April

ஏப்ரல் 25

ஏப்ரல் 25

அங்கே மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராகஉட்கார்ந்திருந்தார்கள் (மத்.27:61).
கவலைஎதையும் கற்றுக்கொள்ளுவதில்லை. அது எதையும் அறிந்து கொள்வதுமில்லை. கற்றுக்கொள்ளுவதற்கோ, அறிந்துகொள்ளுவதற்கோ அதற்கு விருப்பமும் கிடையாது. அது எவ்வளவுவிசித்திரமான முட்டாள்தனம். துயரத்தில் ஆழ்ந்திருந்த அந்தச் சகோதரிகள், நமதுஆண்டவரின் கல்லறையின் வாயிலில் உட்கார்ந்தபொழுது, வெற்றிகரமாக இரண்டாயிரம் ஆண்டுகள்கடந்து சென்றுவிட்டதைக் கவனித்தீர்களா? எங்கள் கிறிஸ்து இறந்துவிட்டாரே! என்பதைத்தவிர அவர்களால் வேறு எதையும் காண முடியவில்லையே!

அவர்களது இழப்பிலிருந்துதான் உங்கள் கிறிஸ்துவும் எனது கிறிஸ்துவும் வெளிவந்தார். துயரத்தில் ஆழ்ந்திருக்கும்எண்ணிலடங்கா இதயங்கள், தங்கள் துயரங்களின் மத்தியில்தான், உயிர்மீண்டெழுதலைப்பெற்றுள்ளன. ஆனால், கவலைதோய்ந்து காத்திருந்த அச் சகோதரிகள், இவ்வுயிர் மீண்டும்எழுதலை உணராது, மாளும் அதன் விதை உருவையே கண்டனர். அவர்களால் வேறு ஒன்றையும்காணமுடியவில்லை. அவர்கள் வாழ்க்கையின் முடிவு எனக் கண்டது, வாழ்வின் முடி சூட்டலுக்கானமுதல் முயற்சியாகவே இருந்தது. தாம் பன்மடங்கு வலுவுடன் வாழ்வதற்கெனவே கிறிஸ்துநாதர்அமைதியாயிருந்தார்.

அவர்களால்அதைக் காணமுடிந்ததோ? இல்லை? அவர்கள் துக்கித்தனர், கண்ணீர் விட்டனர். பின்சென்றுவிட்டனர். ஆனாலும் மனது கேளாததால், மறுபடியும் கல்லறைக்குத் திரும்பி வந்தனர். அக்கல்லறை அவர்களுக்கு இன்னும் ஒரு வெறும் சவக்குளியாகத்தானிருந்தது. அதிலிருந்து எச்செய்தியும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. வெறும் கவர்ச்சியற்ற கல்லறையாகவே அதுஅவர்களுக்குக் காணப்பட்டது.

நமது நிலையும் இதுபோன்றதே. ஓவ்வொருவனும் தன் தோட்டத்திலுள்ள கல்லறையிலமர்ந்து, முதலாவது இதுஈடுசெய்ய இயலா இழப்பு. இதில் எவ்வகை இலாபத்தையும் நான் காணவில்லை. இதிலிருந்து எனக்குயாதொரு ஆறுதலும் கிட்டவில்லையே என்று அங்கலாய்க்கிறான். ஆயினும், நமது ஆழ்ந்த, கேடுநிறைந்த, எதிர்பாராத இடையூறுகளின் மையத்திலும் நமது இயேசு நாதர் உயிர்த்தெழுதலுக்காகக்காத்திருக்கிறார்.

எங்கெல்லாம் நமது மரணம் இருப்பதாகத் தோன்றுகிறதோ, அங்கெல்லாம் நமது மீட்பரும் இருக்கிறார்.நம்பிக்கையின் இறுதியில்தான் கனி தருதலின் ஒளிமயமான துவக்கமும் இருக்கும். அணையாப்பேரொளி, அந்தகாரத்தின் திண்மைமிகு பகுதியில்தான் ஆரம்பமாகும். இவ்வனுபவம் முழுமையாகநிறைவேறுகையில், நாம் நமது தோட்டத்தின் மையத்தில் அழகற்ற கல்லறையைக் காணமாட்டோம்.நமது மகிழ்சியினூடே துயரமும் இருந்தால், அம் மகிழ்ச்சி இன்னும் சிறப்பானதாகவேஆகுமன்றோ? ஆண்டவர் நமது துயரங்களைச் சுற்றிலும் வளரவிடும் மகிழ்ச்சியால் நமது துயரங்கள்ஒளியில் ஆழ்ந்துவிடுகின்றன. இம்மலர்கள் நாம் பறித்துப் பயன்படுத்தும் மலர்களல்ல. அவைஅன்பு, நம்பிக்கை, விசுவாசம், மகிழ்ச்சி, உள் அமைதி என்னும் இதயமலர்களாகும். இவைதுயரத்தில் ஆழ்ந்துள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ இதயத்தைச் சுற்றிலும் வளர்க்கப்பட்டுள்ளன.

கடுந்துயரப்பாதையிற் சென்றார்.
கர்த்தரேசு தம் ஓய்வினுக்கே
காணலாமோயிங்கு அருமலர்கள்?
கோணலாமிவ்வுலகிற்காசி கிட்டிடுமோ?

கடுந்துன்பங்களினின்றே மோட்சத்தின்
கவின் மலர்கள் மலர்ந்திடுமே
கொடுங் குருசிங்கு பணிவுடன் சுமப்போர்
கொண்டிடுவர் அரசராடை தன்னை