February

பெப்ரவரி 18

நீங்கள்ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம்என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் (மாற்.11:24). என் மகன் பத்துவயதாயிருக்கும்போது, அவனுடைய பாட்டி அவனுக்குக் கிறிஸ்மஸ் பரிசாகத் தபால் பில்லைகள்சேர்த்துவைக்கும் ஒரு புத்தகம் கொடுப்பதாக வாக்களித்தார். கிறிஸ்மஸ் வந்தது.பாட்டியிடமிருந்து அப் புத்தகம் வரவில்லை. அதைக் குறித்து ஒரு செய்தியும் வரவில்லை.நாங்கள் அக்காரியத்தைக் குறித்து ஒரு செய்தியும் கேள்விப்படவில்லை. நாங்கள் அக்காரியத்தைக் குறித்துப் பேசவுமில்லை. அவனுடைய கிறிஸ்மஸ் வெகுமதிகளைப் பார்க்க, அவனுடையசிநேகிதர் வந்தபோது, அவனுக்குக் கிடைத்த ஒவ்வொரு வெகுமதியைiயும்…

February

பெப்ரவரி 17

இஸ்ரவேல் புத்திரருக்குநான் கொடுக்கும் தேசம் (யோசு.1:2) இவ்விடத்தில் கர்த்தர்நிகழ்காலத்தில் பேசுகிறார். இது அவர் பிறகு செய்யப்போகிற ஒரு காரியமல்ல. இப்பொழுதேசெய்கிற காரியம். விசுவாசம் எப்பொழுதும் இப்படியே பேசும். இப்படியே கர்த்தர் எப்பொழுதும்கொடுக்கிறார். இந்தப்படியே கர்த்தர் இன்றைய தினத்தில் இந்த நிமிடத்தில் உன்னைச்சந்திக்கிறார். இதுவே விசுவாசத்தின் பரீட்சை. யாதாவதொரு காரியம் நடக்கும் என்றுஎதிர்பார்த்துக் காத்திருப்பாயென்றால் அது விசுவாசமில்லை, அது நம்பிக்கை. ஊக்கமானவிருப்பமாயிருக்கலாம். ஆனால் அது விசுவாசமல்ல. ஏனென்றால் விசுவாசம் எதிர்பார்த்தலின்நிறைவேறுதலும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நம்பிக்கையான ஜெபத்தைக்குறித்த கட்டளை நிகழ்காலத்திலே…

February

பெப்ரவரி 16

உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன் (நாகூம்1:12). துன்பங்களுக்கு ஓர் அளவுஉண்டு. கர்த்தர் அதை அனுப்பி அதை விலக்குகிறார். எப்பொழுதும் அது விலகும் என்று பெருமூச்சுடன்நீ கேட்கிறாயா? கர்த்தர் வரும்வரை அவர் சித்தத்திற்காக அமைதியாய்க் காத்திருந்து,பொறுமையாய்ச் சகிப்போமாக. தாம் கொண்ட எண்ணம் முழுவதும் நிறைவேறும்போது அவர் கஷ்டங்களைநீக்கிப்போடுவார். துன்பங்கள் நம்முடையநற்குணங்களால் கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கான பரீட்சைகளானால், அவை அவருக்குத் துதிஉண்டாக நம்மை சாட்சி பகரச்செய்யும்போது விலகிப்போம். நம்முடையதுன்பங்களின் மூலம் நாம் கொடுக்கக் கூடிய மகிமை யாவையும் பெற்றுக்கொள்ளும்வரை…

