April

ஏப்ரல் 6

ஏப்ரல் 6

நான் என் காவலிலே தரித்து அரணிலே நிலை கொண்டிருந்து, அவர் எனக்கு சொல்வாரென்றும்…. கவனித்துப் பார்ப்பேன் என்றேன் (ஆப.2:1).

கர்த்தர் உதவி செய்வார் என நம்பி எதிர்பார்திராது விட்டால், உண்மையில் நாம் அவருக்காகக் காத்திருக்கவில்லை. தேவனின் உதவியும் நமக்குக் கிட்டாது. அவரிடமிருந்து பலமும், பாதுகாப்பும் பெற, நாம் எப்போதாவது தவறினால், நாம் அதைப்பெற எதிர்பாத்துக் கொண்டிருக்கவில்லை என்பதே காரணம். நமக்கு இரட்சிப்பு வரும் என்று, அது வரும் முன் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக நின்று அது உட்பிரவேசிக்க நாம் நம் இதயக் கதவை விரிவாகத் திறந்து வைக்காததால், நமக்கென்று பரத்திலிருந்து அனுப்பப்பட்ட இரட்சிப்பு நம்மைக் கடந்து செல்கிறது. ஒருவனுடைய, எதிர்பார்த்தல், அவனை விழிப்பாக இருக்கச் செய்யாவிடில் அவனுக்கு ஒன்றும் கிடையாது. உன் ஜீவியத்தில் நடக்கும் காரியங்களில், நீ அவரைக் காணத் தரித்திரு.

தேவனின் செயலைக்காண எதிர்பார்க்கிறவர்களுக்கு, தேவனின் செயல் காத்திருக்க வேண்டியதில்லை என்கிறது ஒரு முதுமொழி. நாம் தெய்வச் செயலுக்காக எதிர்பார்திராதுவிட்டால், தெய்வச் செயல் நமக்காகக் காத்திராது என்று நாம் அதைத் திருப்பிச் சொல்லலாம். மழை பெய்யும்போது நாம் தண்ணீர்ப் பானைகளை வெளியே வைக்காவிட்டால், நாம் தண்ணீர் பிடிக்கமுடியாது.

வாக்குத்தத்தத்தைக்கொண்டு நாம் கெஞ்சும்போது, நாம் காரியம் சாதிப்பவர்களாகவும் இருக்க விரும்புகிறோம். ஒரு வங்கிக்குச் சென்ற ஒரு மனிதன் உள்ளே போவதும், வெளியே வருவதும் மேசையில் ஒரு கடிதத்தை வைப்பதும் அதைச் சும்மா வெளியே எடுப்பதுமாக பலமுறை செய்தால் சீக்கிரத்தில் அவனை வெளியே தள்ளு. உள்ளே வரவிடாதே என்ற உத்தரவு பிறக்கும். வேலை காரியமாக வங்கிக்கு வருகிறவர்கள் தங்கள் காசோலையை உள்ளே கொடுத்து, பணம் பெறும்வரை காத்திருந்து, பெற்ற பின்பு போவார்கள். வந்த காரியம் முடிக்குமுன் போகமாட்டார்கள்.

அவர்கள் காசோலையைக் கீழே வைத்துவிட்டு அதிலுள்ள அழகிய கையொப்பத்தைப்பற்றியோ, அப்பத்திரத்தின் மேன்மையைப்பற்றியோ பேசிக்கொண்டு நிற்கமாட்டார்கள். பணம் வாங்காவிடில் அவர்களுக்குத் திருப்தியில்லை. இப்படிப்பட்டவர்கள்தான் வங்கிக்கு வரவேண்டும். வீண் காலவிரயம் செய்பவர்கள் அங்கு வரக்கூடாது. வெகு ஜனங்கள் ஜெபம் பண்ணுவதை விளையாட்டாகக் கருதுகிறார்கள். தேவன் தங்களுக்குப் பதில் அளிப்பார் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆகையால் நாம் அவரோடு அந்நிதமானவர்களே. ஜெபத்தில் நாம் அவரோடுள்ள அந்நியோன்னியமாயிருக்கவேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.

உன் விருப்பம் வீண் போகாது.