July

யூலை 15

யூலை 15 …நம்முடைய விசுவாசமேஉலகத்தை ஜெயிக்கும் ஜெயம் (1.யோ.5:4). இனியகால நிலையதனில், இறைவனைநேசிப்பது எளிது மலர்சொறி பள்ளத்தாக்கிலும், மன்னும்ஒளியுள்ள மாமலையிலும், குளிர்நீங்கிய கோடை தன்னில் குளிர்மணந்தரும் மலர்களிடையில் அவர்சித்தம் செய்திட பெருமுயற்சி வேண்டுவதில்லை. மழைபெய்து துன்புற்றிருக்கையில், மந்தாரமாய் மேகம் மூடுகையில், சாலைஇருண்டிருக்கையிலும், மாலைவிண்மீன்கள் மறைகையிலும், செந்நிறக்காலை மாறிவரினும் சென்மை நெறி நின்றிடல் கடினம், அண்ணல்தம் வார்த்தைக்கே நாம் அடிபணிதலும் கடினமாம். பறவைகள் மரங்களில் வந்து பாடிடுங்காலம் நம்புவதெளிது. அவைபாடும் பாடல் கேட்குது வீட்டில் அவைதரும் கீதம் இதயம்…

July

யூலை 14

யூலை 14 … பலியைக்கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள் (சங்.118:27). தேவனுடைய பலிபீடம் உன்னைஅழைக்கவில்லையோ? நாம் நமது ஒப்படைப்பினின்று பின்வாங்கி ஓடிவிடாதபடி கயிறுகளால்பலிபீடத்தில் கட்டிவைக்கப்படவேண்டும் என்று வேண்டிக்கொள்ளவேண்டாமா? வாழ்க்கை அழகாகஒளிமயமாயிருக்கும்பொழுது நாம் சிலுவையை நாடுகிறோம். வாழ்க்கை மந்தாரமாகிவிடும்பொழுதுநாம் சிலுவையை விட்டு விலகி ஓட ஆசிக்கிறோம். ஆதலால் நாம் கட்டப்பட்டிருப்பது நலமாகும். தூய ஆவியானவரே, என்னைக் கட்டி வைக்கமாட்டீரோ? சிலுவையைப்பற்றிய ஆவலை எனக்குத்தரமாட்டீரா? அதை விட்டு என்றுநான் விலகாதபடி செய்யமாட்டீரோ? மீட்பு என்னும் சிவப்புக்கயிறாலும், அன்பு என்னும்பொற்கயிறாலும்…

July

யூலை 13

யூலை 13 …. இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல்அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்….. (ரோ.4:17). இவ்வார்த்தைகளின் பொருள்யாது? ஏன் அபிரகாம் இக்காரியத்தைச் செய்தார்? அவர் ஆண்டவரில் விசுவாசம் வைத்தார்.அந்த வயதில் ஆபிரகாம் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆவது நடக்கக் கூடாத காரியம். அதுசம்பவிக்கக் கூடியதல்ல. ஒரு குழந்தை வரும் என்ற அடையாளம் ஏதுமின்றியே ஆண்டவர் அபிரகாமைபல ஜாதிகளின் தந்தை என அழைத்தார். ஆண்டவர் அவரைத் தந்தை என்று அழைத்தால் தானும்தன்னை அவ்வாறு அழைத்துக்கொண்டார். அதுதான் விசுவாசம். ஆண்டவர் கூறியதை நம்பி அதைமெய்யென வற்புறுத்துவது…

July

யூலை 12

யூலை 12 நான் போகும் வழியை அவர்அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன் (யோபு 23:10). விசுவாசம் புயல்களுக்கிடையேவளருகிறது. நான்கே வார்த்தைகள்தான். ஆயினும் புயல்களிலடிபட்ட ஆத்துமாவுக்கு எத்தனைகருத்துச் செறிந்த சொற்கள். விசுவாசம்சோதிக்கப்படும்பொழுது காணாதவற்றைக் காணும்படியும், நடக்க இயலாக் காரியங்களைநடைமுறைக்குக் கொண்டுவரக்கூடியதுமான ஆண்டவரால் கொடுக்கப்பட்ட இயல்பான திறமையாகமாறுகிறது. அது இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளிலேயே செயலாற்றுகிறது. ஆனால் அது பயல்களிடையேவளருகிறது. அதாவது ஆன்மீகச் சூழ்நிலைகளில் குழப்பங்கள் ஏற்படுகையில் விசுவாசம்வளருகிறது. இயற்கையின் கூறுகளில் போராட்டங்கள் எற்படுகையில், புயல்கள் ஏற்படுகின்றன.அதேபோல், ஆன்மீக உலகிலும்…

