June

யூன் 30

யூன் 30 அமைதலுண்டாயிற்று,அப்பொழுது நான் ஒரு மெல்லிய சத்தம் கேட்டேன் (யோபு 4:16). இருபதாண்டுகளுக்கு முன் என்நண்பர் ஒருவர், மெய்ச்சமாதானம் என்ற ஒரு புத்தகத்தை என்னிடம் தந்தார். மத்தியகாலத்தில் பிரபலமாயுள்ள ஒரு செய்தியை அது தந்தது. நாம் மட்டிலும் அவர் குரலைக் கேட்கும்அளவுக்கு அமைதியாய் இருந்தால், ஆண்டவர் நமது உள்ளத்தின் ஆழத்தில் நம்முடன்பேசுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதே அச்செய்தி. அது ஓர் இலகுவான காரியம்என்று எண்ணினேன் நான். அது, முதல் நான் அமைதியாயிருக்கப் பயிற்சிசெய்ய முயற்சித்தேன்.ஆனால் நான் ஆரம்பித்தவுடனே,…

June

யூன் 29

யூன் 29 அங்கே இராட்சதரையும்கண்டோம் (எண்.13:33). ஆம், அவர்கள் இராட்சதரைக்கண்டார்கள். ஆனால் காலேபும் யோசுவாவும் ஆண்டவரைக் கண்டார்கள். ஐயம் நிறைந்தவர்கள்,எங்களால் மேலும் போக முடியவில்லை என்பார்கள். விசுவாசம் உள்ளவர்களோ, நாம் மேலேசென்று அதனைப் பிடித்துக்கொள்வோம். ஏனெனில் அது எங்களால் முடியும் என்று கூறுவார்கள். இராட்சதர் என்பது பெரியகஷ்டங்களைக் குறிக்கும். இராட்சதர் எங்கும் மறைந்திருக்கிறார்கள். நமது சமுதாயவாழ்க்கையில், நமது திருச்சபைகளில், நமது குடும்பங்களில், நமது இதயங்களிலேயே இருக்கின்றனர்.அவர்கள்மீது நாம் வெற்றியடையவேண்டும். இல்லாவிடில் கானானின் இராட்சதரைப்பற்றிச்சொல்லப்பட்டதுபோல அவர்கள் நம்மையே விழுங்கிவிடுவார்கள்.…

June

யூன் 28

யூன் 28 … இதோ பரலோகத்தில்திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன் (வெளி 4:1). மத்திய தரைக்கடலில்,கிரேக்க நாட்டுக்கருகிலுள்ள பாறையான ஒரு தீவு பத்மு தீவென்பது. அப்போஸ்தலனாகிய யோவான்,தன் ஆண்டவருக்காகக் கிறிஸ்து நாதருக்காக அளித்த சாட்சியின் நிமித்தமாகத் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். அது மானிடர் வாழ்வதற்கு எற்ற இடமே இல்லை. அவர் எபேசுசபையில் உள்ள தமக்கருமையானவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டார். சபையாரோடு சேர்ந்துஆண்டவரை ஆராதிக்க அனுமதிக்கப்படவில்லை. விரும்பத்தகாதவர்களோடு சிறையிலிருந்தார். இவ்வாறானசூழ்நிலையில்தான் அவருக்கு மோட்சத்தின் தரிசனக் காட்சிகள் அளிக்கப்பட்டன. அவருக்குஒரு கதவு திறக்கப்பட்டது. யாக்கோபு…

