April

ஏப்ரல் 24

ஏப்ரல் 24

விசுவாசமானதுநம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி.11:1).

மெய்யான விசுவாசம், ஒருகடிதத்தை அஞ்சற் பெட்டியில் போட்டுவிட்டு, அதைக் குறித்த கவலையை விட்டுவிடுவது போலாகும்.நம்பிக்கையின்மை என்பது அக்கடிதத்தின் ஒரு மூலையைப் பிடித்துக்கொண்டே, அதற்குப் பதில்ஏன் வரவில்லை என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே இருப்பதுபோலாகும். பல வாரங்களாக என்மேஜையின்மீது சில கடிதங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. அவைகளின்மேல் உள்ளவிலாசங்கள் குறித்து சிறிது ஐயம் இருப்பதால், அவைகள் இன்னும் தபாலில்சேர்க்கப்படவில்லை. அக்கடிதங்களால் பிறருக்கோ, எனக்கோ யாதொரு பயனும்ஏற்படப்போவதில்லை. அஞ்சல்காரரிடத்தோ, அஞ்சல் இலாகாவிடத்தோ நான் நம்பிக்கைவைத்து, என் கரத்திலிருந்து அக்கடிதங்களைப்போ விட்டாலன்றி, அவைகளால் யாதொரு பயனும்நிகழப்போவதில்லை.

இதேபோன்றதுதான்மெய்விசுவாசத்தின் நிலையும், அது பணியை ஆண்டவரது கரங்களில் விட்டு விடுகிறது. அதன்பின்அவர் செயலாற்றுகிறார். 37ம் சங்கிதத்தில் 5ம் வசனம் இவ்வாறு கூறுகிறது. உன் வழிகளைக்கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு. அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.நாம் அவரிடம் ஒப்புவிக்குமட்டும் அவர் செயலாற்றமாட்டார் என்பதை அறிந்து கொள்.விசுவாசம் ஆண்டவர் நமக்குத் தரக் காத்திருக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுதல் அல்லதுஅதைவிட மேலாக, எடுத்துக்கொள்ளுதல் ஆகும். நாம் நம்பிவந்து ஒப்புவித்துக்காத்திருக்கலாம்.ஆனால், நாம் நிலைத்திருந்து எடுத்துக்கொள்ளும் நிலைமைக்கு வருமளவும் நமக்கு கிடைக்கும்ஆசீர்வாதங்களை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.

தன் மகனுடையநிலையைக்குறித்து மிகவும் கவலைகொண்டிருந்த முதியவரான ஒரு தாயார் இருந்தார். டாக்டர் பேசன்அவ்வம்மையாருக்குப் பின்வருமாறு எழுதினார். அம்மையே! உமது மகனைக்குறித்து அனாவசியமாகப்பெருங்கவலைக்குள்ளாகியிருக்கிறீர். நீர் செய்துள்ள பிரகாரம் அவனுக்காக விண்ணப்பம்செய்து, ஆண்டவரிடத்தில் அவனை ஒப்படைத்த பின்னர், அவனைக் குறித்து நீர்கவலைகொள்ளாதிருக்க வேண்டுமல்லவா? நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் (பிலி. 4:6)என்ற அறிவுரை அளவு குறிப்பிடாதது. அதேபோலத்தான், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல்வைத்துவிடுங்கள் (1.பேது.5:7) என்ற வசனமும், நமது பாரங்களை மற்றவர்கள்மேல்வைத்துவிட்டோமானால், அவை நம்மை அழுத்த முடியுமா? கிருபாசனத்திலிருந்து நாம் அவைகளைநம்முடன் எடுத்துச்சென்றால், அங்கு நாம் எதையும் விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது.என்னைப் பொறுத்தமட்டில், என் ஜெபங்களுக்குக் கீழ்க்கண்ட பரிசோதனையைச்செய்துகொள்வேன். அன்னாளைப்போல, நான் ஜெபித்து ஆண்டவரிடத்தில் எதையாகிலும்ஒப்படைத்துவிட்ட பின்னர், என் மனதில் சஞ்சலமோ, கவலையோ இல்லாதிருந்தால், நான்விசுவாசத்துடன் ஜெபித்தேன் என்று எடுத்துக்கொள்வேன். ஆனால் அதற்கு மாறாக, என் மனதில்அப் பாரம் மீண்டும் இருந்தால் அந்த விண்ணப்பத்தில் விசுவாசம் இல்லை என்று தெரிந்துகொள்வேன்.