July

யூலை 11

யூலை 11 தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளைக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று (1.இராஜா.17:7). கலங்காத மனதுடனும், உறுதியானஉள்ளத்துடனும் ஒவ்வொரு நாளும் எலியா வற்றிப்போய்க் கொண்டிருந்த அந்த ஆற்றைக்கவனித்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி அவருடைய விசுவாசம் தளர்ந்துவிடும்போலிருந்தது.ஆனாலும், சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் அவருக்கும், அவருடைய ஆண்டவருக்குமிடையே உள்ளஉறவில் குறுக்கிட அவர் இடம்கொடுக்கவில்லை. புகை நிறைந்த வானத்தினூடே சூரியனை நாம்மங்கலாகக் காணுவதுபோல், சந்தர்ப்பங்களுக்கும் தனக்குமிடையே ஆண்டவரை வைத்து அவிசுவாசம்எலியாவுக்குக் காட்டியது. ஆனால் விசுவாசமோ, சந்தர்ப்பங்களினூடாகவே ஆண்டவரைக் காணமுற்பட்டது. குறைந்துகொண்டே போன அந்த ஆற்றின்…

July

யூலை 10

யூலை 10 …. அவரைக் கூப்பிட்டேன்,அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை (உன்.5:6). ஆண்டவர் நமக்கு சிறந்தஆழமான விசுவாசத்தைத் தரும்பொழுது, அதை நீண்ட தாமதங்களால் சோதித்தறிகிறார். வெண்கலவானத்தினின்று எதிரொலியாய் அவருடைய ஊழியக்காரரின் குரல்கள் அவர்கள் செவிகளில் வந்துவிழச்செய்கிறார். பொற் கதவுகளை அவர்கள் தட்டுகிறார்கள். கீல்கள்துருப்பிடித்துவிட்டதுபோல் அவை அசையாதிருக்கின்றன. ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிஉம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர் என்று கதறுகிறார்கள். தூயவர்களாகிய மக்கள் பதிலின்றிநெடுங்காலம் பொறுமையாகத் தொடர்ந்து காத்திருக்கிறார்கள். இது அவர்களது ஜெபங்கள்உணர்ச்சி ஆற்றலற்றவையாயிருப்பதனாலல்ல. அல்லது அவைகள் கேட்கப்படாததாலல்ல.அரசாணையுள்ள ஆண்டவர் தமது விருப்பப்படியே…

July

யூலை 9

யூலை 9 … உபத்திரவத்தின்குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன் (ஏசா.48:10). நெருப்பின் வெப்பத்தைத்தணிக்கும் தன்மையான தூறலைப்போல இவ்வசனம் நம் வாழ்வில் வரவில்லையா? அக்கினி தழலைஒன்றுமற்றதாகச் செய்யும் கல்நார்போன்று அது இருக்கிறதல்லவா? துன்பங்கள் வரட்டும்.ஆண்டவர் என்னைத் தெரிந்துகொண்டார். ஏழ்மையே, நீ என் வாசலில் படுத்திருக்கலாம். ஆனால்அண்டவர் ஏற்கெனவே என்னோடு வீட்டினுள் இருக்கிறார். அவர் என்னைத் தெரிந்துகொண்டார்.நோய்களே, நீங்கள் என்னோடு இருக்கலாம். என் வாழ்வில் குறுக்கிடலாம். ஆனால் முன்னமேஎனக்கு ஒரு மருந்து உண்டு. ஆண்டவர் என்னைத் தெரிந்துகொண்டார் என்பதை நான்…

