April

ஏப்ரல் 21

ஏப்ரல் 21

தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லமையுள்ளவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி… (ரோ.4:21).

ஆபிரகாம் தன்னுடலைப் பார்த்து, அது சக்தியற்று செத்திருக்கிறது என்று இளக்கரித்துப் போகாமலிருந்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவன் தன்னையல்ல, சர்வவல்லவரையே நோக்கினான்.

அவன் வாக்குத்தத்தைப் பெற்று திடுக்கிடவில்லை. இத்தனை பெரிய ஆசீர்வாதமான பாரத்தின்கீழ் குனியாது நிமிர்ந்து நேரே நின்றான். அவன் பெலவீனமடையாமல் விசுவாசத்தில் பெருகிப் பலமடைந்தான். கஷ்டங்களை அவன் கண்டபோது தனது நிறைவினால் தேவனை மகிமைப்படுத்தினான். ஏனென்றால் வாக்குத்தத்தம் செய்தவர் பல வழிகளில் ஆச்சரியப்படும்படி செய்ய வல்லவர் என்று அறிந்திருந்தான்.

அளவில்லா வழி வகைகளையுடையவர் தேவன், குறைவு நம்மிடமேயிருக்கிறது. நாம் கேட்பதும் நினைப்பதும் கொஞ்சமே. நாம் வெகு குறைவாக எதிர்பார்க்கிறோம். நாம் நன்றாய் அறிந்து அதிகமாய் எதிர்பார்த்து, அதிகம் பெற்றுக் கௌ;ளவேண்டும் என்று நம்மை மேன்மைப்படுத்த அவர் பிரயத்தனம் செய்கிறார். மாட்சிமை பொருந்திய தேவனிடம் நாம் கேட்கக்கூடாததும், பெற்றுக்கொள்ளக்கூடாததும் ஒன்றுமில்லை. ஒரே அளவு மாத்திரம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது நம்மில் கிரியை செய்யும் சக்தியின்படியிருக்கும்.

திவ்விய வாக்குத்தத்தங்கள் என்ற ஏணியின் வழியாய் ஆசீர்வாதம் நிறைந்துள்ள பொக்கிஷசாலைக்கு ஏறிச் செல்லுங்கள். ஒரு வாக்குத்தத்தத்தைத் திறவுகோலாகக் கொண்டு கர்த்தருடைய கிரியை, தயவு என்ற ஆஸ்திகள் நிறைந்துள்ள அறையின் கதவைத் திறவுங்கள்.