January

ஐனவரி 31

அவர் சமாதானத்தை அருளுகிறார் (யோபு 34:30). புயலினூடே அமைதல். அவரோடு இன்னும் ஏரியில் படகைச் செலுத்துகிறோம். கரையைவிட்டு வெகுதூரம் சென்று ஜலத்தின் மத்தியையடையும்போது, நடுநிசியில் சடுதியில் புயல் உண்டாகிறது. பூலோகமும், பாதாளமும் நமக்கு எதிர்த்து நிற்பதுபோல் தோன்றுகிறது. அலைகள் நம்மை ஆழத்திவிடும் என்று பயப்படுகிறோம். அப்போது அவர் தமது நித்திரையைவிட்டு எழுப்பிக் காற்றையும், கடலையும் அதட்டுகிறார். அவர் கரம் கொந்தளிப்பை அமரச்செய்கிறது. அமர்ந்திரு என்ற இயேசுவின் சப்தம் காற்றின் இரைச்சலுக்கு குமுறும் அலைகளுக்குமேல் கேட்கிறது. உன் காதுக்கு…

January

ஐனவரி 30

நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன் (ஓசி.14:5). பனி பூமியைச் செழிப்பாக்க மூலகாரணமாயுள்ளது. இது பூமியின் செழிப்பைப் புதுப்பிக்க இயற்கையின் வழி. இது இரவில் பெய்கிறது. இது பெய்யாவிட்டால் தாவரங்கள் மடிந்துபோம். பனியின் இந்த ஒப்பற்ற பயனே வேத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது ஆவிக்குரிய புது ஜீவனின் அடையாளமாக இருக்கிறது. இயற்கை பனியால் மூடப்படுவது போல் கர்த்தர் தமது ஜனத்தைப் புதுப்பிக்கிறார். தீத்து 3:5ல் பரிசுத்த ஆவியின் புதிதாக்குதல் என்று கண்டுள்ளதால், ஆவிக்குரிய புதிதாக்குதல் பரிசுத்த ஆவியின் வேலையாக இருக்கிறது.…

January

ஐனவரி 29

தேவன் அதன் நடுவில் இருக்கிறார். அது அசையாது. அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார் (சங்.46:5). அது அசையாது என்பது எவ்வளவு உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. இவ்வுலக காரியங்கள் நம்மை வெகு எளிதில் அசைக்கும்போது ஒன்றும் நம்மை அசைக்காத, ஒன்றும் நம் அமைதலைக் கலைக்காத ஓர் இடத்தை நாம் அடையமுடியுமா? ஆம், அது கூடும். பவுல் அப்போஸ்தலன் அதை அறிந்தார். தமக்கு கட்டுகளும், கஷ்டங்களும் வரும் என்று எதிர்பார்த்து எருசலேமுக்குப் போகும் வழியில் இவைகளில் ஒன்றும் என்னை அசைக்காது…

January

ஐனவரி 28

உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன் (2.கொரி.11:2). கைதேர்ந்த சுரமண்டலம் வாசிப்போன் தன் வாத்தியக் கருவியின்மேல் கவனம் செலுத்துகிறான். தன் மடியிலுள்ள குழந்தையைப்போல் அதைக் கொஞ்சிக்குலாவுகிறான். அவன் உயிர் அதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இராகங்களைப் பிறப்பிக்க அவன் அதைச் சீர் செய்வதைக் கவனி. அதை இறுகப்பிடித்து ஒரு நாணைப் பலமாய் அடிக்கிறான். அது வேதனைப்படுவதுபோல் நடுங்கும்போது அதில் உண்டாகும் முதல் சுருதியைக் கவனிக்க அதனருகே சாய்கிறான். அவன் அஞ்சியவாறே அது கடுரமாய்த் தவறாயிருக்கிறது. அந்த நாணை ஒரு சாவியின் உதவியால் திருகி விறைப்பாய்…

January

ஐனவரி 27

தேவன்தாமே…. உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவராக (1.பேது.5:10). நாம் கிறிஸ்துவை எந்தப் புது உறவிலும் உரிமையாக்கிக் கொள்ளுமுன், அவர் நமக்கு எப்படியும் உரிமையாவார் என்று மனமாற ஒப்புக்கொள்ள அறிவென்னும் ஒளி தேவை. அது சாத்தியமா என்னும் கேள்வியே நம்பிக்கையை ஒழிக்கும். இவ்வறிவைப் பெற்றபின் நாம் முன்னேறிச் செல்லவேண்டும். பூமியில் ஊன்றப்பட்ட மரம் வேரூன்றுவதுபோலவும், திருமணத்தின்போது மணமகள் தன்னை முழுவதுமாய் மணமகனுக்கு ஒப்புக்கொடுத்து விடுவதுபோலவும் நாம் நன்கு தேர்ந்து தெளிந்து எவ்வித சந்தேகமுமின்றி நித்தியமாக அவருக்கு ஒப்புவிக்கவேண்டும்.…

