March

மார்ச் 31

எதிர்காற்றாயிருந்தபடியால் (மத்.14:24). மார்ச் மாதத்தில் காற்றுஅகோரமாயிருக்கும். அவைகள் என் ஜீவியத்தில் மிகக் குழப்பான காலத்தைக்குறிப்பிடவில்லையா? இப்படிப்பட்ட காலங்களைக் குறித்து நான் அறிந்துள்ளபடியால் நான்சந்தோஷப்படவேண்டும். எப்போதும் மத்தியானம்போலிருக்கும் தாமரை நாடு என்றழைக்கப்படும்நாட்டிலும், காற்று, ஒருபோதும் பலமாக வீசாத அவிலியன் பள்ளத்தாக்கின் புல்மைதானத்திலும் தங்குவதைப் பார்க்கிலும் மழை பெய்து வெள்ளம் ஏற்படுவது நலம்.சோதனையாகிய புயல்கள் கடுமையாகத் தோன்றுகின்றன. ஆனால் அவை என்னை ஊக்கமாய் ஜெபி க்கஏவுகிறதில்லையா? அவை என் குணத்தைச் சீர்படுத்திச் செல்வதில்லையா? உற்றாரை இழக்கும் புயல்கடுரமானதே. ஆனால் பிதா…

March

மார்ச் 30

இதோ, நெருப்பைக்கொளுத்தி, அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள்அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின ஜுவாலையிலும் நடவுங்கள். வேதனையில் கிடப்பீர்கள்.என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும் (ஏசா.50:11). தாங்கள் இருட்டில்நடந்துகொண்டிருந்து, தாங்களே வெளிச்சத்திற்கு வரப் பிரயாசப்படுகிறவர்களுக்கு இது ஒருகடுமையான எச்சரிக்கை. அவர்கள் நெருப்பைக் கொளுத்தி, அ;கினிப்பொறியால்சூழப்பட்டிருக்கிறவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இதன் அர்த்தம் என்ன? நாம் இருளில் இருக்கும்போது,தேவனை நம்பி அவரைச் சார்ந்திராமல் நாம் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் சோதனையானது, அவர்நம்மைக் கைதூக்கிவிட இடங்கொடாமல் நாமே நம்மைக் கைதூக்கப் பிரயாசப்படுவது…

March

மார்ச் 29

காட்டுப் புஷ்பங்கள்எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள் (மத்.6:28). ஆதிகாலத்து சந்நியாசிஒருவர் தனக்கு எண்ணெய் வேண்டுமென்று ஒரு ஒலிவ மரக்கன்றை நட்டார். கர்த்தாவே, இதன்மெல்லிய வேர்கள் குடித்து இம்மரம் பெரிதாக இதற்கு மழை தேவை. ஆகவே, சிறு தூறலை அனுப்பும்என்று ஜெபித்தார். தேவன் மழையைப் பெய்யச் செய்தார். ஆண்டவரே, என் மரத்திற்கு சூரியவெப்பம் வேண்டும். சூரியனை அனுப்பும்படி உம்மை வேண்டுகிறேன் என்றார். மழையால் நனைந்தமேகங்களினூடே சூரியன் பிரகாசித்தது. இப்பொழுதும் அதன் பாகங்கள் உறுதிபடக் கடும் பனிவேண்டும் என்றார். இதோ,…

March

மார்ச் 28

சம்பவிப்பதுஎன்னவென்றால், சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள், யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில்,மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்(யோசு.3:13). தைரியமான லேவியர்! அவர்கள்கால்களில் தண்ணீர் படும்வரை தண்ணீர் பிளவுபடவில்லை. அவர்கள் உடன்படிக்கைப் பெட்டியைநதிக்குள் தூக்கிச் சென்றார்கள். இதனால் இவர்கள் செய்கை வியத்தக்கதே. கர்த்தர்வேறொன்றும் வாக்குச் செய்யவில்லை. கர்த்தர் விடாப்பிடியான விசுவாசத்தையேகனப்படுத்துகிறார். வாக்குத்தத்தமும் அது ஒன்றையே எதிர்பார்க்கிறது. சுற்றிலும் பார்த்துநின்ற ஐனங்கள், அவர்கள் நடந்து செல்வதைப் பார்த்து, நான் அப்படிப்பட்ட…

March

மார்ச் 27

ஆதலால் இக்காலத்துப்பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்றுஎண்ணுகிறேன் (ரோ.8:18). இங்கிலாந்தில் ஒருதிருமணத்தில், ஒரு விசேஷித்த காரியம் நடந்தது. பத்து வயதாயிருக்கும்போது, ஒரு விபத்தால்கண்ணிழந்து, உயர்தரக் கல்லூரியில் படித்துப் பட்டங்கள் வாங்கி, ஓர் உன்னதபதவியிலிருந்த பணக்கார வாலிப மாப்பிள்ளை, ஓர் அழகிய பெண்ணை மணந்தான். அவள் முகத்தைஅவன் பார்த்ததில்லை. அவன் கலியாணத்திற்குச் சற்று முன்புதான் கைதேர்ந்த வைத்தியரிடம்சிகிச்சை பெ;றுக்கொண்டு வந்தான். அதன் பலன் திருமணத்தன்றே தெரிந்தது. அந்த நாள் வந்தது.விருந்தினராலும், வெகுமதிகளாலும் ஆலயம் நிறைந்தது. நாட்டின்…