July

யூலை 11

யூலை 11 தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளைக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று (1.இராஜா.17:7). கலங்காத மனதுடனும், உறுதியானஉள்ளத்துடனும் ஒவ்வொரு நாளும் எலியா வற்றிப்போய்க் கொண்டிருந்த அந்த ஆற்றைக்கவனித்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி அவருடைய விசுவாசம் தளர்ந்துவிடும்போலிருந்தது.ஆனாலும், சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் அவருக்கும், அவருடைய ஆண்டவருக்குமிடையே உள்ளஉறவில் குறுக்கிட அவர் இடம்கொடுக்கவில்லை. புகை நிறைந்த வானத்தினூடே சூரியனை நாம்மங்கலாகக் காணுவதுபோல், சந்தர்ப்பங்களுக்கும் தனக்குமிடையே ஆண்டவரை வைத்து அவிசுவாசம்எலியாவுக்குக் காட்டியது. ஆனால் விசுவாசமோ, சந்தர்ப்பங்களினூடாகவே ஆண்டவரைக் காணமுற்பட்டது. குறைந்துகொண்டே போன அந்த ஆற்றின்…

July

யூலை 10

யூலை 10 …. அவரைக் கூப்பிட்டேன்,அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை (உன்.5:6). ஆண்டவர் நமக்கு சிறந்தஆழமான விசுவாசத்தைத் தரும்பொழுது, அதை நீண்ட தாமதங்களால் சோதித்தறிகிறார். வெண்கலவானத்தினின்று எதிரொலியாய் அவருடைய ஊழியக்காரரின் குரல்கள் அவர்கள் செவிகளில் வந்துவிழச்செய்கிறார். பொற் கதவுகளை அவர்கள் தட்டுகிறார்கள். கீல்கள்துருப்பிடித்துவிட்டதுபோல் அவை அசையாதிருக்கின்றன. ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிஉம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர் என்று கதறுகிறார்கள். தூயவர்களாகிய மக்கள் பதிலின்றிநெடுங்காலம் பொறுமையாகத் தொடர்ந்து காத்திருக்கிறார்கள். இது அவர்களது ஜெபங்கள்உணர்ச்சி ஆற்றலற்றவையாயிருப்பதனாலல்ல. அல்லது அவைகள் கேட்கப்படாததாலல்ல.அரசாணையுள்ள ஆண்டவர் தமது விருப்பப்படியே…

July

யூலை 9

யூலை 9 … உபத்திரவத்தின்குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன் (ஏசா.48:10). நெருப்பின் வெப்பத்தைத்தணிக்கும் தன்மையான தூறலைப்போல இவ்வசனம் நம் வாழ்வில் வரவில்லையா? அக்கினி தழலைஒன்றுமற்றதாகச் செய்யும் கல்நார்போன்று அது இருக்கிறதல்லவா? துன்பங்கள் வரட்டும்.ஆண்டவர் என்னைத் தெரிந்துகொண்டார். ஏழ்மையே, நீ என் வாசலில் படுத்திருக்கலாம். ஆனால்அண்டவர் ஏற்கெனவே என்னோடு வீட்டினுள் இருக்கிறார். அவர் என்னைத் தெரிந்துகொண்டார்.நோய்களே, நீங்கள் என்னோடு இருக்கலாம். என் வாழ்வில் குறுக்கிடலாம். ஆனால் முன்னமேஎனக்கு ஒரு மருந்து உண்டு. ஆண்டவர் என்னைத் தெரிந்துகொண்டார் என்பதை நான்…

July

யூலை 8

யூலை 8 ….கழுகுகளைப்போலச்செட்டைகளை அடித்து எழும்புவார்கள்…. (ஏசா.40:31). ஆதியில் பறவைகளுக்கு எவ்வாறுசெட்டைகள் கிடைத்தன என்பது குறித்த ஒரு கதை உண்டு. முதலில் அவைகளுக்குச் செட்டைகள்கிடையாது. அதன் பின்னர் கடவுள் செட்டைகளை உண்டாக்கிப் பறவைகளின் முன் வைத்து, வந்து இப்பாரங்களைத்தூக்கிச் செல்லுங்கள் எனக் கட்டளையிட்டாராம். அப்பறவைகளுக்கு அழகிய இறகுகளும்,இனிய குரல்களும் இருந்தனவாம். அவைகளால் அழகாகப் பாட முடியும். அவைகளின் பல வர்ண இறகுகள்கதிரவனொளியில் மின்னின. கீழ்ப்படிந்து தங்கள் அலகுகளால் அப்பாரங்களை எடுத்துத்தங்கள் தோள்களின்மேல் அவற்றைத் தூக்கிச் செல்ல வைத்துக்கொண்டன.…