July

யூலை 8

யூலை 8 ….கழுகுகளைப்போலச்செட்டைகளை அடித்து எழும்புவார்கள்…. (ஏசா.40:31). ஆதியில் பறவைகளுக்கு எவ்வாறுசெட்டைகள் கிடைத்தன என்பது குறித்த ஒரு கதை உண்டு. முதலில் அவைகளுக்குச் செட்டைகள்கிடையாது. அதன் பின்னர் கடவுள் செட்டைகளை உண்டாக்கிப் பறவைகளின் முன் வைத்து, வந்து இப்பாரங்களைத்தூக்கிச் செல்லுங்கள் எனக் கட்டளையிட்டாராம். அப்பறவைகளுக்கு அழகிய இறகுகளும்,இனிய குரல்களும் இருந்தனவாம். அவைகளால் அழகாகப் பாட முடியும். அவைகளின் பல வர்ண இறகுகள்கதிரவனொளியில் மின்னின. கீழ்ப்படிந்து தங்கள் அலகுகளால் அப்பாரங்களை எடுத்துத்தங்கள் தோள்களின்மேல் அவற்றைத் தூக்கிச் செல்ல வைத்துக்கொண்டன.…

July

யூலை 7

யூலை 7 அவர்… என்னைத்துலக்கமான அம்பாக்கி…. (ஏசா.49:2). வட அமெரிக்காவின்கலிபோர்னியா கடற்கரையில் ஒரு பகுதியிருக்கிறது. கூழாங்கற் கடற்கரை என்று அதற்குப் பெயர்.அங்கு நீண்ட கடல் அலைகள் பேரிரைச்சலுடன் கரையில் கிடக்கும் கூழாங்கற்களின்மீது மோதி,கிலுகிலுப்பை போன்று பெரிய ஓசையை ஏற்படுத்துகின்றன. அவைகளின் பிடியிலகப்பட்ட கற்கள்இங்குமங்கும் உருட்டியடிக்கப்பட்டு, ஒன்றோடொன்று உரசிக் கடினமான கடற்கரைப்பாறைகளால்தேய்க்கப்பட்டுப் பளபளப்பாக்கப்படுகின்றன. இரவும் பகலும் விடாது ஏற்படும் இவ்வுராய்தலினால்,அவை பளபளப்பான கவர்சி மிகும் கூழாங்கற்களாக மாறுகின்றன. உலகமெங்குமிருந்து வரும்சுற்றுலாப்பயணிகள் ஏராளமான பேர் இவ்விடத்திற்கு வந்து அழகிய உருண்டை…

July

யூலை 6

யூலை 6 நாங்கள் செய்யவேண்டியதுஇன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையேநோக்கிக்கொண்டிருக்கிறது (2.நாளா.20:12). ஆண்டவருடைய உடன்படிக்கைப்பெட்டியின்மீது தெரியாத்தனமாக தங்கள் கைகளை வைத்ததால் இஸ்ரவேல் மக்களில் ஒரு மனிதன்இறக்க நேரிட்டது. நல்ல நோக்கத்துடன் தான் பெட்டி விழுந்துவிடாதபடி தவிர்க்க அக்கரங்கள்வைக்கப்பட்டன. கரடுமுரடான பாதையில் மாடுகள் இழுத்து வந்த வண்டியில் அப்பெட்டிஆடிக்கொண்டிருந்தது. ஆனால் அக்கரங்கள் தகாத துணிவுடன் ஆண்டவருடைய கை வேலையைத் தொட்டன.ஆதலால் அவை செயலிழந்து, உயிரற்று விழுந்தன. விசுவாச வாழ்க்கையின் பெரும் பகுதி பலகாரியங்களில் ஈடுபடாது விட்டுவிடுதலாகும்.…

