April

ஏப்ரல் 30

ஏப்ரல் 30

அவலட்சணமும் கேவலமுமானபசுக்கள், அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப் போட்டது. சாவியான கதிர்கள்செழுமையும் நிறை மேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது (ஆதி.41:47).

இக் கனவு நமக்கு ஓர்எச்சரிக்கையைத் தருகிறது. நமது வாழ்வி;ல் ஏற்படக்கூடிய பயனற்ற நிலைகள், அவமானம்,தோல்விகள் இவை யாவும் நமது வாழ்வின் சிறப்பம்சங்களை, நாம் அடைந்த பெரும்வெற்றிகளின் பலன்களை, நாம் செய்த பெருஞ்சேவைகளை, நமது சிறந்த அனுபவங்களின் பலன்களை,ஏன் நமது வாழ்வின் சிறந்த ஆண்டுகளையே விழுங்கிப்போடக்கூடும். மிகவும்பயனளிக்கக்கூடியனவாக இருந்த சில மனிதர்களின் வாழ்க்கைகள் அபூர்வ செயலாக்கங்களும், செயல்திறன்களும் உடையவனாக இருந்தும், பயனற்று முடிந்திருக்கின்றது. இது யோசிப்பதற்கே கஷ்டமானதாகஇருக்கிறது, எனினும் இது உண்மையான காரியம். ஆனால், இவ்வாறு நடந்திருக்க வேண்டியதே இல்லை.

ஆண்டவருடன் நாள்தோறும்எப்பொழுதும் புதியதாக உறவு கொள்ளுவதுதான் இக் கேட்டிலிருந்து நாம் தப்பிக் கொள்ள ஒரேநிச்சயமான வழியாகும் என்று எஸ்.டி. கார்டன் என்பவர் கூறுகிறார். இன்றைய வாழ்வை வளமும்நலமுமுள்ள அனுபவங்கள் உள்ளதாக ஆக்க ஊக்கம் தரவில்லையெனில், முந்திய நாட்களின்வெற்றி அனுபவங்களெல்லாம் மதிப்பற்றவையாகும். இன்றையத் தோல்விகள், பின்னடைவுகள்ஆகியவற்றால் விழுங்கப்பட்டு விடும்.

கிறிஸ்து நாதரில்நிலைத்திருந்து அவருடன் புதிய தொடர்புகளை நாடோறும் நிமிடந்தோறும் கொண்டிருத்தல்மட்டுமே, என் வாழ்க்கையில் வரக்கூடிய அவலட்சணமும் கேவலமுமான பசுக்களையும் சாவியானகதிர்களையும் அண்டவிடாது விரட்டியடிக்கக் கூடியது.