென்று அறியாமலிருக்கிறபடியால்…. (ரோ.8:26). நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தில்நம்மை அதிகமாகக் குழப்பமடையச் செய்பவை நமது ஜெபங் களுக்கு கிடைக்கும் பதில்களே.நமக்குப் பொறுமை வேண்டுமென்று நாம் வேண்டிக்கொள்கிறோம். ஆனால் நமது தந்தை நமக்குத்தாங்கமுடியாத தொல்லைகளைத் தருபவர்களை அனுப்புகிறார். ஏனென்றால் உபத்திரவம் பொறுமையையும்உண்டாக்குகிறது என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். பணிவானநடத்தையுள்ளவர்களாக நாம் ஆகவேண்டும் என்று ஜெபிக்கிறோம். அப்போது நமக்குத் துன்பங்கள்வருகின்றன. ஏனெனில் நாம் துன்பப்படும் காரியங்களினாலேதான் கீழ்ப்படிதலைக்கற்றுக்கொள்கிறோம். தன்னலமின்மைக்காகஜெபிக்கிறோம். ஆனால் ஆண்டவரோ நாம் மற்றவர்களைப்பற்றிச் சிந்தித்து, நம்மைத்தியாகம்…

May

மே 12

மே 12 விசுவாசிக்கிறவனுக்குஎல்லாம் கூடும் (மாற்.9:23). இவ் வசனத்தில் எல்லாம்என்று கூறப்படும் காரியம் எளிதில் கிடைப்பதல்ல. ஏனெனில் ஆண்டவர் எப்பொழுதும் நமக்குவிசுவாச வழியையே கற்றுத்தர விரும்புகிறார். விசுவாசத்தைப் பயிற்சிபெறுவதில்லவிசுவாசத்தைச் சோதிக்கும் சோதனைகளும் இடம் பெறவேண்டும். விசுவாசத்தின் கட்டுப்பாடுகள்,விசுவாசத்தின் வளர்ச்சியின் வெவ்வேறு படிகளில் வளர்ச்சி, விசுவாசத்தில் வெற்றி இவற்றிற்கும்பயிற்சி பெற இடம் இருக்கவேண்டும். விசுவாசத்தின்கட்டுப்பாடுகளின் மூலமாகவே ஏற்படுவது ஒழுக்கமுறை வளர்ச்சி. உமது வேண்டுதலை உமதுஆண்டவரிடத்தில் ஏறெடுத்து விட்டாய். ஆனால், பதில் வரவில்லை. நீ செய்யப்போவதென்ன? இறைவாக்கினைநம்பிக்கொண்டே இரு. நீ…