July

யூலை 5

யூலை 5 நான் அவளுக்கு நயங்காட்டி,அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய்…. அவளுக்கு அவளுடைய திராட்சைரசத்தோட்டங்களையும்…. கொடுப்பேன். (ஓசி.2:14-15). வனாந்தரத்தில்திராட்சைத்தோட்டங்கள் வெகுவிசித்திரமான இடமல்லவா? ஓர் ஆன்மாவுக்கு வேண்டியசெல்வங்கள் ஒரு வனாந்தரத்தில் கிடைக்கக்கூடுமா? வனாந்தரம் தனிமையான இடமாச்சுதே.அதனின்று வெளிவரக்கூட வழி காணமுடியாதே. ஆம், அப்படித்தான் தோன்றும். அது மட்டுமல்ல,ஆகோரின் பள்ளத்தாக்கு. அப் பெயர் கசப்பு என்று பொருள்படும். அது நம்பிக்கையின் வாயில்என்று இங்கு கூறப்பட்டுள்ளது. தன் இளவயதின் நாட்களிலும்தான் எகிப்து தேசத்திலிருந்துவந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். பாலைவன அனுபவம் நமக்குத்தேவை என்பதை…

July

யூலை 4

யூலை 4 குறித்த காலத்திற்குத்தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது…. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அதுநிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆப.2:3). எதிர்பார்ப்பின் மூலை, என்றநூலில் ஆதாம்ஸ்லோமேன் என்பவர் ஆண்டவரின் கருவூல அறைக்குள் அழைத்துச்செல்லப்பட்டதாக ஒரு கற்பனை கூறப்பட்டுள்ளது. அது கவர்ச்சி மிகும் ஒரு சிறு நூல். அங்கு அவர்கள் கண்டஅதிசயங்களில் தாமதமாகும் ஆசீர்வாதங்களின் காரியாலயம் என்ற இடத்தைக் கண்டார். அங்குஆண்டவர் ஜெபங்களுக்குத் தடைகளாக வைக்கப்பட்டிருந்த சில காரியங்களைக் கண்டார். அவைஜெபங்களுக்கு அளிக்கப்பட இருந்த விடைகள். ஆனால் அவை…

July

யூலை 3

யூலை 3 உழுகிறவன்விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ?… (ஏசா.28:24) கோடைகாலத்தில் ஒரு நாள்ஓர் அழகிய பசும்புல் தரையைக் கடந்து சென்றேன். அதிலுள்ள புல்கள் அடர்த்தியாகவும்மெத்தென்றும் கீழ்நாட்டுப் பச்சைக் கப்பளம்போல் முளைத்திருந்தன. அதன் மூலை யில்ஓங்கி வளர்ந்த காட்டு மரமொன்றிருந்தது. அது எண்ணற்ற காட்டுப்பறவைகளுக்கு ஒரு காப்பிடமாகஅமைந்திருந்தது. அவைகள் எழும்பிய இனிய இசை காற்றில் மிதந்து வந்தது. அமைதியின்ஓவியம்போல் இரு பசுக்கள் அம்மரத்தினடியில் படுத்திருந்தன. சாலை ஓரத்தில் மஞ்சள்நிறமலர்களும், செந்நீலமலர்களும் பூத்து அக்காட்சிக்கு இன்னும் அதிக அழகூட்டின. அப்புல்வெளியின் அழகில்…

July

யூலை 2

யூலை 2 நீ அவைகளில்நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை (நீதி.4:12). விசுவாசம் என்னும் பாலத்தைவிசுவாசம் நிறைந்த பயணிகளின் கால்களுக்கடியில் மட்டுமே ஆண்டவர் அமைக்கிறார். தேவைக்குமிஞ்சிய அளவில் பாலத்தை அவர் கட்டுவாரானால், அது விசுவாசப்பாலமாயிராது. காணப்படுகிறவைவிசுவாசத்தினால் ஆனவையல்ல. மேல் நாடுகளில் சிலநாட்டுப்புறச் சாலைகளில் தாமாகவே திறக்கும் வாசல்கள் உண்டு. ஒரு பயணி அதைநெருங்கும்பொழுது அது அசையாது உறுதியகா நிற்கும். அதை அப்பயணி நெருங்காவிடில், அதுதிறக்காது. ஆனால் அதை நோக்கித் தன் வண்டியைச் செலுத்துவானாகில், சாலையிலுள்ள விசையைவண்டிச்சக்கரங்கள் அழுத்தின…