April

ஏப்ரல் 29

ஏப்ரல் 29

எலியா நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும்… (யாக்.5:17).

எலியா நம்மைப்போலப்பாடுள்ள மனிதனாக இருந்ததற்காக, நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோமாக. அடிக்கடிநீங்களும், நானும் செய்வதுபோல மனமடிவாகி அவன் ஒரு சூரைச்செடியின் கீழ்ப்படுத்திருந்தான்(1.இராஜா.19). அவனும் நம்மைப்போலவே குறை கூறினான், முறுமுறுத்துக்கொண்டான்.நமக்கிருக்கும் அவிசுவாசம் அவனுக்கும் இருந்தது. அனால் அவன் மெய்யாகவே ஆண்டவரிடம்தொடர்புகொண்டிருந்தான். காரியங்கள் மாறிப்போயிருந்தன. நம்மைப்போல பாடுள்ள மனுஷனாகஅவன் இருந்தும் அவன் ஜெபித்துக்கொண்டே ஜெபம் பண்ணினான்.

மூலமொழியில் இது இன்னும்சற்று விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அது அவன் கருத்தாய் ஜெபம் பண்ணினான் என்றுபொருள்படாமல், அவன் ஜெபித்துக்கொண்டே ஜெபம்பண்ணினான் என்று உள்ளது. தொடர்ந்து அவன்ஜெபித்துக்கொண்டிருந்தான். நாமும் இதிலிருந்து நாம் ஜெபித்துக் கொண்டே இருக்கவேண்டும்என்பதைக் கற்றுக்கொள்ளுகிறோம்.

கர்மேல் மலை உச்சிக்கும்போவோம். விசுவாசமும், காட்சியும் என்ற எடுத்துக்காட்டினைக் கண்கூடாகக் காணுவோம். இப்பொழுது,தேவையானது வானத்திலிருந்து நெருப்பைக் கொண்டு வருவதல்ல. வெள்ளம்தான் இப்பொழுது தேவை,வானத்திலிருந்து நெருப்பைக் கொண்டு வந்த அதே மனிதன், அதே முறையில் வெள்ளத்தையும்கொண்டுவரக்கூடும். அவன் உலகக் காட்சிகளுக்கும், ஓசைகளுக்கும் அப்பால் தன்னைமறைத்துக்கொள்ளத் தன் தலையை முழங்கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு, தரை மட்டும்குனிந்தான். தனது போர்வைக்குள் அவன் இருந்த அந்த நிலையில், தனக்குமுன்னால் நடப்பதுஎதையும் அறியக்கூடாதவனாயிருந்தான்.

அவன் தன் வேலைக்காரனைநோக்கி, நீ போய்க் கடல் பக்கமாய்ப்பார் என்றான். அவன் போய்த் திரும்பி வந்து,ஒன்றுமில்லை என்று மிகச் சுருக்கமாகப் பதில் கூறினான்.

இத்தகைய நிலையில் நாம்என்ன செய்வொம்? சரி, நான் எதிர்பார்த்தபடிதான் என்று கூறிவிட்டு, ஜெபிப்பதையும்விட்டுவிடுவோம் அல்லவா? எலியா என்ன செய்தான்? மறுபடியும் போய்ப்பார் என்றுவேலைக்காரனிடம் கூறினான். வேலைக்காரன் ஒன்றுமில்லை என்றான். எலியா மறுபடியும்போய்ப் பார் என்றான். வேலைக்காரன் இறுதியில் இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனின்உள்ளங்கையளவு சிறிய மேகம் எழும்புகிறது என்றான். எலியாவின் கரங்கள் வேண்டுதலுடன்உயர்த்தப்பட்டன. மழை கீழே இறங்கியது. ஆகாப் அரசனும் வேகமாகச் செல்லும் குதிரைகள் இருந்தும்கூட,சமாரியாவுக்கு அவன் பெருமழைக்குமுன் போய்ச்சேர முடியவில்லை. இது விசுவாசமும் காட்சியுமானஉவமை. விசுவாசம் தன்னையே ஆண்டவரோடு அடைத்துக்கொண்டது. காட்சி நோக்கியும் ஒன்றும்காணாதிருந்தது. விசுவாசம் விடாது போராடியது. அது, ஜெபித்துக் கொண்டேஜெபித்துக்கொண்டிருந்தது. நம்பிக்கையற்ற அறிக்கைகளைக் காட்சி விடுத்துக்கொண்டே இருந்தது.

இவ்வாறு விடாது, தொடர்ந்துவிசுவாசத்துடன் ஜெபிக்க உனக்கு தெரியுமா? நமது காட்சிகள் நம் உறுதியைக் குலைக்கக் கூடியவகையில்அறிக்கை தரலாம். ஆனால் இவை எதற்கும் செவி சாய்க்காதே. உயிருள்ள ஆண்டவர்மோட்சத்திலிருக்கிறார். அவருடைய தாமதமும் நன்மையே தந்திடும்.

மூன்று சிறுவர்கள்விசுவாசத்தின் விடாப்பிடி நிலைக்கு விளக்கம் தந்தனர். முதலாவது சிறுவன் அது கிறிஸ்துவைப்பற்றிக்கொள்ளுதல் என்றான். இரண்டாம் சிறுவன், நமது பிடியை உறுதியாக வைத்துக்கொள்ளுதல்என்றான். மூன்றாம் சிறுவன் நமது பிடியை எக்காரணங்கொண்டும் விட்டுவிடாதிருத்தல் என்று கூறினான்.