February

பெப்ரவரி 15

எரிச்சலடையாதே (சங்.37:1). எவற்றைக் குறித்தும்மூர்க்கம் அடையாதே. இந்தச் சங்கீதத்தில் தொகுத்துள்ள காரியங்கள்எரிச்சலடையத்தக்கவைகளே. தீமை செய்பவர்கள் நீலாம்பரமும் மெல்லிய வஸ்திரமும் தரித்துச்செழித்திருந்தார்கள். பொல்லாப்புச் செய்பவர்கள் அதியுன்னத பதவியடைந்து துர் அதிஷ்டசாலிகளானதங்கள் சகோதரரைக் கொடுமையாய் நடத்தினார்கள். ஜீவனத்தின் பெருமையோடும், திரளான ஜசுவரியத்தினாலுண்டாகும்சுகபோகத்தோடும், பாவிகளான ஆண்களும், பெண்களும் வீதிகளில் பெருமிதமாய் நடந்தார்கள்.சற்குணமான மனிதர் வருத்தப்பட்டு எரிச்சலடைந்தார்கள். எரிச்சலடையாதே,அதிகமாய்க் கோபங்கொள்ளாதிருப்பாயாக, அமைதியாயிரு. தகுந்த காரணத்துக்கும் எரிச்சல்அடைவது ஏற்றதல்ல. எரிச்சல் யாவற்றையும் உஷ்ணப்படுத்துகிறது. அது நீராவியைஉண்டாக்குகிறதில்லை. புகைவண்டியின் அச்சுக்களில் உஷ்ணம் ஏறுவதானால் பயனொன்றும் இல்லை.அது…

February

பெப்ரவரி 14

சந்தோஷமாயிருங்கள்என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலி.4:4). இயேசுவில் சந்தோஷமாயிருத்தல்மிக சிறந்த காரியம். நீ இதைச் செய்ய முயலும்போது முதல் தடவை தவறுவதுபோல் காணப்படலாம்.பரவாயில்லை சந்தோஷம் உண்டாகாதபோது, உனக்குள் மகிழ்ச்சியின் ஊற்றில்லாதபோது,காணக்கூடிய தைரியமோ ஆறுதலோ இல்லாதபோது இன்னும் முயன்று அவைகள் எல்லாம் சந்தோஷம்என்று எண்ணு. கர்த்தர் உன் எண்ணத்தை நிறைவேற்றுவார். பலிவதமான சோதனைகள் சூழும்போதுஅவைகளைச் சந்தோஷம் என்று எண்ணு. கர்த்தர் உன்னை வெற்றிக்கொடியையும் ஆனந்த கொடியையும்,போர்முனைக்கு எடுத்துச்செல்ல அனுமதித்து, பின்பு சத்துரு உன்னைப் பிடிக்கவோமேற்கொள்ளவோ விட்டு விட்டுச் சும்மா இருப்பாரோ?…

February

பெப்ரவரி 13

மலைத்தேசமும் உங்களுடையதாயிருக்கும் (யோசு.17:17). எப்பொழுதும் மேலே இடமுண்டு.பள்ளத்தாக்கு முழுவதிலும் உன் முன்னேற்றத்தைத் தடைபண்ணும் இரும்பு இரதங்களோடு, கானானியர்நிரம்பியிருக்கும்போது நீ மலைமீது ஏறிச்சென்று உயர்ந்த இடங்களைப் பிடித்துக்கொள்.உன்னால் தொடர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியாவிட்டால் அவருக்கு ஊழியம்செய்யக்கூடியவர்களுக்காக ஜெபி. உன் பேச்சுத்திறமையில் உலகத்தை அசைக்க உன்னால்முடியாவிட்டால் நீ மோட்சத்தையே அசைக்கலாம். ஊழியம் செய்யச் சந்தர்ப்பங்கள்வாய்க்கவில்லை அல்லது பிறரைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் வேறு ஊழியத்திற்குச்செல்ல முடியவில்லை என்ற இவ்விதத் தடைகள் உனக்கு ஏற்படலாம். இவற்றால் உன்வாழ்க்கையின் முன்னேற்றம் தடைப்பட்டாலும், காணமுடியாத…

February

பெப்ரவரி 12

உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார் (மத்.6:32). ஓர் ஊமைப் பிள்ளைகள்பள்ளியைப் பார்வையிடச் சென்ற ஒருவர், கரும்பலகையில் அநேகக் கேள்விகளை எழுதினார்.அதிலொரு கேள்வி, என்னைப் பேசவும் கேட்கவும் கூடியவனாகவும், உங்களைப் பேசவும் கேட்கவும்கூடாதவர்களாகவும் தேவன் ஏன் படைத்தார்? இக் கேள்வி அவர்கள்முகத்திலறைந்தாற்போல் இருந்தது. ஏன் என்ற கேள்விக்கு விடையளியாது மரத்துப்போனதுபோல்செயலற்றவர்களாயிருந்தனர் மாணவர். பின்பு ஒரு சிறு பெண் எழுந்தாள். அவளுடைய உதடுகள் துடித்தன.அவள் கண்களில் நீர் நிரம்பிற்று. அவள் கரும்பலகை அண்டை சென்று நடுக்கமின்றி பின்வரும்அருமையான வசனத்தை எழுதினாள். இதுவும்…

