April

ஏப்ரல் 26

ஏப்ரல் 26

என் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக, எல்லாவற்றையும் நஷ்டமென்றுஎண்ணிக்கொண்டிருக்கிறேன். (பிலி.3:8).

ஒளிவிடுதல், அல்லதுபிரகாசித்தல் என்பது பெருஞ் செலவு பிடிக்கும் காரியம். ஒளியை உருவாக்கும் பொருள்கள்செலவாவதினாலேயே ஒளிவருதல் ஏற்படுகிறது. நெருப்பு ஏற்றப்படாத மெழுகுவர்த்தி ஒளிதருவதில்லை.ஒளிவருவதற்கு முன்னர் எரிதல் ஏற்படவேண்டும். நம்மைச் செலவிட்டேதான் நாம் பிறருக்குபயனுள்ளவர்களாயிருக்கக் கூடும். எரிதல் துன்பத்தைத் தரும். துன்பம், நோவு இவற்றைக் கண்டுநாம் அஞ்சி விலகுகிறோம்.

பொதுவாக, நாம் உலகிற்குநம்மாலான பெருஞ்சேவையை வலுவுடனும் பணியாற்றும் ஆற்றலுடனும் இருக்கும்பொழுதும், நமது மனமும்கரங்களும் அன்புச்சேவை செய்ய ஆயத்தமாயிருக்கும்பொழுதும், ஆற்றக்கூடியவர்களாயிருக்கிறோம்,என்று எண்ணுகிறோம்.

நாம் ஒதுக்கிவிட்டுவிடப்பட்டுத் துன்பம் அனுபவிக்கையிலும், நோயுற்றிருக்கையிலும், நோவுநிறைந்திருக்கையிலும், நமது செயலாற்றும் திறன் குன்றிப் போகையிலும், நாம்பயனற்றவர்களாகப்போய் யாதொரு நற்காரியமும் செய்ய இயலாதவர்கள் என்றுஎண்ணிக்கொள்கிறோம்.

நமது செயல்களையும்கடமைகளையும் திறமையாகச் செய்யும் நாட்களில் இருப்பதைவிட, நமது கஷ்டம், நோவுஅனுபவிக்கும் நாட்களில் உலகிற்கு அதிக ஆசீர்வாதத்தைத் தரும் மக்களாக நாம் இருக்கக்கூடும்.எப்பொழுதெனில், நாம் பணிவும் பொறுமையும் கொண்டிருக்கும் நாட்களில்தான். இது மிகவும்நிச்சயமான காரியம். இத் துன்பகாலத்தில் நாம் எரிந்து கொண்டிருக்கிறோம்.எரிவதனால்தான் நம்மால் ஒளிவிட்டுப் பிரகாசிக்க முடிகிறது.

இன்றையகடுந்தொழிலில்தான் நாளைய தினத்தின் மாட்சி வேர்கொண்டுள்ளது.

இடையூறு, துன்பம்ஏதுமின்றி பலர் மாட்சியுடன் விளங்கவேண்டும் என்ற எண்ணங்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குஎரிதல் இல்லாமல் பிரகாசம் வேண்டும். ஆனால், மகுடம் அணிதல் மாபெரும் இன்னல்கள்துன்பங்களுக்குப்பின்தான் வரும்.

வெப்பநாட்டில் வளரும் சோற்றுக்கத்தாழை
வெகுவிரைவில் வளர்வதே இல்லையே,
நூற்றாண்டுகாலம் மெதுமெதுவாகத்
தூறிலிருந்து வளர அதற்காகுமே.
காலம் நிறைவேறியபொழுதோ, அதில்
காணப்படுமே ஒரு பெரும் மலர் மொக்கு!
ஆயிரமாயிரம் மலர்கள் அதிலிருந்து
அழகழகாய் வெடித்து மலர்ந்திடும்.
மலர்களின் இராணியாம் இம்மரத்தை
மக்கள் கண்டு மகிழ்வார், அவ்விடத்தில்
மாண்புறு மலர்களுமங்கே தியாகம்
மாண்டே செய்திடல் வேண்டும், அறிந்திடு.

வெப்ப நாட்டின் சோற்றுக்கத்தாழைதான்
வேகமின்றி வளர்ந்திடும் அம்மரம்தான்.
மலர்ந்த, அம்மலர்க் கொத்தின் மலர்கள்,
மலர்ந்து, வாடி, வீழ்ந்து மடிந்திடுமே
வீழ்ந்த ஒவ்வோர் மலரும் விரைவில்
வீறிட்டெழுந்திடும் சிறுசெடியாக,
வறண்ட தாய்மரந்தன்னைச் சுற்றியவை
மாண்புடன் நூறாண்டு வளரத்துவங்கும்.
அன்னைமரம் மடிந்திட்டாலும், அங்கு
அதனைச் சுற்றி ஆயிரஞ்செடிகள் வளர
அம்மரம், மாண்டும் வளர்ச்சியுறும்
செம்மையாய்த் தன் சிறு கன்றுகளிலே.

பறவையினத்தில் பெலிகன் ஒரு பறவை
சிறப்பாயதனை அரபு நாட்டு மக்கள்
கிம்மல்-எல்-போ றென்றழைத்திடுவர்.
கிம்மல் என்றும் பாலையில் தனித்துவாழும்.
தன் சிறு குஞ்சுகளையது வளர்த்திடும்
தனிச் சிறப்பினை அறிந்திடுவாய் நீ.
தண்ணீரற்ற காலந்தன்னிலேயது
தன் உடலில் நீர் சுமந்து தந்திடும் குஞ்சுக்கு
கடலிலிருந்து மீன்பிடித்துக் கடுகி வந்திடும்.
கடும் பாலை கடந்து கடும்பஞ்சத்தில் அது தன்
நெஞ்சைப்பிளந்து, தன் குருதியைத் தானே
குஞ்சுக்கூட்டி வளர்த்திடு மென்பர்.

இதிலும் சிறந்தது உண்டு. ஒன்றுண்டு
இனிய வரலாறது, தூய்மை மெய்யானது,
இறையவர் இயேசு வந்து மாண்டாராயினும்
இன்றும் வாழ்கிறார் மாந்தர் தம் உள்ளங்களில்
அவர் விதைத்த விதை முளைத்துப் பயன்தரும்,
அவர் வைத்த விண்மீன்கள்போலப் பலப்பலவாய்.
அவர் சிந்தனை தந்திடும் மெய்வாழ்வை,
அவர் தம் அன்பின் வழிநாம் சென்றிடில்.
வாழ்வை நாம் இழந்திட அவர் வழிகாட்டினார்.
வாழ்வை நாம் பெற்றுமேல் வாழ்வடைய,
வாழ்வுதந்தவரின் சாவு, அது நம் ஆதாயம்.
வாழ்வு, கண்ணீர் நோவிலிருந்து விடுதலை தந்தது.