January

ஐனவரி 26

உனக்கு ஒப்புக்கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். சுதந்தரித்துக் கொள் (உபா.2:31). கர்த்தருக்கு காத்திருத்தலைக் குறித்து, வேதபுத்தகத்தில் அதிகமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர் தாமதித்தால் நாம் இலகுவில் பொறுமை இழக்கிறோம். நம் ஜீவியத்தில் பொறுமையிழந்து, பயனை ஆராயாது ஆத்திரப்படுவதால் அநேக கஷ்டங்கள் உண்டாகின்றன. காய் கனியக்காத்திராமல் பச்சைக் காயைப் பிறக்கவேண்டும் என்கிறோம். நான் கேட்கும் காரியம் ஆயத்தமாக அநேக ஆண்டுகள் அவசியமாயிருக்கலாம். ஆனாலும் நாம் அதைக் காரியம் கிடைப்பதற்காக ஜெபித்துக் காத்திருக்க முடியாதவர்களாயிருக்கிறோம். கர்த்தரோடு நடக்கும்படி போதிக்கப்படுகிறோம். ஆனால் அநேக தடவைகளில் அவர்…

January

ஐனவரி 25

உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் (சங்.23:4). கிராமத்தில் என் தகப்பனார் வீட்டில் புகைபோக்கி அருகில் ஒரு சிறு மூலை உண்டு. எங்கள் குடும்பத்தில் அநேக தலைமுறைகளாய் உபயோகிக்கப்பட்ட கைத்தடிகளும், பிரம்புகளும் அங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. நான் என் பூர்வீக வீட்டிற்குச் செல்லும்பொழுது, என் தகப்பனாரும் நானும் உலாவச் செல்லுகையில், அவவறைக்குச் சென்று அச்சமயங்களுக்கேற்ற தேவையான பிரம்பை எடுத்துச் செல்வோம். இதில் எனக்குக் கர்த்தரின் வார்த்தை தைத்தடி போன்றது என்ற நினைவு வருவதுண்டு. அபாயம் எந்தச் சமயத்திலும்…

January

ஐனவரி 24

அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து, இளைப்பாற இடம் காணாமல் திரும்பிப் பேழையில் அவனிடத்திலே வந்தது… அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது இதோ, அது கொத்திக்கொண்டு வந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது (ஆதி.8:9,11). நம்மைத் தைரியப்படுத்தும் அடையாளங்களை எப்பொழுதும் கொடுக்க வேண்டும். எப்போது கொடாதிருக்கவேண்டும் என்று கர்த்தர் அறிவார். நாம் எப்படியும் அவரை நம்பலாம் என்பது எத்துணை நலமானது. அவர் நம்மை நினைவு கூருகிறார் என்பதற்கு யாதொரு ஆதாரமும்…

January

ஐனவரி 23

கர்த்தாவே ஏன் தூரத்தில் நிற்கிறீர் (சங்.10:1). தேவன் ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையானவர். ஆனாலும் நம்முடைய பிரயாசத்தின் இறுதியை அடைந்து அருளின் நன்மையை அறிந்து துன்பத்தின்மூலம் உண்டாகும் அளவிடக்கூடாத ஆதாயத்தை அடையும்படி அவர் கவனியாதவர்போல் உபத்திரவங்கள் நம்மைத் தொடரவிடுகிறார். துன்பங்களை வரவிட்டு அவற்றில் நம்மோடு இருக்கிறார் என்பது நிச்சயமே. ஒருவேளை துன்பங்கள் நம்மை விட்டு விலகும்போது மாத்திரமே நாம் அவரைப் பார்க்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவர் நமக்குச் சோதனை நேரிடும்போது அருகிலிருக்கிறார் என்று நிச்சயமாய் நம்பவேண்டும். நம்முடைய…

January

ஐனவரி 22

இயேசு வனாந்தரமான ஓர் இடத்திற்குத் தனியே போனார் (மத்.14:13). நிறுத்தக்குறியில் பாட்டு இல்லை. ஆனால் பாடல் உண்டாக்கக்கூடிய ஏது அதில் இருக்கிறது. நம்முடைய ஜீவியமாகிய பாதையின் இடையில் சில சமயங்களில் பாட்டு நின்றுவிடுகிறது. அப்பொழுதெல்லாம் நாம் கீதம் முற்றிற்று என்று எண்ணுகிறோம். தேவன் வியாதி, நம் எண்ணம் கைகூடாமை, நம் முயற்சிகள் வீணாதல் ஆகியவற்றினால் நம்மைச் சில சமயங்களில் கட்டாயமாக ஓய்வு எடுக்கச் செய்கிறார். நம்முடைய ஜீவிய கீதம் திடீரென்று நிறுத்தப்படுகிறது. சிருஷ்டிகருக்கு ஓயாது ஏறெடுக்கப்படும் கீதத்தில்,…