April

ஏப்ரல் 30

ஏப்ரல் 30 அவலட்சணமும் கேவலமுமானபசுக்கள், அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப் போட்டது. சாவியான கதிர்கள்செழுமையும் நிறை மேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது (ஆதி.41:47). இக் கனவு நமக்கு ஓர்எச்சரிக்கையைத் தருகிறது. நமது வாழ்வி;ல் ஏற்படக்கூடிய பயனற்ற நிலைகள், அவமானம்,தோல்விகள் இவை யாவும் நமது வாழ்வின் சிறப்பம்சங்களை, நாம் அடைந்த பெரும்வெற்றிகளின் பலன்களை, நாம் செய்த பெருஞ்சேவைகளை, நமது சிறந்த அனுபவங்களின் பலன்களை,ஏன் நமது வாழ்வின் சிறந்த ஆண்டுகளையே விழுங்கிப்போடக்கூடும். மிகவும்பயனளிக்கக்கூடியனவாக இருந்த சில மனிதர்களின்…

April

ஏப்ரல் 29

ஏப்ரல் 29 எலியா நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும்… (யாக்.5:17). எலியா நம்மைப்போலப்பாடுள்ள மனிதனாக இருந்ததற்காக, நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோமாக. அடிக்கடிநீங்களும், நானும் செய்வதுபோல மனமடிவாகி அவன் ஒரு சூரைச்செடியின் கீழ்ப்படுத்திருந்தான்(1.இராஜா.19). அவனும் நம்மைப்போலவே குறை கூறினான், முறுமுறுத்துக்கொண்டான்.நமக்கிருக்கும் அவிசுவாசம் அவனுக்கும் இருந்தது. அனால் அவன் மெய்யாகவே ஆண்டவரிடம்தொடர்புகொண்டிருந்தான். காரியங்கள் மாறிப்போயிருந்தன. நம்மைப்போல பாடுள்ள மனுஷனாகஅவன் இருந்தும் அவன் ஜெபித்துக்கொண்டே ஜெபம் பண்ணினான். மூலமொழியில் இது இன்னும்சற்று விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அது அவன் கருத்தாய் ஜெபம் பண்ணினான் என்றுபொருள்படாமல்,…

April

ஏப்ரல் 28

ஏப்ரல் 28 இஸ்ரவேல் புத்திரர்கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி,காலேபின் தம்பியாகிய கேனாசுடைய குமாரனாகிய ஒத்தனியேல் என்னும் ஒரு இரட்சகனைஅவர்களுக்கு எழும்பப்பண்ணினார். அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்தது (நியா.3:9-10) ஆண்டவர் தமக்கான வீரர்களைஆயத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுகிறார். தகுந்த தருணம் வரும்பொழுது, ஒரு கணத்தில்அவர்களுக்கான இடத்தில் அவர்களைப் பொருத்துகிறார். எங்கிருந்து அவ்வீரர் தோன்றினார்களெனஉலகம் அதிசயிக்கிறது. அருமையான நண்பரே, தூயஆவியானவர் உமது வாழ்க்கையில் ஏற்படுத்தும் கண்டிப்புகள், கட்டுப்பாடுகளின் மூலமாக,நம்மைஆயத்தப்படுத்தட்டும். சலவைக்கல் போன்ற உமது வாழ்க்கைக்கு இறுதிச் சிறுசிறு…

April

ஏப்ரல் 27

ஏப்ரல் 27 மரித்தேன், அனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் (வெளி 1:18). மலர்கள்! ஈஸ்டர் லீலிமலர்களே, பல்லாண்டு காலமாக நீங்கள் துயரப்படும் மக்களுக்குக் கூறிவந்த நிலையான அழியாதவாழ்வின் செய்தியை இன்று காலை எனக்கும் கூறுங்களேன்! ஞானம் நிறைந்த நல்லநூலாகிய வேதாகமமே! சாவது ஆதாயம் என்னும் உறுதியான நிச்சயத்தை உன்னில் நான்வாசித்துப் பெற்றுக்கொள்ளட்டும். கவிஞர்களே! நிச்சயவாழ்வுக்கான நற்செய்தியை உங்களுடைய கவிதைகள்மூலம், மீண்டும் மீண்டும் எனக்கு எடுத்துக்கூறுங்களேன்! பாடகர்களே! மகிழ்ச்சியின்பாடல்களை உரக்கப் பாடுங்கள். உயிர்த்தெழுதலைப்பற்றியகீதத்தை நான் மீண்டும் மீண்டும் கேட்டானந்திக்கட்டும்.…

April

ஏப்ரல் 26

ஏப்ரல் 26 என் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக, எல்லாவற்றையும் நஷ்டமென்றுஎண்ணிக்கொண்டிருக்கிறேன். (பிலி.3:8). ஒளிவிடுதல், அல்லதுபிரகாசித்தல் என்பது பெருஞ் செலவு பிடிக்கும் காரியம். ஒளியை உருவாக்கும் பொருள்கள்செலவாவதினாலேயே ஒளிவருதல் ஏற்படுகிறது. நெருப்பு ஏற்றப்படாத மெழுகுவர்த்தி ஒளிதருவதில்லை.ஒளிவருவதற்கு முன்னர் எரிதல் ஏற்படவேண்டும். நம்மைச் செலவிட்டேதான் நாம் பிறருக்குபயனுள்ளவர்களாயிருக்கக் கூடும். எரிதல் துன்பத்தைத் தரும். துன்பம், நோவு இவற்றைக் கண்டுநாம் அஞ்சி விலகுகிறோம். பொதுவாக, நாம் உலகிற்குநம்மாலான பெருஞ்சேவையை வலுவுடனும் பணியாற்றும் ஆற்றலுடனும் இருக்கும்பொழுதும், நமது மனமும்கரங்களும் அன்புச்சேவை…