March

மார்ச் 26

நீ இருக்கிற இடத்திலிருந்துவடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார். நீ பார்க்கிற இந்தப்பூமி முழுவதையும் நான் உனக்கு…. (கொடுப்பேன்). (ஆதி.13:14-15) பரிசுத்த ஆவியானவர் தாம்நிறைவேற்ற நோக்கம் கொள்ளாத எந்த உணர்ச்சியையும் உன்னில் உருவாக்கமாட்டாh. உன்விசுவாசம் எழும்பி, உயரப் பறந்து, காணும் பூமியையெல்லாம் உரிமையாக்கிக்கொள்ளட்டும். விசுவாசக் கண்களோடு நீகாண்பவை யாவும் உன்னுடையவை. நீ பார்க்கக்கூடிய தூரம் பார். ஏனென்றால் அவை யாவும்உன்னுடையவையே. நீ கிறிஸ்தவனாயிருக்க என்னென்ன குணம் தேவையென்று விரும்புகிறாயோஅவைகளும், நீ கர்த்த்தருக்காக என்னென்ன செய்ய வேண்டுமென்று…

March

மார்ச் 25

விசுவாசமில்லாமல்தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர்உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிப்பார் என்றும்விசுவாசிக்கவேண்டும் (எபி.11:6). நம்பிக்கையற்றுத்தவிக்கும் நாட்களுக்குரிய விசுவாசம். வேதத்தில் இப்படிப்பட்டஅநேக நாட்கள் உண்டு. அதிலுள்ள பாடல்கள் விசுவாசிகளால் ஊக்கமாய் எழுதப்பட்டவைகளே.தீர்க்கதரிசனங்கள் விசுவாசத்தைப் பற்றியவையே. விசுவாசத்தின் மூலமாகவே வெளிப்படுத்தல்உண்டாயிற்று. நம்பிக்கையிழந்தநாட்களே ஒளிக்குச் செல்லக் கால்வைக்கும் கற்கள். அவைகள் கர்த்தரின் தருணங்களும், மனிதனுக்கு ஞானமளிக்கும் கல்விச் சாலைகளுமாம். சங்கீதம் 107ல் அன்பின்விருந்தைக் குறித்து ஒரு பழைய ஏற்பாட்டுக் கதை இருக்கிது. இரட்சிப்பு கிடைத்த…

March

மார்ச் 24

பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாயிருக்கிறவரே, உன்தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்றுஎன்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,… என்னை தப்புவியும். நான் பயந்திருக்கிறேன்என்றான் (ஆதி.32:9-11). மேற்குறித்துள்ளவேண்டுதலில், அநேக ஆரோக்கிய நற்குறிகளைக் காண்கிறோம். நம்முடைய ஆவி துன்பம் என்னும்உலையில் காய்ச்சப்படும்பொழுது இவ்விதமாய் ஜெபிக்கலாம் என்ற முறையைக் காட்டுகிறது. நீர் சொல்லியிருக்கிறீர்என்று முதலில் அவருடைய வாக்குத்தத்தை எடுத்துரைக்கிறான் (ஆதி.32:9,12). இவ்விதமாக இரண்டுமுறை சொல்லுகிறான். அப்படியானால், தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களால், நாம்…

March

மார்ச் 23

யுத்தத்தில் அகப்பட்டகொள்ளைகளில் எடுத்து கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப், பரிசுத்தம் என்றுநேர்ந்துகொண்ட(hர்கள்) (1.நாளா.26:26-27). பௌதீக தன்மை பூமியின்ஆழங்களிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் புதைந்து கிடக்கிறது. அவைகள் அநேகமாயிரம்யுகங்களுக்குமுன் கடும் உஷ்ணத்தால் எரிக்கப்பட்ட பெரிய காடுகளாகும். அதுபோல ஆவிக்குரியசக்தி நம் இருதயத்தின் ஆழத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. நமக்கு விளங்காத வேதனையின்மூலம் உண்டானது அச்சக்தி. நாம் மோட்சப் பிரயாணம்என்னும் புத்தகத்தில் காணப்படும் தைரிய நெஞ்சன் போல ஆகும்படியாக நம்முடைய சோதனைகள்பயன்படுகின்றன. சோதனைகளின் வழியாய் பரம இராஜாவின் பட்டணத்திற்கு வெற்றிகரமாய்நம்மோடுள்ள இதர மோட்சப் பிரயாணிகளை அழைத்துச்…

March

மார்ச் 22

நாற்பது வருடம்சென்றபின்பு சீனாய் மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிறஅக்கினியிலே அவனுக்குத் தரிசனமானார். எகிப்திலிருந்து என் ஜனத்தின் உபத்திரவத்தை நான்பார்த்து அவர்கள் பெருமூச்சைக் கேட்டு அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன். ஆகையால் நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார் (அப்.7:30,34). பெரிய ஊழியத்திற்காகவெகுகாலங் காத்திருக்க வேண்டியிருந்தது. கர்த்தர் தாமதிக்கும்போது அவர் செயலற்று இருப்பதில்லை.தம்முடைய அயுதங்களைத் தயார் செய்கிறார். அவர் நமது பயத்தை உறுதி பெறச் செய்கிறார்.குறிப்பிட்ட வேளையில் நாம் நம்முடைய வேலைக்கு ஆயத்தமாயிருப்போம். நசரேயனாகிய…