February

பெப்ரவரி 11

ஆசாரியர்கள் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலேபட்டமாத்திரத்தில்….. தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் (யோ.3:13). வழி திறக்கும்வரை ஜனங்கள்தங்கள் கூடாரங்களில் காத்திராமல் விசுவாசத்துடன் நடக்கவேண்டியதாயிருந்தது. ஆற்றில்வழி பிறக்குமுன் அவர்கள் கூடாரங்களை அவிழ்த்துச் சாமான்களைக் கட்டி முன்னேறிச் செல்லவரிசையாய் நின்று ஆற்றங்கரைக்கும் செல்லவேண்டும். அவர்கள் ஆற்றங்கரைக்குச்சென்று ஆற்றினுள் இறங்கு முன் தண்ணீர் ஓட்டம் நின்று குவியக் காத்திருப்பார்களானால் அதுவீணாய்க் காத்திருப்பதாகும். ஆனால் தண்ணீர் குவியுமுன் அவர்கள் ஆற்றினுள் அடி எடுத்துவைக்கவேண்டும். நாம் முன்னேறிச் செல்லும்வழியை அறியாவிட்டாலும் கர்த்தருடைய வார்த்தையையே நம்பி…

February

பெப்ரவரி 10

பிரியமானவர்களே, நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்(ரோ.12:19). செயல்படுவதைவிட அமர்ந்திருப்பதற்கு அளவிடக்கூடாத அதிகமான பெலன் அவசியமாகிறது.அமர்ந்திருத்தலே சக்தியின் உன்னத பயனாகிறது. இயேசுவிற்கு விரோதமாகத் தீமையானகுற்றங்களைச் சாட்டினபோது, அவருடைய பதில அமைதியான மௌனமே. இது நீதிபதிகளையும்,பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் திகைக்கச் செய்தது. கோபத்தை உண்டாக்கக் கூடியவாறுஅவ்வளவாகத் தூஷித்தும், கொடுமைப்படுத்தியும், கேலி செய்தும், அவரைத் துன்புறுத்தியபோதுஅவர் செய்த பதில் சப்தமின்றி அமர்ந்திருந்ததேயாகும். அநியாயமாய்க்குற்றுஞ்சாட்டப்பட்டவர்கள், முகாந்தாரமின்றிக் கொடுமையாய் நடத்தப்பட்டவர்கள்,கர்த்தருக்கு முன் அமைதியாய் இருப்பதற்கு எவ்வளவு திடான பலன் தேவை என்பதை அறிவார்கள். மனிதர் உன்நோக்கத்தை தவறாக…

February

பெப்ரவரி 09

அவளுக்குப் பிரதியுத்தரமாக, அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. (மத்.15:23). தம்முடையஅன்பினிமித்தம் அமர்ந்திருப்பார் (செப்.3:17). இதை வாசிக்கும்கர்த்தருடைய பிள்ளையே நீ கனத்த வருத்தம் அடைந்திருக்கலாம். நீ எதிர்பாராத இடத்திலிருந்துகசப்பான ஏமாற்றமும், இதயத்தை நொறுக்கும் அடியும் அடைந்திருக்கலாம். உன் பரம எஜமான்சந்தோஷமாயிரு என்று சொல்லும் சப்தத்தைக் கேட்க நீ ஆசை கொண்டிருக்கலாம். அவர்பிரதியுத்தரமாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. கர்த்தரின் மென்மையான இருதயம்நம்முடைய குறைகூறும் துக்கம் நிறைந்த முறைப்பாட்டைக் கேட்க அதிக வேதனை அடைகிறது. நம்நன்மைக்காகவே அவர் விடையளிக்காமலிருக்கலாம் அல்லது அவர்…