April

ஏப்ரல் 25

ஏப்ரல் 25 அங்கே மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராகஉட்கார்ந்திருந்தார்கள் (மத்.27:61). கவலைஎதையும் கற்றுக்கொள்ளுவதில்லை. அது எதையும் அறிந்து கொள்வதுமில்லை. கற்றுக்கொள்ளுவதற்கோ, அறிந்துகொள்ளுவதற்கோ அதற்கு விருப்பமும் கிடையாது. அது எவ்வளவுவிசித்திரமான முட்டாள்தனம். துயரத்தில் ஆழ்ந்திருந்த அந்தச் சகோதரிகள், நமதுஆண்டவரின் கல்லறையின் வாயிலில் உட்கார்ந்தபொழுது, வெற்றிகரமாக இரண்டாயிரம் ஆண்டுகள்கடந்து சென்றுவிட்டதைக் கவனித்தீர்களா? எங்கள் கிறிஸ்து இறந்துவிட்டாரே! என்பதைத்தவிர அவர்களால் வேறு எதையும் காண முடியவில்லையே! அவர்களது இழப்பிலிருந்துதான் உங்கள் கிறிஸ்துவும் எனது கிறிஸ்துவும் வெளிவந்தார். துயரத்தில் ஆழ்ந்திருக்கும்எண்ணிலடங்கா…

April

ஏப்ரல் 24

ஏப்ரல் 24 விசுவாசமானதுநம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி.11:1). மெய்யான விசுவாசம், ஒருகடிதத்தை அஞ்சற் பெட்டியில் போட்டுவிட்டு, அதைக் குறித்த கவலையை விட்டுவிடுவது போலாகும்.நம்பிக்கையின்மை என்பது அக்கடிதத்தின் ஒரு மூலையைப் பிடித்துக்கொண்டே, அதற்குப் பதில்ஏன் வரவில்லை என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே இருப்பதுபோலாகும். பல வாரங்களாக என்மேஜையின்மீது சில கடிதங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. அவைகளின்மேல் உள்ளவிலாசங்கள் குறித்து சிறிது ஐயம் இருப்பதால், அவைகள் இன்னும் தபாலில்சேர்க்கப்படவில்லை. அக்கடிதங்களால் பிறருக்கோ, எனக்கோ யாதொரு பயனும்ஏற்படப்போவதில்லை. அஞ்சல்காரரிடத்தோ, அஞ்சல் இலாகாவிடத்தோ நான் நம்பிக்கைவைத்து,…

April

ஏப்ரல் 23

ஏப்ரல் 23 நான் துன்பத்தின்நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர் (சங்.138:7). துன்பத்தின் மத்தியில்போனாலும் என்று எபிரெய பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவை எத்தனைவிஸ்தரிப்படங்கிய வார்த்தைகள். நாம் கஷ்டப்படும் நாட்களில் தேவைன நோக்கிக்கூப்பிட்டிருக்கிறோம். அவர் இரட்சிப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தைக் காட்டிக்கெஞ்சியுள்ளோம். ஆனால் இரட்சிப்பு அருளப்படவில்லை. சத்துரு நம்மை விடாமல் மென்மேலும்தள்ளிக்கொண்டு போய், போர்முனையில் கஷ்டத்தின் மத்தியில் கொண்டு போய்விடுகிறான்.இதற்குமேல் கர்த்தரைத் தொந்தரவு செய்வது எப்படி என்று நினைக்கிறேன். மார்த்தாள் ஆண்டவரே நீர்இங்கே இருந்திருந்தால், என் சகோதரன்…

April

ஏப்ரல் 22

ஏப்ரல் 22 நான் போகும் வழியை அவர் அறிவார் (யோபு 23:10). விசுவாசியே! இது எத்தனை மகிமையான நிச்சயம். நீ போகும் வழி கோணலாய், கஷ்டங்கள் நிறைந்ததாய் இருக்கலாம். அதை அவர் அறிவார். சோதனைகள், கண்ணீர் நிறைந்ததாயிருக்கலாம். சூளை ஏழு மடங்கு சூடாக்கப்பட்டடிருக்கலாம். கர்த்தரே அதைச் சூடாக்கினார். நம்முடைய வழி மாராவின் தண்ணீரைப்போல் கசப்பாயிருந்தாலும், ஏலீம் போல சந்தோஷமும், உற்சாகமும் உள்ளதாயிருந்தாலும், அதை அறிந்து நமது காலடிகளை நடத்தும் சர்வ வழிகாட்டி ஒருவர் உண்டு. எகிப்தியருக்கு இருட்டாயிருந்த…

April

ஏப்ரல் 21

ஏப்ரல் 21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லமையுள்ளவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி… (ரோ.4:21). ஆபிரகாம் தன்னுடலைப் பார்த்து, அது சக்தியற்று செத்திருக்கிறது என்று இளக்கரித்துப் போகாமலிருந்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவன் தன்னையல்ல, சர்வவல்லவரையே நோக்கினான். அவன் வாக்குத்தத்தைப் பெற்று திடுக்கிடவில்லை. இத்தனை பெரிய ஆசீர்வாதமான பாரத்தின்கீழ் குனியாது நிமிர்ந்து நேரே நின்றான். அவன் பெலவீனமடையாமல் விசுவாசத்தில் பெருகிப் பலமடைந்தான். கஷ்டங்களை அவன் கண்டபோது தனது நிறைவினால் தேவனை மகிமைப்படுத்தினான். ஏனென்றால் வாக்குத்தத்தம் செய்தவர் பல…