June

யூன் 27

யூன் 27 உன் தேவன் உனக்குப்பலத்தைக் கட்டளையிட்டார் (சங்.68:28). தீர்மானத்துடனும் உறுதியானசெயல்பாட்டுத் திறனுடனும் நமது வாழ்க்கையின் செயல்களைச் செய்ய நமக்கிருக்கும் ஆரம்பப்பண்பாற்றலை ஆண்டவரே நமக்குத் தருகிறார். உள்ளான மனிதனில், நாம் ஆவியானவரால்வலிமையான ஆற்றல் உள்ளவர்களாக்கப்படுகிறோம். இவ்வாற்றல் நமக்குத் தொடர்ந்துகிடைக்கிறது. இவ்வாற்றலை ஒருவரும் குறைத்திட முடியாது. உன் நாட்களுக்குத் தக்கதாய்உன் பெலனும் இருக்கும் (உபா.33:25). பெலன் – மனதின் பெலன், அன்பின் பெலன்,நியாயத்தீர்ப்பின் பெலன், மேலான நோக்கங்களின் செயலாற்றல்களின் பெலன். நான் முன்னேறிச் செல்ல,கர்த்தர் என் பெலனாயிருக்கிறார். முடிவில்லா…

June

யூன் 26

யூன் 26 சிலர்விசுவாசியமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? என் அற்பமான வாழ்க்கையில்ஒவ்வொரு சிறு துக்கமும் என் அவநம்பிக்கையால் மாத்திரமே வந்தது என்று நான்நினைக்கிறேன். என் கடந்த காலப் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டன. நிகழ்காலத்திற்கேற்ற பலன் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. வருங்காலமும் பிரகாசமாகவேகாணப்படுகிறது. ஏனெனில் நிலைமாறா உண்மைகள் எனது எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்பமாறுவதி;லை. அவநம்பிக்கையினால் நான் தளாச்சியடையும்போதும் அவை தளர்வதில்லை. ஏனெனில்அவற்றின் அடித்தளம் கன்மலையாகிய கிறிஸ்து மேலும், அவற்றின் கொடுமுடி நித்தியத்தாலும்நிலைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் நான் எப்போதும் விசுவாசித்தால்மகிழ்ச்சியடையாமல் இருக்கமுடியுமா?…

June

யூன் 25

யூன் 25 … புறப்பட்டுப் போங்கள், என்று இஸ்ரவேல்புத்திரருக்குச் சொல்லு…. (யாத்.14:15). ஆண்டவருடைய அருமைப் பிள்ளையே, பின்வரும்,காட்சியை உன் மனக்கண்முன் கொண்டுவந்து பார். எத்தனை மகத்தான வெற்றிப் பவனி அது!ஆபத்தில் அகப்பட்ட பெற்றோர், பெரியோரின் அமைதியினாலேற்பட்ட அச்சத்தினின்றுவிடுதலை பெற்ற குழந்தைகளின் ஆரவாரம். மரணத்தைக் காட்டிலும் கொடிதான ஒரு நிலையிலிருந்துஅதாவது அடிமைத்தனத்திற்குத் திரும்பும் நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டதால்மாதர்களினூடே ஏற்பட்ட மட்டற்ற மனக்கிளர்ச்சி, அதனால் அவர்கள் ஏற்படுத்தியபேரிரைச்சல். ஆண்கள் மத்தியில் தாங்கள், தங்களை முன் நின்று நடத்திய மோசேக்கும்,அற்புதமாகச் செங்கடலைப் பிளந்து…

June

யூன் 24

யூன் 24 … என் கரங்களின்கிரியைகளைக்குறித்து எனக்குக் கட்டளையிடுங்கள் (ஏசா.45:11). தந்தையே நான்ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று இயேசுநாதர் கூறியபோது இதே கருத்தைத்தான் கூறினார். தனதுவாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் இருந்த யோசுவா, மறைந்துகொண்டிருந்த ஆதவனை நோக்கி,சூரியனே, அசையாது நில், என்று சூரியனுக்கு கட்டளையிட்ட பொழுது இதே தோரணையில்தான் கூறினான். மூன்றரை ஆண்டுகள் மழைபெய்யாதபடி வானத்திற்குக் கட்டளையிட்டபோதும், பின்னர் வானத்தைத்திறந்துவிட்டபோதும்எலியா இதே முறையில்தான் பேசினான். மரணத்தருவாயிலிருந்தமெலன்கிதான் என்பவருக்கருகிலிருந்த மரண தூதனை மார்ட்டின் லூத்தர் ஜெபத்தால்தடுத்தபொழுது இவ்வதிகாரத்தைத்தான் பயன்படுத்தினார். இத்தகைய அற்புதமானஉறவினுக்குத்தான் நம்மை ஆண்டவர்…

June

யூன் 23

யூன் 23 ….அப்பொழுது, பேதுருபடகை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக, ஜலத்தின் மேல் நடந்தான். காற்றுபலமாயிருக்கின்றதைக் கண்டு பயந்து, அமிழ்ந்து போகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும்என்று கூப்பிட்டான் (மத்.14:29-30). பேதுருவுக்கு அவனுடைய ஐயங்களின்மத்தியிலும் சிறிதளவு விசுவாசம் இருந்தது. ஆதலால் அவன் கதறியும் ஓடியும் இயேசுவண்டைசேர்ந்தான் என்று ஜான் பனியன் கூறுகிறார். காணும் காட்சி ஒரு தடையாக இருப்பதைஇங்கு காண்கிறோம். கடலில் இறங்கி இயேசுநாதரண்டை புறப்பட்டுப்போக அவன் புறப்பட்டபின்,அவன் அலைகளைப்பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை. அவனுக்கு இருந்திருக்கவேண்டியகவலையெல்லாம் கிறிஸ்துநாதர் நின்ற…

June

யூன் 22

யூன் 22 அன்போ, சகலபாவங்களையும் மூடும் (நீதி.10:12). இந்த அன்பை நாடுவதில்கருத்தாயிருங்கள். உனது தொல்லைகளைஆண்டவரிடத்தில் எடுத்துக்கூறு. சில நாட்களுக்கு முன்னே நாளேடு ஒன்றில் பக்தியுள்ள ஓர்அம்மையார் தனது சொந்த அனுபவத்தை எழுதியிருந்ததை வாசித்தேன். அது என்னை மிகவும்கவர்ந்ததால் அதை ஈண்டு குறிப்பிடுகிறேன். உறக்கமின்மையால் நான் ஓர்இரவில் மிகவும் அவதிப்பட்டேன். எனக்கு இழைக்கப்பட்ட ஒரு கொடிய அநீதியான செயல்என்னை வாதித்துக்கொண்டிருந்தது. எல்லாப் பாவங்களையும் மூடும் அன்பு என் இதயத்திலிருந்துஎங்கோ ஓடிப்போயிருந்தது. அன்பு சகலத்தையும் மூடும் என்று குறிப்பிட்ட கட்டளைக்குக்கீழ்ப்படிய…

June

யூன் 21

யூன் 21 ……. அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு….. (மாற்.2:1). பவளப்பாறைகளை உருவாக்கும் சிறு பூச்சிகள் பாலிப்ஸ் என்றழைக்கப்படும். அவை கடல்நீருக்கடியிலேயே செயல்ப்படுகின்றன. அப்பொழுது அவைகள், தாம் ஒரு புதிய தீவின்அடித்தளத்தை அமைக்கிறோமென்றோ, அத்தீவின்மீது நாள் போக்கில் செடிகளும், விலங்குகளும்வாழுமென்றோ, அங்கு கடவுளுடைய பிள்ளைகள் பிறந்து, இயேசுநாதருடன் உடன் சுதந்தரவாளிகளாகநித்திய மகிமையிலிருக்க வளருவார்களென்றோ கனவுகள்கூடக் காணுவதில்லை. ஆண்டவருடைய அணிவகுப்பில் உனது இடம், தனித்ததாகவும், மறைக்கப்பட்டும் இருந்தால்,அதைக்குறித்து நீ முறுமுறுக்காதே. அவர் உன்னை அங்கு வைத்துள்ளார். அதை விட்டும்,…